Published:Updated:

உளறல்கள் தொடர்கதை... - தமிழக அமைச்சர்களின் தாறுமாறு தர்பார்!

ஆட்சி முடிந்து அ.தி.மு.க-வுக்கு அஸ்தமனம் ஏற்பட்டால், பா.ஜ.க-வுக்குப் படையெடுக்கும் பிரமுகர்களில் முதலிடத்தில் இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜிதான்

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

'மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு தடவை நிரூபித்துக்கொண்டே இருக்கிறாயே' - இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் வடிவேலு சொல்லும் வசனம். நம் அமைச்சரவையில் சில அமைச்சர்களின் பேச்சு வடிவேலுவின் நகைச்சுவைக்கே சவால் விடும்! செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி எனத் தென்மாவட்ட மந்திரிகள்தான் அதில் டாப். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2oOo9j0

* ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது "அம்மா இட்லி சாப்பிட்டார்; அமைச்சர்களிடம் பேசினார்'' எனப் பொய்களைக் கொட்டினார்கள் அமைச்சர்கள். ஜெயலலிதா இறந்தபிறகு, "நாங்கள் ஏற்கெனவே சொன்னதெல்லாம் பொய். மருத்துவமனையில் அம்மாவை சசிகலா குடும்பம் பார்க்க விடவில்லை" என திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்தார். அப்போலோவில் நடந்த அத்தனை அக்கப்போர்களின் உச்சம் இது.

அவரின் காலில் விழுந்து கிடந்த ராஜேந்திர பாலாஜி, இப்போது "நாம யாருக்கும் பயப்படத் தேவையில்ல, ட்ரம்ப்பே வந்தாலும் சரி. நமக்கு மோடி இருக்கிறார்'' என ஜாகையை மாற்றுகிறார்.

ஜெயலலிதா காலத்தில் சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தங்கள் துறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பப் போகும் கேள்விகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்ல வேண்டும் என ஒரு வாரத்துக்கு மேல் ஹோம் ஒர்க் செய்வார்கள் மந்திரிகள். காரணம் அசிங்கப்பட்டு விடக்கூடாது என்கிற அச்சம் மட்டுமல்ல, பதவி நிலைக்க வேண்டும் என்கிற பயமும்தான். ஆனால், இன்றைக்கு மேடையில் தன்னோடு அமர்ந்திருந்தவரின் பெயரைக்கூடத் தெரியாமல், ''ஏம்மா, நீங்க பரதநாட்டியம்தானே?" என சுதா ரகுநாதனிடமே சீனிவாசன் கேட்டபோது ''பாடகி'' என்று சங்கடத்துடன் பதில் சொன்னார் சுதா ரகுநாதன். ஆனால், அசிங்கப்பட்டாலும் சிரித்தபடியே பேசினார் சீனிவாசன்.

* ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் உலர்ந்து போயிருந்த மந்திரிகளின் உதடுகள் திறக்க ஆரம்பித்தன. அப்போது முதலில் திறந்தது செல்லூராரின் உதடுதான். ஜெயலலிதா இருந்தபோது பால்காவடி, பன்னீர்க்காவடி என அதிரிபுதிரி விஷயங்களை அரங்கேற்றிப் பலரின் கவனத்தை ஈர்த்த செல்லூர் ராஜு, அரசு விழாக்களில் அளந்துதான் பேசுவார். ஜெயலலிதா இறந்த பிறகு சுதந்திரப் பறவை ஆனார். 'மங்குனி மந்திரி'க்கு முதன்முதலில் பொழிப்புரை கொடுத்தவர் செல்லூர் ராஜுதான். தெர்மாகோலையே அரசியலுக்கு நெம்புகோலாக மாற்றினார். அமைச்சர் என்கிற அந்தஸ்தைத் தாண்டி, "ராஜிவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் உயிரோடு இருப்பது அம்மா போட்ட பிச்சை'' என அவரது நாக்கு நாகரிகமில்லாமல் சுழன்றது.

* ஆட்சி முடிந்து அ.தி.மு.க-வுக்கு அஸ்தமனம் ஏற்பட்டால், பா.ஜ.க-வுக்குப் படையெடுக்கும் பிரமுகர்களில் முதலிடத்தில் இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜிதான். அந்த அளவுக்கு பா.ஜ.க-வின் துதிபாடியாக இருக்கிறார். பிரதமர் மோடியே வீடு தேடி வந்து தன்னைப் பார்க்கும் இடத்தில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவரின் காலில் விழுந்து கிடந்த ராஜேந்திர பாலாஜி, இப்போது "நாம யாருக்கும் பயப்படத் தேவையில்ல, ட்ரம்ப்பே வந்தாலும் சரி. நமக்கு மோடி இருக்கிறார்'' என ஜாகையை மாற்றுகிறார். ராகுல்காந்தியை அரசியல்ரீதியாக விமர்சிப்பதை விட்டுவிட்டு, 'இந்தியாவின் வித்து மோடிதான். ராகுல்காந்தி தாய்மாமன் மடியில் உட்கார்ந்து காதுகுத்தினாரா?' என்று காமெடி பண்ணிக் கலவரத்தைக் கூட்டுகிறார். சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் குறித்து ராஜேந்திர பாலாஜி பேசியது அநாகரிகத்தின் உச்சம்.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

* 'நடிகை சுஹாசினி மணிரத்னம்' என்பதற்குப் பதிலாக, 'சுஹாசினி மணிவாசகம்' என மாற்றிப் பேசினார் செங்கோட்டையன். "காவிரி நீர் என் பாக்கெட்டிலா இருக்கு அல்லது என் வீட்டுக் குழாயிலா இருக்கு. போனவுடன் தண்ணி திறந்துவிடுவதற்கு'' என்று அலட்சியமாகக் கேட்கிறார் அமைச்சர் துரைக்கண்ணு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாடகி சுதா ரகுநாதனை 'சுதா ரங்குநாதன்' என்றனர். கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்கிறார், முதல்வர் எடப்பாடி.

அமைச்சர்களின் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுகள் முடிவே பெறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜெயலலிதா இருந்தவரை, பத்திரிகையாளர்களைக் கண்டால் ஓட்டம் எடுத்த மந்திரிகள், தொலைக்காட்சி மைக்குகளைக் கண்டதும் குதூகலிக்கிறார்கள். இது ஆரோக்கியம் என எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஆர்வக் கோளாறில், பொது இடங்களில் உளறுவதும் அதிகரித்துள்ளது.

- இவை வெறும் டீசர்கள்தான். ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள மெயின் பிக்சர் கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > உள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்... https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-ministers-recent-activities-round-up

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |