Election bannerElection banner
Published:Updated:

அரியர் தேர்வு `ஆல் பாஸ்’: அங்கீகாரம் உண்டா? - எச்சரிக்கும் கல்வியாளர்கள்; கலங்கும் மாணவர்கள்

அரியர் தேர்வு மாணவர்கள் நிலை
அரியர் தேர்வு மாணவர்கள் நிலை

``10, 12 அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கூட தேர்வே எழுதாமல், பட்டப்படிப்பு சான்றிதழைப் பெற்றுவிடுவார் என்றால், அவரது மேற்படிப்புகளிலோ அல்லது வேலைவாய்ப்புகளிலோ எந்த அளவுக்கு இந்தச் சான்றிதழ் உபயோகமானதாக இருக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்'' என்கிறார் கல்வியாளர்.

`அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அரியர் மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என அடுத்தகட்ட முயற்சிகளில் இருந்துவந்த அரியர் மாணவர்கள், `மறுபடியும் அரியர் தேர்வுகளைக் கட்டாயம் எழுதித் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டுமா...' என்று விழி பிதுங்கி நிற்கின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, கல்வியகங்களில் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்த முடியாத சூழல் நிலவிவந்தது. எனவே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு 'ஆல் பாஸ்' திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில், 'அரியர் தேர்வு' எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்குக் கூடுதல் அதிர்ஷ்டம் அடித்தது. அதாவது, ஏற்கெனவே முந்தைய கல்வி ஆண்டுகளில் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமலிருந்து, மீண்டும் 'அரியர் தேர்வு' எழுதித் தேர்ச்சி பெற விண்ணப்பித்திருந்த மாணவர்கள், 'அரியர் தேர்வு எழுதத் தேவையில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தை முன்னிட்டு அவர்களது அரியர்கள் ஆல் பாஸ் முறையில் க்ளியர் செய்யப்படுவதாக' தமிழ்நாடு அரசு அறிவித்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி' என்ற இந்த அறிவிப்பு அரியர் மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கொண்டாடித் தீர்த்தனர். அதேசமயம், கல்வியாளர்களோ `தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்து திட்டம், எதிர்கால கல்விச் சூழலையே மிகப்பெரிய அளவில் பாதிக்கும். தேர்தல் அரசியலைக் கருத்தில்கொண்டு, உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட மிக மோசமான அறிவிப்பு இது' என்று அ.தி.மு.க தலைமையிலான அரசைக் கண்டித்தனர்.

மேலும் இது குறித்து உயர் நீதிமன்றத்திலும் அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. பரபரப்பான இந்த வழக்கு விசாரணையின்போது, `கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல், ஏதேனும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும்' என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சென்னை: சிறைத்துறை அதிகாரி தொல்லை; நீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற கைதி! - பிளேடு கிடைத்தது எப்படி?

இதையடுத்து 'அரியர் தேர்வு ரத்து' குறித்தான செய்திகள் மீண்டும் தடதடத்துவரும் சூழலில், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் இது குறித்துக் கருத்து கேட்டோம்... ``கொரோனா காலகட்டத்தில், ஆன்லைன் வழியே தேர்வுகளை நடத்த முடியும் என்கிறபோது, தேர்வே நடத்தாமல், `அனைவரும் தேர்ச்சி' என்று அறிவித்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

10, 12 அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கூட தேர்வே எழுதாமல், பட்டப்படிப்பு சான்றிதழைப் பெற்றுவிடுவார் என்றால், அடுத்தகட்டமாக அவரது மேற்படிப்புகளிலோ அல்லது வேலைவாய்ப்புகளிலோ எந்த அளவுக்கு இந்தச் சான்றிதழ் உபயோகமானதாக இருக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆனாலும் நேற்றையதினம்கூட சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தேர்வு
தேர்வு

இவர்களில் பலரும் `அரியர் தேர்வு ரத்து' திட்டத்தில் ஜஸ்ட் பாஸ் பெற்று தேர்ச்சியானவர்கள்தான். இவர்களுக்கு அரசு சார்ந்த நிறுவனங்களில் வேண்டுமானால், அங்கீகாரம் கிடைக்கலாம். ஆனால், நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனங்களிலோ அல்லது வேலைவாய்ப்புகளிலோ எந்தவிதமான அங்கீகாரம் கிடைக்கப்பெறும் என்று சொல்ல முடியவில்லை. ஏனெனில், `குறிப்பிட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தவர்கள், பட்ட மேற்படிப்புகளுக்குத் தகுதியானவர்கள் இல்லை' என்றெல்லாம் கடந்த காலங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

எனவே, தற்போது அரியர் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்கள் பின்னாளில் ஆன்லைன் வழியே இதே அரியர்களை எழுதித் தேர்ச்சி பெறும்விதத்தில் புதிதாக அறிவிப்புகளைக் கொண்டுவர வேண்டும்.

ஞானவாபி மசூதி பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் இருந்ததா?! -  தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் வழியில் தேர்வு நடத்துவது பாதுகாப்பானது மட்டுமன்றி, மாணவர்கள் காப்பியடித்து எழுதாமல் தடுக்கவும் வழிவகை செய்கிறது. எப்படியெனில், தேர்வு எழுதும் மாணவர்களின் கண்மணி அசைந்தால்கூட அதைக் கண்காணித்து அலர்ட் செய்துவிடும் அளவுக்கு இன்றைய செயற்கை நுண்ணறிவுத்திறன் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்டன. இந்த வசதிகளைக்கொண்டு ஜி.ஆர்.இ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

எனவே, இந்தத் தேர்வுகளையும்கூட மூன்று மணி நேரம் என்பதை ஒன்றரை மணி நேரமாக சுருக்கிக்கொள்ளலாம். பாடங்களின் அளவுகளைக் குறைத்துத் தேர்வுகளை நடத்தலாம். ஆனால், தேர்வே கிடையாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இதைத்தான் பல்கலைக்கழக மானியக்குழுவும் (யு.ஜி.சி) நீதிமன்றமும் அறிவுறுத்தியிருக்கின்றன'' என்கிறார் விளக்கமாக.

ஜெயப்பிரகாஷ் காந்தி - பாலமுருகன்
ஜெயப்பிரகாஷ் காந்தி - பாலமுருகன்

`பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்' பாலமுருகன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``ஊரடங்கு அமலில் இருந்துவரும் இந்தக் காலகட்டத்தில், மாணவர்களுக்கான தேர்வுகளை நேரடியாக நடத்த முடியாது. எனவே ஆன்லைனில் நடத்துகிறார்கள். ஆனால், நேரடியாக தேர்வெழுதும்போதே காப்பியடித்து எழுதுகிற சூழல் இருக்கும்போது, ஆன்லைனில் தேர்வு நடத்துவது என்பது வெறுமனே கண்துடைப்பாகத்தான் இருக்கும்.

மறுபடியும் இப்போது ஊரடங்கு அறிவிப்பு வந்துவிட்டது. இனி, அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தினாலும்கூட அது எந்த அளவுக்கு நேர்மையானதாக இருக்கும்? 'தேர்வு நடத்தியே ஆக வேண்டும்' என்ற ஆவணத்துக்காக வேண்டுமானால் இப்படி ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம். ஹோம் வொர்க் செய்ததுபோல, சப்ஜெக்ட் தொடர்பாக மாணவர்கள் ஏதோ எழுதினார்கள் என்று வேண்டுமானால், இதை சொல்லிக்கொள்ளலாம். ஆனால், இதைவிட்டால் வேறு வழியும் இல்லை!'' என்கிறார் யதார்த்தமாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு