Published:Updated:

வங்கிக் கடன்களும்... கொண்டைக் கடலையும்... ரூ.20 லட்சம் கோடி யாருக்கு?

வங்கிக் கடன்
வங்கிக் கடன்

அரசாங்கம் கொடுக்கும் கடன் உத்தரவாதம் எதுவுமே 100 சதவிகிதம் அளவுக்குக் கிடையாது. சில கடன்களுக்கு 50 சதவிகிதம், சில கடன்களுக்கு 75 சதவிகிதம், சில கடன்களுக்கு 85 சதவிகிதம் என்ற அளவில்தான் உள்ளது.

'குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு, மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அடமானம் இல்லாமல் கூடுதல் வங்கிக்கடன் வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு, ஓராண்டு காலத்துக்கு விலக்கும் அளிக்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது, இந்த அறிவிப்பு ஆக்கபூர்வமானதாகவே தெரி கிறது. ஆனால், "மொத்த சுமையையும் வங்கிகள்மேல் சுமத்திவிட்டு, மத்திய அரசு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது" என்கிறார்கள் வங்கித் துறையைச் சார்ந்தவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அகில இந்திய பொதுத்துறை வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோ, "அரசாங்கம் கொடுக்கும் கடன் உத்தரவாதம் எதுவுமே 100 சதவிகிதம் அளவுக்குக் கிடையாது. சில கடன்களுக்கு 50 சதவிகிதம், சில கடன்களுக்கு 75 சதவிகிதம், சில கடன்களுக்கு 85 சதவிகிதம் என்ற அளவில்தான் உள்ளது. ஒரு வருடக் காலத்துக்கு கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தா விட்டால், கிரெடிட் கேரன்டி கார்ப்ப ரேஷனிலிருந்து உத்தரவாதம் கிடைக்காது.

வங்கிக் கடன்
வங்கிக் கடன்

இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது, வங்கிகள் எளிதில் கடன் கொடுக்க முடியாது. வங்கிக்கடன் நல்ல முறையில் கொடுக்கப்பட வேண்டுமென்றால், வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அடுத்து, அவர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நிதியமைச்சரின் அறிவிப்பில் குறுந்தொழில்களுக்கான வரம்பை 25 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறார். இதனால், கடன் கொடுப்பவர்களின் கவனம் பெரிய தொகையிலான கடனை நோக்கியே இருக்கும். சிறு கடன்கள் கிடைப்பது கடினம். இந்த விஷயங்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றால், பணக்காரர்களுக்கு மட்டுமே கடன் கிடைத்து அவர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள்'' என்றார் தெளிவாக.

- இதுதொடர்பான முழுமையான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > அடமானமில்லா கடன்கள்! - வங்கிகளை 'அடமானம்' வைக்கிறதா மத்திய அரசு? https://bit.ly/36huVjh

முதலாளிகளுக்கு 20 லட்சம் கோடி... தொழிலாளர்களுக்கு?

உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது கொரோனா. உலகெங்கும் உள்ள அரசுகள், மக்களின் பசியாற்றுவதையே தங்களது முதல் பணியாகக் கொண்டு செயல்படுகின்றன. சரிவுக்குள்ளான பொருளாதாரத்தை மீட்க, ஒவ்வொரு நாடும் பல்வேறு திட்டங்கள் தீட்டுகின்றன. அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் மாதம் 1,200 டாலரும், குழந்தைகளுக்கு கூடுதலாக 500 டாலரும் கொடுக்கிறது அந்த நாட்டு அரசு. இங்கிலாந்து அரசு, ஒவ்வொரு தனிநபருக்கும் மாதம் 2,500 பவுண்டை மூன்று மாதங்களுக்குக் கொடுத்துள்ளது. ஸ்பெயினில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்களோ, அந்தச் சம்பளம் அவர்களுக்கு அப்படியே கொடுக்கப்படுகிறது.

வங்கிக் கடன்களும்... கொண்டைக் கடலையும்... ரூ.20 லட்சம் கோடி யாருக்கு?

தென் கொரியாவில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 820 டாலர் கொடுத்துள்ளனர். நார்வேயில் மாதத்துக்கு 4,900 டாலர், ஜப்பானில் 928 டாலர், கனடாவில் 2,000 டாலர், பிரேசிலில் 120 டாலர் என, பல நாடுகள் தங்களுடைய மக்களின் கையில் பணத்தைக் கொடுக்கின்றன. சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, செரிபியா, செக் குடியரசு, டென்மார்க், கிரீஸ், பிரான்ஸ், போலந்து, இத்தாலி போன்ற நாடுகள் வேலை இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு தனிநபரும் பெற்ற சம்பளத்தில் 60 முதல் 85 சதவிகிதம் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்துள்ளன.

வங்கிக் கடன்களும்... கொண்டைக் கடலையும்... ரூ.20 லட்சம் கோடி யாருக்கு?

கோடிக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட நாடு, இந்தியா. 20 லட்சம் கோடியில் மாபெரும் திட்டங்களைத் தீட்டியுள்ளதாகக் கூறிக்கொள்ளும் இந்திய அரசு, மக்கள் கைக்கு பணம் செல்லும் வகையில் எந்தத் திட்டத்தையேனும் தீட்டியிருக்கிறதா? - ''ஐந்து கிலோ அரிசியும் ஒரு கிலோ கொண்டைக் கடலையும் தருகிறோம்'' என்றது மத்திய அரசு. ''கையில் பணம் கொடுத்திருக்கலாமே?'' என்ற கேள்விக்கு, ''அந்த யோசனையைப் பரிசீலித்தோம். எது சிறந்த வழி என எங்களுக்குத் தோன்றியதோ அதைத்தான் நாங்கள் செய்தோம்'' என்று பதிலளித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

- இதுதொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் முழுமையான கட்டுரையை வாசிக்க > முதலாளிகளுக்கு 20 லட்சம் கோடி... தொழிலாளர்களுக்கு? https://bit.ly/3d0qI5K

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு