Published:Updated:

"ஜி.எஸ்.டி பற்றிய சாதக பாதகங்கள் இவைதான்"! #Video

"ஜி.எஸ்.டி பற்றிய சாதக பாதகங்கள் இவைதான்"! #Video
"ஜி.எஸ்.டி பற்றிய சாதக பாதகங்கள் இவைதான்"! #Video

"ஜி.எஸ்.டி பற்றிய சாதக பாதகங்கள் இவைதான்"! #Video

ந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் இப்போது மிகப் பெரிய பிரச்னையாகப் பார்ப்பது, ஜி.எஸ்.டி எனப்படும் 'சரக்கு மற்றும் சேவை வரி'  கட்டணத்தைத்தான்.

'எல்லோருக்கும் ஒரே வரி' எனத் தொடங்கப்பட்ட திட்டம், அதிகப்படியாக பாதிப்பதென்னவோ நடுத்தர மக்களைத்தான். எந்தப் பொருள் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், அதிகப்படியான வரி வசூலிக்கப்படுவதால், அதனை வாங்க மக்கள் சற்றுத் தயங்கும் நிலை ஏற்படுகிறது. இந்தியாவை 'டிஜிட்டல் இந்தியா'வாக மாற்றுவேன் என மோடி கூறினார். ஆனால், இப்போது, மொபைல் போன், லேப்டாப் என அனைத்து எலக்ட்ரானிக் பொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருளான அரிசிக்கு வரிவிதித்த மத்திய அரசு, மதுவுக்கு எந்த ஒரு வரியும் விதிக்கவில்லை! 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது, 'இந்தியாவில் உள்ள கறுப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்படும்' என்று பிரதமர் மோடி கூறினார். இப்போது ஜி.எஸ்.டி அறிவித்தபோதும், 'கறுப்புப் பணம் முற்றிலும் ஒழியும்' என்று கூறியுள்ளார். எந்த ஒரு புதிய திட்டம் அறிவிக்கும்போதும் கறுப்புப் பணம் ஒழியும் என்று சொல்கிறார். இப்போது வரை இந்தியாவில் எத்தனை கோடி கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டுள்ளது என்ற அதிகார பூர்வமான எந்தப் புள்ளி விவரமும் இதுவரை வெளியாகவில்லை. 

குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது ஜி.எஸ்.டி-யை கடுமையாக எதிர்த்த மோடியே, இப்போது அதைத் தீவிரமாக அமல்படுத்தக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்...

அடுத்த கட்டுரைக்கு