Published:Updated:

` 25 வருடகால நடைமுறையை மாற்றிய நீதியரசர்கள்!' - விபத்து இழப்பீட்டில் என்ன செய்யப் போகிறது அரசு?

அரசு கடந்த 25 ஆண்டுகளாக அந்த அட்டவணையை மாற்றவில்லை. பணவீக்கத்துக்கு ஏற்றவாறு இவ்வாறான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியது மத்திய அரசின் கடமை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொதுமக்களுக்கான இழப்பீட்டுத் தொகை என்பது அரசின் சமூகநல நடவடிக்கைகளுள் மிகப் பிரதானமானது. இதற்கான சிறப்புச் சட்டங்களும் நடைமுறையில் இருக்கின்றன.

நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் ஒருபக்கம் அதை மேம்படுத்தி வருகின்றன. எனினும், காலமாற்றத்துக்கு ஏற்றபடி அந்தச் சட்டங்களைத் திருத்துவது தேவையாகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் விபத்துகளால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அச்சட்டத்தில் பிரிவு 163ஏ கீழுள்ள இரண்டாவது அட்டவணையில் இழப்பீட்டுக்கு அடிப்படை வரம்புகள், உயிரிழப்புக்கு 5 லட்சமாகவும் பெரும் காயங்களுக்கு 50,000-மாகவும், சிறுகாயங்களுக்கு 25,000-மாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

chennai high court
chennai high court

25 ஆண்டுகள் தொன்மையான இந்த வரம்புகளை இன்றைய பணவீக்கத்துக்கு ஏற்றவாறு திருத்தும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அரூரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் சேலத்திலுள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் 2010-ம் அக்டோபர் 6-ம் தேதி அன்று பணியிலிருந்து ஊர் திரும்பியபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அடுத்து வந்த வாகனத்தை இடிக்காமல் தடுப்பதற்காகக் கல்லில் இடித்து மரத்தில் மோதியதால் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாகக் கீழ்அரூரிலுள்ள தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இழப்பீடு அளிப்பதற்காகக் கணிக்கும்போது , மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 163ஏ-யின்கீழ் கட்டமைக்கப்பட்ட விதிமுறையைப் பயன்படுத்தி ஒரு வருடத்துக்கு 40,000 ரூபாய் என ஆண்டு வருமான வரம்பைக் கருத்தில்கொண்டு, 3.5 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

accident
accident

இந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு, "சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் `மே-2018' அறிவிப்பில் வாழ்வாதாரத்தின் அடிப்படையில், பெருந்தொகையாக 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும். காலமாற்றத்துக்கேற்ப வாழ்வாதாரம் மாறிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசு வாழ்வாதாரத்துக்கு மாறாக, பணவீக்கம் மற்றும் வங்கி வட்டிவிகிதத்தின் அடிப்படையில் வாகனச் சட்டப் பிரிவு163ஏ கீழுள்ள இரண்டாவது அட்டவணையைத் திருத்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு கடந்த 25 ஆண்டுகளாக அந்த அட்டவணையை மாற்றவில்லை. பணவீக்கத்துக்கு ஏற்றவாறு இவ்வாறான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியது மத்திய அரசின் கடமை. மோட்டார் வாகனச் சட்டம், விபத்துகளைக் குறைக்கவும் , பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறுகிய காலத்துக்கு இழப்பீடு அளிக்கவும் கொண்டுவரப்பட்டது. எனவே, மத்திய அரசு அதனுள் ஏற்படும் குறைகளைக் களைந்து சீர்திருத்த வேண்டும். பிரிவு 163ஏ-விலுள்ள இரண்டாவது அட்டவணை 1994-ல் கொண்டுவரப்பட்டது. ஆகவே, அதன் திருத்தம் அவசியமானது. அந்தத் திருத்தம் வரும்வரை நீதிமன்றங்கள் நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக வைத்து இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இழப்பீட்டுத் தொகையை ரூ.18.7 லட்சமாக உயர்த்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Justice N. Kirubakaran
Justice N. Kirubakaran

உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து திருச்சியைச் சேர்ந்த விபத்து உரிமைக் கோரலுக்கான காப்பீட்டுத்துறை அதிகாரி மரிய ஃபிளோரன்ஸ் பேசுகையில், " இதுவரை இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும்போது பொதுவாக சம்பந்தபட்டவர்களின் வாழ்வாதாரத்தையும் அடிப்படைத் தேவைகளையும்தான் கருத்தில்கொள்வோம். நீதிமன்றத்தின் இந்தப் புதிய பார்வை பெரிய மாற்றத்தைக் கொண்டுவருகிறதா என்பது, அரசு அதில் எந்த அளவுக்கு அக்கறையோடு செயல்படப் போகிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது" என்றார் இயல்பாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு