Published:Updated:

ரூ.58,000 கோடி நஷ்டம்...12,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்... என்ன நடக்கிறது ஏர் இந்தியாவில்?!

ஏர் இந்தியாவில் பறக்கும் பிரதமல் மோடி

ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில்கூட அரசுத் துறைகள் தாங்கள் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.58,000 கோடி நஷ்டம்...12,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்... என்ன நடக்கிறது ஏர் இந்தியாவில்?!

ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில்கூட அரசுத் துறைகள் தாங்கள் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ஏர் இந்தியாவில் பறக்கும் பிரதமல் மோடி

கடும் நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா நிறுவனம் தடுமாறி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் விட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், எந்த நிறுவனமும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம்காட்டியது. பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, தன் முடிவிலிருந்து டாடா நிறுவனமும் பின்வாங்கியது. இப்போது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசுதான் நிதி வழங்கிவருகிறது. ஏர் இந்தியாவை வாங்க யாரும் வரவில்லையென்றால், அந்த நிறுவனத்தை முற்றிலும் கைவிடும் முடிவில் மத்திய அரசு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், அரசின் அதிகாரபூர்வ விமான நிறுவனம் ஒன்று இல்லாத நிலை இந்தியாவுக்கு ஏற்படும்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமர் மோடி போன்ற விவிஐபி-களின் பயணத்துக்காக, அமெரிக்காவில் இரு பிரமாண்ட விமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்க நிர்வாகச் சீர்கேடு காரணமாக இருந்தாலும், பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் சுற்றுப்பயணங்களுக்கான பில்கள்கூட முழுமையாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் முதல் முக்கியப் பதவிகளில் உள்ள குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகிய மூன்று பேருமே தங்கள் பயணத்துக்கான செலவுகளை ஏர்இந்தியா நிறுவனத்துக்கு முழுமையாகச் செலுத்தவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரதமர் மோடி பதவியேற்றது முதல் 84 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்காக, ஏர் இந்தியா 777 போயிங் ரக தனி விமானங்களை வழங்குகிறது. அதுபோல, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர் பயணங்களுக்கும் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை அளிக்கிறது. நாட்டின் விவிஐபி-களின் பயணங்களுக்காக ஏர் இந்தியா செய்யும் செலவு பில்களை மத்திய அரசு முறையாக செலுத்தவதில்லை என்கிற செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஏர் இந்தியாவுக்குக் கொடுக்கவேண்டிய தொகை ரூ.598.55 கோடியாக இருந்தது. இந்த செப்டம்பர் 30-ம் தேதி அதாவது, 5 மாதத்துக்குள் பாக்கித் தொகை ரூ. 200 கோடி உயர்ந்து, ரூ.798.55 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவுக்காகச் செலுத்த வேண்டிய பில் தொகை மட்டும் ரூ.559 கோடி.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

சமூக சேவகரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான லோகேஷ் பத்ரா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளார். ஏர் இந்தியா அளித்துள்ள பதிலில், இதுவரை பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணச் செலவு மட்டும் ரூ. 1,321.41 கோடி எனத் தெரியவந்துள்ளது. அதில் , மத்திய அரசு ரூ. 862.45 கோடியைச் செலுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் பயணச் செலவு ரூ. 539.35 கோடி. குடியரசுத் தலைவருக்கான இந்தச் செலவுகளைப் பாதுகாப்பு அமைச்சகம்தான் பார்த்துக்கொள்கிறது. இதில் ரூ. 295.40 கோடியை ஏர் இந்தியாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் செலுத்தியுள்ளது. ரூ. 243.95 கோடி பாக்கி வைத்துள்ளது. துணை குடியரசுத்தலைவருக்கான விமானச் செலவு ரூ. 779.40 கோடி. இதில், ரூ. 706.69 கோடி செலுத்தப்பட்டுவிட்டது. ரூ.72.7 கோடி எஞ்சியுள்ளது. இதுதவிர, பல துறைகளில் ஏர் இந்தியாவுக்கு அரசு தரப்பில் செலுத்தவேண்டிய தொகை கோடிக்கணக்கில் பாக்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில்கூட, அரசுத்துறைகள் தாங்கள் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்தாமல் பாக்கிவைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஏர் இந்தியா மற்றும் துணை நிறுவனங்களான அலயன்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களுக்கு மொத்தமாக 169 விமானங்கள் உள்ளன. 31 வெளிநாடுகளில் 42 நகரங்களுக்கும், இந்தியாவில் 55 நகரங்களுக்கும் ஏர் இந்தியா விமானங்களை இயக்கிவருகிறது. இதுவரை ரூ.58,000 கோடி நஷ்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்துள்ளது. ஒரு வேளை, ஏர் இந்தியா நிறுவனம் மூடப்பட்டால், 12,000 ஊழியர்கள் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism