Published:Updated:

குடியுரிமை திருத்தச் சட்டம்: எளிதானப் புரிதலுக்கு விகடனின் சிறப்புக் கவரேஜ்!

CAA
CAA

ஆனந்த விகடனின் கவர் ஸ்டோரியும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான எதிர்ப்பு, ஆதரவு கோணங்களையும், அதற்காக முன்வைக்கப்படும் காரணங்களையும் தெளிவாக வெளிக்கொணர்கிறது

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் கொண்டுவந்தபோது "காங்கிரஸ் கட்சி நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால், இந்தச் சட்டத்தை தற்போது கொண்டுவர வேண்டிய அவசியமே இருந்திருக்காது" என்று பேசினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

"குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தியாவில் எந்தத் தடுப்பு மையங்களும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையைப் பறிப்பதற்காக அல்ல, மக்களுக்கு குடியுரிமையை வழங்குவதாகும். வதந்திகளை நம்பாதீர்கள்" என்று முழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அதேவேளையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடே போராட்ட பூமியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரலும் முன்னெப்போதையும்விட ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

இந்தச் சட்டம் குறித்த அரசின் விளக்கங்களை தவிடுபொடியாக்கும் 'டி-கோடிங்' கன்டென்ட்டுகள் ஒருபக்கம் குவிந்தாலும், "இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களை எல்லாம் பாகிஸ்தானுக்குப் போகச் சொல்கிறார்களாம். அதற்காகத்தான் நாங்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறோம்" என்ற தவறான புரிதலுடன்கூடிய குரல்களையும் சில இடங்களில் கேட்க முடிகிறது.

எனவே, இந்தச் சட்டம் குறித்தும், இதன் பின்னணி - விளைவுகள் குறித்தும் எளிமையாக மக்களுக்கு எடுத்துச் சொல்வதும் இதழியலின் முக்கியப் பணி. அதை மிகுந்த கவனத்துடன் செய்து வருகிறான் விகடன்.

'வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை முன்வைத்துதான் மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று இரண்டாவது முறையும் பிரதமர் ஆகியிருக்கிறார் நரேந்திர மோடி. ஆனால் மத்திய அரசு பொருளாதாரப் பின்னடைவுகளைச் சரிசெய்யாமல், அரசியல் நோக்கத்துடன் சர்ச்சைகளைக் கிளப்பும் சட்டங்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுவந்தால், மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' எனும் ஆனந்த விகடன் தலையங்கம், மக்களின் மனநிலையை அப்படியே எதிரொலிக்கிறது. ஆனந்த விகடன் தலையங்கம் - வாசிக்க > http://bit.ly/2Zhw72u

ஆனந்த விகடனின் கவர் ஸ்டோரியும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான எதிர்ப்பு, ஆதரவு கோணங்களையும், அதற்காக முன்வைக்கப்படும் காரணங்களையும் தெளிவாக வெளிக்கொணர்கிறது. 'இந்தியாவைக் கூறுபோடும் குடியுரிமை திருத்தச் சட்டம்!' எனும் அந்தக் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > http://bit.ly/2tMb6kZ

"இந்தியா, பல மதத்தினரும் வசிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது சாத்தியமல்ல. எனினும், இப்படி ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை அளிப்பது என்னும் கருத்தை யூத இனவாத அரசான இஸ்ரேலில் இருந்து பா.ஜ.க எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் எந்த நாட்டிலிருந்தும் வரும் யூதர்களுக்கு இஸ்ரேலில் குடியுரிமை அளிக்க வழிவகை செய்வதுதான் 'அலியாஹ்' எனும் சட்டம்.

குடியுரிமைத் திருத்தச்சட்டம் -  என்.ஆர்.சி தெரிந்து கொள்ளவேண்டியவை என்ன? #VikatanInfographics

அதேபோன்று உலகின் எந்த நாட்டிலிருந்து வரும் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் பா.ஜ.க தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதைத்தான் இப்போது தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தமாகச் செய்திருக்கிறது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை." - இப்படியாக CAA - NRC குறித்த பின்புலத்துடன், எதிர்ப்புக் குரல் வலுக்கக் காரணமான அம்சங்களையும் மிகத் தெளிவுபட எடுத்துச் சொல்கிறது, எழுத்தாளர் அ.மார்க்ஸ் எழுதிய 'குடியுரிமைத் திருத்தம்... ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்!' எனும் சிறப்புக் கட்டுரை. - வாசிக்க > http://bit.ly/35FnIIk

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், ப்ரைம் கன்டென்ட்டுகளின் அப்டேட்களையும் தவறாமல் பெறுவதற்கு, விகடன் டிஜிட்டல் சந்தா செலுத்துங்கள். உங்களுக்காகவே இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

விகடன் சந்தா மூலம் நீங்கள் பெறக்கூடிய சிறப்புப் பயன்கள்: 2006 முதல் இப்போது வரை விகடன் இதழ்களில் வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளை வாசிக்க எப்போதும் வலம் வரலாம். | வெப் ப்ரவுசர், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம். | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்து விகடன் இதழ்களை வாசித்து மகிழலாம்.

அடுத்த கட்டுரைக்கு