Published:Updated:

`அரசுச் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை' - தமிழக டி.ஜி.பி எச்சரிக்கை!

சைலேந்திர பாபு

மத்திய மாநில அரசுகளின் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், மீறினால் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் மக்கள் புகாரளிக்கலாம் என டி.ஜி.பி உத்தரவிட்டிருக்கிறார்.

மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டங்கள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் மக்கள் புகாரளிக்கலாம் என்றும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தத் தகவலின்படி முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அரசின் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது வாகனம் மற்றும் விசிட்டிங் கார்டுகளில் அரசுச் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

மேலும் சாட்சிகளின் முன்னிலையில் சின்னங்களைப் பறிமுதல் செய்யவும், காணொலியில் பதிவு செய்யவும் சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism