Published:Updated:

இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்கள் புறம் தள்ளப்படுகிறார்களா? - பி.ஜே.பி-யின் `மாயை' லாஜிக்!

#CAA
#CAA

அதன்பிறகு கடந்தகாலங்களில் அங்கே நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் மறுபடியும் அவர்களது தாய்நாட்டுக்கே சென்று வாழவேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசியபோது, "1955-ல் கொண்டுவரப்பட்ட 'குடியுரிமைச் சட்ட'த்தில் குறிப்பிட்ட சில ஷரத்துகளில் மட்டும்தான் இப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டு இஸ்லாமியர்களை இந்த அரசு புறம் தள்ளுவதுபோல் ஒரு மாயையை எதிர்க்கட்சியினர் உருவாக்கிவருகிறார்கள். இப்போதும்கூட வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய கிறிஸ்தவரோ அல்லது பாகிஸ் தானிலிருந்து வரக்கூடிய இஸ்லாமியரோ 1955-ம் ஆண்டுக் குடியுரிமைச் சட்டப்படி இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் உரிமை அப்படியேதான் தொடர்கிறது என்பதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2txUnBH

இஸ்லாம் அல்லாத மதங்களைச் சார்ந்த அகதிகளை, இந்தியக் குடிமக்களாக அங்கீகரிப்பதில் 11 ஆண்டுக்காலம் என்றிருந்த இடைவெளியை 5 ஆண்டுகளாகக் குறைத்துச் சட்டத்திருத்தம் செய்திருப்பதுதான் இந்தச் சட்டம்.

பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள அஹமதியா முஸ்லிம்கள் எனப்படுபவர்கள் முஸ்லிம்களிலேயே ஒரு பகுதியினர். இவர்கள் ஏற்கெனவே இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள். ஆனாலும் அங்கே உரிய அங்கீகாரம் அளிக்கப்படாமல் வசித்துக்கொண்டிருப்பவர்கள். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத் திலேயே, 'இங்கிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளவர்களுக்கு அங்கே உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட்டால், மறுபடியும் இந்தியாவுக்கு வந்துவிடலாம்' என்று கூறி இரண்டு ஆண்டுக்காலம் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 'எங்களுக்கு மதம்தான் முக்கியம், நாங்கள் இந்தியா திரும்பமாட்டோம்' என்று கூறிப் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டவர்கள்தான் இந்த அஹமதியா முஸ்லிம்கள். எனவே, இந்தச் சட்டத்திருத்த மசோதா அவர்களுக்குப் பொருந்தாது.

இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்கள் புறம் தள்ளப்படுகிறார்களா? - பி.ஜே.பி-யின் `மாயை' லாஜிக்!

அடுத்ததாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மர் நாட்டிலிருந்து வந்தவர்கள். ஆனால், இப்போதைய சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மியான்மர் இடம்பெறவில்லை. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சட்டவிரோதமாக இங்கே வந்து குடியேறியிருப்பவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதென்பது, அவர்கள் வந்த பிரச்னையின் பின்னணி மற்றும் அந்தந்த நாடுகளோடு இந்தியாவுக்கு உள்ள வெளியுறவு எனப் பல்வேறு விஷயங்களையும் பொறுத்ததாக இருக்கிறது.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், ஏற்கெனவே சிறிமாவோ பண்டாரநாயகா ஆட்சிக்காலத்திலேயே, ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. அதன்படி இலங்கையிலிருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு உரிய குடியுரிமை அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன்பிறகு கடந்தகாலங்களில் அங்கே நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் மறுபடியும் அவர்களது தாய்நாட்டுக்கே சென்று வாழவேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. ஏனெனில், பாகிஸ்தானிலோ அல்லது வங்க தேசத்திலோ உள்ள சிறுபான்மை மக்கள் என்பவர்கள் தங்களுடைய தனி அடையாளத்துக்காகவோ அல்லது தனி நாடு கோரியோ அங்கே போராடவில்லை.

இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்கள் புறம் தள்ளப்படுகிறார்களா? - பி.ஜே.பி-யின் `மாயை' லாஜிக்!

தாங்கள் சார்ந்திருந்த மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையையும் அடையாளத்தையும் மட்டுமே அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இலங்கைப் பிரச்னை என்பது அப்படிப்பட்டதல்ல. அங்கு தனி நாடு கோரிக்கை இருந்தது. அதற்கென்று அரசியல் வாய்ப்பும் அங்கிருந்தது. எனவே, அந்த மக்களை மீண்டும் இலங்கையிலேயே குடியமர்த்தி சம உரிமையோடு அவர்களை அங்கே வாழவைக்க வேண்டும்' என்றே மத்திய அரசு நினைக்கிறது. அதற்கான முயற்சியாகத்தான் இலங்கையிலே ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை இந்தியா சார்பில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அவர்கள் தொழில் செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், இங்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிவிட்டால், மீண்டும் அவர்கள் இலங்கைக்குச் செல்லமுடியாது. இலங்கையில் தமிழர்களுக்குண்டான உரிமைகள் அனைத்தும் கைவிட்டுப்போய், முழு இலங்கையும் சிங்களவரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே போய்விடும். எனவே இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தாது'' என்கிறார் வானதி சீனிவாசன்.

- 'பிரித்தாளும் சூழ்ச்சி' என்பது பிரிட்டிஷ்காரர்கள் கடைப்பிடித்தது. இப்போது பி.ஜே.பி அரசு கடைப்பிடிக்கிறது. 'முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும்தானே பிரச்னை' என்று அமைதியாக இருந்துவிட்டால், அடையாளங்களைப் பயன்படுத்திப் புறக்கணிக்கும், வேட்டையாடும் அபாயம் நாளை நம்மையும் நெருங்கக்கூடும். இதற்கெதிரான குரல்களை ஓங்கி ஒலிப்பது ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களின் கடமை... ஏனெனில் > ஆனந்த விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > இந்தியாவைக் கூறுபோடும் குடியுரிமை திருத்தச் சட்டம்! https://www.vikatan.com/government-and-politics/politics/why-the-citizenship-amendment-act-is-dangerous

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு