Published:Updated:

முப்படைத் தளபதி நியமனம்: மத்திய அரசு முடிவு மிகவும் ஆபத்தானதா?

பிபின் ராவத்
பிபின் ராவத்

ராணுவத்தை எல்லைப்புறப் போர் சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல், உள்நாட்டுப் பிரச்னைகளிலும் அதிகளவில் ஈடுபடுத்துவதன் காரணமாகத்தான் ராணுவமும் அரசியலில் ஆர்வம்காட்டுவது அதிகரித்து வருகிறது.

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஓய்வுபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பாக, குடியேற்ற சட்டவிதித் திருத்தங்கள் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். “பல்கலைக்கழக மாணவர்கள், நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களை வழிநடத்தும் தலைவர்களிடம் தலைமைப் பண்பு இல்லை” என்பதே அந்தக் கருத்து. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப்படைத் துறையினர் அரசியல்ரீதியான கருத்துகளைத் தெரிவிக்கலாமா என்கிற விவாதம் பொதுவெளிகளில் எழுந்துள்ளது. ராணுவத் தளபதியின்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் உயர்ந்தன.

முப்படைகளில் உயர்மட்ட தலைவராக குடியரசுத் தலைவர் நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பதவிக்கான பொறுப்பு ஒரு சம்பிரதாய கடமையாக மட்டுமே இருக்கும். குடியரசு தின விழாவின்போது முப்படைகள் அளிக்கும் மரியாதையை அவர் ஏற்றுக்கொள்வதுடன், அவருக்கு வேறு எந்தச் சிறப்பு அதிகாரமும் இல்லை. குடியரசுத் தலைவர் நேரடியாக எந்தவித உத்தரவையும் ஆயுதப்படைகளுக்கு விதிக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் பிரிவு 74-ன்படி மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும். பாதுகாப்புப் படைகளின் நிர்வாகம், பாதுகாப்பு அமைச்சரின் நேரடிப் பார்வையிலும் மத்திய அமைச்சரவையின் கட்டுப்பாட்டிலும் மட்டுமே இருக்கும். முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/36ok5a5

அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இன்னும் சிவில் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில்தான் அதிகாரம் உள்ளது. இதை கேள்விக்குறியாக்கும் விதமாகத்தான் முப்படைகளுக்கும் ஒரே தலைமை தேவை என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஆனால், மாநிலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர் இழப்புகள், சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், இனக்கலவரங்கள் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தின் உதவியை மாநில அரசுகள் நாடுவதுண்டு. இருப்பினும் ராணுவ வீரர்கள் தங்கள் மனம்போல் செயல்பட முடியாது. இதற்கு விதிவிலக்காக இன்று வடகிழக்கு மாநிலங்களில் ராணுவப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் நேரடியாக ராணுவம் அங்குள்ள நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிட முடியும். உள்ளூர் போலீஸ் படையையும் மீறி அவர்களுக்கு காவல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ராணுவம் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்ய முடியும். பிரிக்கப்படாத காஷ்மீர் மாநிலத்தில் உள்ளுர் போலீஸின் எண்ணிக்கை 65,000 என்றால் ராணுவத்தின் எண்ணிக்கை 12 லட்சம்!

ராணுவத்தை எல்லைப்புறப் போர் சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல், உள்நாட்டுப் பிரச்னைகளிலும் அதிகளவில் ஈடுபடுத்துவதன் காரணமாகத்தான் ராணுவமும் அரசியலில் ஆர்வம்காட்டுவது அதிகரித்து வருகிறது. அதன் விளைவாகத்தான் ஏற்கெனவே ராணுவத் தளபதியாக இருந்த வி.கே.சிங் பா.ஜ.க-வில் சேர்ந்து மத்திய அமைச்சராகவும் ஆகிவிட்டார். அவர் ராணுவத் தளபதியாக இருக்கும்போதே ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் மாநாட்டில் பா.ஜ.க தலைவர்களையும் பேசவைத்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் ராணுவத்துக்கு நாடாளுமன்றத்திலேயே பிரதிநிதித்துவம் உண்டு. அங்கு ராணுவத் தளபதிகளின் முடிவை மீறி சிவில் அரசு செயல்பட முடியாது. பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டு அங்கு ராணுவ ஆட்சியை ஏற்படுத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் முஷாரப்புக்கு சமீபத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பையே அங்கு உள்ள ராணுவத் தளபதி பகிரங்கமாக விமர்சனம் செய்தது சர்ச்சைக்குள்ளானது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஜ்ஜத் அலி ஷா எழுதியுள்ள தன் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். 'உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் முக்கியமான ஒரு வழக்கை விசாரிக்க, வெளியூரிலிருந்து ஒரு நீதிபதி விமானத்தில் கிளம்புகிறார். அந்த விமானத்தையே வேறொரு நகரில் தரையிறக்கி, வழக்கே நடைபெறாமல் தடுத்து நிறுத்தியது ராணுவம்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைத் தளபதி நியமனம்: மத்திய அரசு முடிவு மிகவும் ஆபத்தானதா?

பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசைக் கலைத்து அங்கு ராணுவ ஆட்சி ஏற்பட்டபோதெல்லாம் நீதிபதிகளும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு மீண்டும் பதவி வேண்டுமென்றால் 'ராணுவ ஆட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வேன்' என்று சொல்லிய பிறகே புதிய பதவிப்பிரமாணம் செய்துகொள்ள முடியும்.

அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இன்னும் சிவில் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில்தான் அதிகாரம் உள்ளது. இதை கேள்விக்குறியாக்கும் விதமாகத்தான் முப்படைகளுக்கும் ஒரே தலைமை தேவை என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது மிகவும் ஆபத்தான செயலாகும். இதற்காக எந்தவிதமான பொதுவிவாதங்களும் நடத்தப்படவில்லை. திடீரென ராணுவத் தளபதிகளின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற வேண்டிய பிபின் ராவத் முப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பே அவர் அரசியல் விஷயத்தைப் பற்றி பொதுக்கருத்தைத் தெரிவித்ததன்மூலம் ராணுவ விதிகளின் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று நாம் கூறுகிறோம். ஆனால், சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் போராட்டங்களை விமர்சித்ததன்மூலம் தனக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பதவிக்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டார் என்று சொன்னால் மிகையாகாது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுக் கட்டடங்களுக்கு காவி பூசியதுடன், தென்கோடி இந்தியாவில் திருவள்ளுவருக்கும் காவி பூசி மகிழ்ந்த பா.ஜ.க., இன்றைக்கு ராணுவத்தின் ஆலிவ் பச்சை சீருடைக்கும் காவி பூசத் துணிந்துவிட்டது என்பதையே இந்த முயற்சி தெளிவுபடுத்துகிறது.

- இந்தியாவில் ராணுவத்துக்கு சட்டரீதியான வரைமுறைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அதுகுறித்த தகவல்களுடன், ஜூனியர் விகடன் இதழில் சென்னை உயர் நீதிமன்றம் மேனாள் நீதிபதி கே.சந்துரு எழுதிய சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > முப்படைத் தளபதி நியமனம்... ராணுவ உடைக்கும் காவி பூசப்படுகிறதா? https://www.vikatan.com/government-and-politics/politics/bipin-rawat-appointed-as-chief-of-defence-staff

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு