Published:Updated:

எல்லையில் சுவர் எழுப்பவில்லை; பாகிஸ்தான் குழப்பத்தை உருவாக்குகிறது: இந்தியா மறுப்பு!

விகடன் விமர்சனக்குழு
எல்லையில் சுவர் எழுப்பவில்லை; பாகிஸ்தான் குழப்பத்தை உருவாக்குகிறது: இந்தியா மறுப்பு!
எல்லையில் சுவர் எழுப்பவில்லை; பாகிஸ்தான் குழப்பத்தை உருவாக்குகிறது: இந்தியா மறுப்பு!

ஜம்மு: "எல்லையில் சுவர் எழுப்புவது சாத்தியமே இல்லை. நாங்கள் எத்தகைய சுவரும் எழுப்பவில்லை. பாகிஸ்தான் குழப்பத்தை உருவாக்குவதற்காக இந்த கட்டுக்கதையை பரப்பி வருகிறது"என்று இந்திய எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. மறுப்பு தெரிவித்து உள்ளார்.

எல்லையில் சுவர் எழுப்பவில்லை; பாகிஸ்தான் குழப்பத்தை உருவாக்குகிறது: இந்தியா மறுப்பு!

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி, கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் விதாலி சுர்கினுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், 197 கி.மீ. நீள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், 10 மீட்டர் உயர, 135 அடி அகல சுவரை இந்தியா எழுப்பி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும், அந்த சுவரை சர்வதேச எல்லையாக மாற்ற இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராகேஷ் சர்மா ஜம்முவில் செய்தியாளர்களிட கூறும்போது, ''எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி, மிகவும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டது. அங்கு சுவர் எழுப்புவது சாத்தியமே இல்லை. நாங்கள் எத்தகைய சுவரும் எழுப்பவில்லை. பாகிஸ்தான் சொல்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. குழப்பதை உருவாக்குவதற்காக, இந்த கட்டுக்கதையை பாகிஸ்தான் பரப்பி வருகிறது.

சர்வதேச எல்லையில் ஏற்கனவே உள்ள வேலியை பழுது பார்த்து, தரம் உயர்த்தும் பணிதான் தற்போது நடந்து வருகிறது. சமீபத்திய வெள்ளத்தால், பல இடங்களில் வேலி அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. எனவே, வேலி பழுது பார்க்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு எல்லையில் இருதரப்பும் அமைதி காத்து வருகின்றன. இனிமேல் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்" என்று மறுப்பு தெரிவித்தார்.