Published:Updated:

ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கடற்படை தடை விதித்ததன் பின்னணி இதுதான்!

கடற்படை தளங்கள், கப்பல் கட்டும் தளங்கள் போர்க் கப்பல்களில் செல்போன் பயன்படுத்த தடை.

கடற்படையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை
கடற்படையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்தியக் கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, ஸ்மார்ட்போன் பயன்படுத்த இந்தியக் கடற்படை தடைவிதித்துள்ளது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கடற்படை தடை விதித்ததன்  பின்னணி இதுதான்!

அண்மையில் வெளிநாடுகளுக்கு உளவுபார்த்து ராணுவ ரகசியங்களை விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த அடிப்படையில் கடற்படையில் பணியாற்றிய 7 பேர் பாகிஸ்தானுக்கு உளவுபார்த்து, இந்தியப் பாதுகாப்பு ரகசியங்களைப் பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆந்திர போலீஸாருடன், தேசிய புலனாய்வு அதிகாரிகள் இணைந்து மும்பையில் அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹவாலா புரோக்கர்கள் மூலமாக, தேசிய பாதுகாப்பு ரகசியங்களை விற்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், இந்தியப் போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் விசாகப்பட்டினம் மற்றும் கார்வார் பகுதிகள் வழியாக அவர்கள் கசிய விட்டதும் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கடற்படை தடை விதித்ததன்  பின்னணி இதுதான்!

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இந்தியக் கடற்படை சில முக்கியக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. அதில் ஒரு பகுதியாக ஸ்மார்ட்போனை, கடற்படை அதிகாரிகள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு உளவுபார்த்து வருவது உறுதியானதையடுத்து இந்தக் கட்டுப்பாட்டைக் கடற்படை விதித்துள்ளது. குறிப்பாக கடற்படை தளங்கள், கப்பல் கட்டும் தளங்கள் போர்க் கப்பல்களில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.