Published:Updated:

இ-பாஸ் `பூச்சாண்டி'க்குப் பின்னால் எடப்பாடி அரசின் `அடக்குமுறை' அரசியல்!

முதல்வர் ஆய்வுசெய்கிறார்...
முதல்வர் ஆய்வுசெய்கிறார்...

அரசர்கள் நகர்வலம் செல்வதன் காரணம் தெரியுமா? 'இது என் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி... இதை நான் ஆள்கிறேன்... என் அதிகாரம் இதுவரை விரிந்திருக்கிறது!'

`இ-பாஸ் முறையை ரத்து செய்யலாம்' என மத்திய அரசே கூறிவிட்ட நிலையில், `கொரோனா பரவிவிடும்' என 'பூச்சாண்டி' காண்பித்து, இ-பாஸைத் தொடர்கிறது எடப்பாடி அரசு.

ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24-ம் தேதியிலிருந்து அரசியல் செயல்பாடுகள் எதுவுமே தமிழகத்தில் இல்லை. கரைவேட்டிகள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் எந்த மாவட்டத்துக்கும் செல்ல முடியவில்லை. முதல்வர் மட்டும் இஷ்டத்துக்கு ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார். டிசம்பர் வரையில் இப்படியே இ-பாஸ் முறையை நகர்த்திக்கொண்டு, அ.தி.மு.க மட்டுமே களத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை மக்களிடம் விதைக்கவே இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

- அரசர்கள் நகர்வலம் செல்வதன் காரணம் தெரியுமா? 'இது என் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி... இதை நான் ஆள்கிறேன்... என் அதிகாரம் இதுவரை விரிந்திருக்கிறது!' என்று சொல்லாமல் சொல்லும் ஒருவித உளவியல் நடவடிக்கைதான் அது. தற்போது, 'ஆய்வுக் கூட்டங்கள்' என்ற பெயரில் எடப்பாடி தமிழகம் முழுக்க செய்துகொண்டிருப்பது அப்படியொரு ராஜபவனிதான்! அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் எடப்பாடிமீது இப்படி எழுந்திருக்கும் விமர்சனத்துக்கு என்ன காரணம்?

கொரோனா தடுப்புப் பணிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டம் தோறும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்துவருகிறார். இந்தப் பயணம், அ.தி.மு.க-வின் மினி தேர்தல் பிரசாரம் என விமர்சிக்கவும்படுகிறது.

- இதுகுறித்த முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3b5truN > எடப்பாடியின் 'மெடிக்கல் ரிமாண்ட்!` - தவிக்கும் தமிழகம் https://bit.ly/3b5truN

ஏன் இந்த அடக்குமுறை?

மாவட்டம்தோறும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டங்களில் ஆளுங்கட்சி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்கிறார்கள். நூற்றுக்கணக்கான அ.தி.மு.க நிர்வாகிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு இல்லை. அப்படியே அவர்கள் வந்தாலும், குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப் படுகிறார்கள். ஏன் இந்த அடக்குமுறை?

முதல்வர் ஆய்வுசெய்கிறார்...
முதல்வர் ஆய்வுசெய்கிறார்...

முதல்வர் தரப்பில் அமைச்சர் வீரமணியிடம் பேசினோம். ''கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்த அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இப்படியான இக்கட்டான சூழலிலும், மாநிலம் முழுவதும் சென்று முதல்வர் ஆய்வுசெய்கிறார். ஆனால், தி.மு.க-வினர் இது போன்ற ஆய்வுக் கூட்டங்களிலும் அரசியல் செய்கிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், குழப்பம் ஏற்படுத்து கிறார்கள். தி.மு.க தலைவரால் வெளியே வர முடியவில்லை. வீட்டில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை மட்டுமே விடுகிறார். செயல்படாத எதிர்க்கட்சியின் விமர்சனத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை'' என்றார்.

- இதுகுறித்த முழுமையாக செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > https://bit.ly/3lseLuo

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு