Published:Updated:

லோக்பால் நிறைவேறாமலேயே மாநிலங்களவை ஒத்திவைப்பு

லோக்பால் நிறைவேறாமலேயே மாநிலங்களவை ஒத்திவைப்பு
லோக்பால் நிறைவேறாமலேயே மாநிலங்களவை ஒத்திவைப்பு
லோக்பால் நிறைவேறாமலேயே மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படமால், மாநிலங்களவை நள்ளிரவில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு போதுமான எண்ணிக்கை இல்லாதது, ஆளும் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால், லோக்பால் மசோதா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்த மசோதாவில் 187 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதால், அவற்றை பரிசீலிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, லோக்பால் மசோதா பலவீனமானது; கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று விவாதத்தின்போது பேசினார்.

இடதுசாரி கட்சிகள், சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சியினரும் மசோதாவுக்கு எதிராக பேசினர்.

லோக்பால் மசோதா மீது நேற்று நள்ளிரவு நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. விவாதம் நடைபெறும்போதே, மசோதாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில், பல்வேறு கட்சித்தலைவர்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

எனினும், வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான சூழல் இல்லாததால், மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படமால், மாநிலங்களவை நள்ளிரவில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.