குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. ஒவ்வோர்ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள் மாநில போலீஸ் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்குப் பதக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தமிழக காவல் அதிகாரி ஏ.டி.ஜி.பி வெங்கடராமன், சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோர் ஜனாதிபதி பதக்கம் பெறவிருக்கின்றனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த பணிக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உள்ளிட்டோருக்கும் மத்திய அரசு பதக்கங்களை அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
