Published:Updated:

`அர்ச்சகர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு!’ - திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின்
News
ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைக் காணொலிக் காட்சி மூலமாகவும், நேரடியாகவும் தொடங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார். சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,243 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் சிறார்களுக்கான காது கேளாதோர் பயிற்சி மையம் மற்றும் உதவி உபகரணம் வழங்கும் பிரிவு என தனித்தனி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அர்ச்சகர் ஊதிய உயர்வு
அர்ச்சகர் ஊதிய உயர்வு

இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களுக்கான ஓய்வூதியம் 3,000 ரூபாயிலிருந்து 4,000-ஆக உயர்த்தப்படும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக, புதிதாகத் தொடங்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு 9.76 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 106 ரோந்து வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz