Published:Updated:

லோக்பால்: மாநிலங்களவையில் பிஜேபி நோட்டீஸ்

புதுடெல்லி: கேள்வி நேரத்தை ரத்துசெய்துவிட்டு, லோக்‍பால் மசோதா குறித்து விவாதிக்‍க வலியுறுத்தி, மாநிலங்களவையில் பாரதிய ஜனதா இன்று நோட்டீஸ் தாக்‍கல் செய்துள்ளது.

மாநிலங்களவை எதிர்க்‍கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, இந்தத் தீர்மானத்தை மாநிலங்களையில் தாக்‍கல் செய்தார்.

இதேபோன்று குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதத்தின்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் மற்றும் தேசிய புலனாய்வு சட்டம் தொடர்பாக, முக்கிய திருத்தங்கள் கொண்டுவர பாரதிய ஜனதா முடிவெடுத்துள்ளது.

மக்‍களவையில், அக்‍கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கும், மாநிலங்களவையில்  வெங்கையா நாயுடுவும் விவாதத்தை தொடங்கிவைத்து பேசும்போது இந்த திருத்தங்களை தாக்கல் செய்ய உள்ளனர்.