Published:Updated:

முகத்தை `ஸ்கேன்' செய்யும் உத்தி... மக்களை அச்சுறுத்துகிறதா மத்திய அரசு?

ஆதார் என்ற பெயரில் நாட்டில் உள்ள ஐந்து வயதுக்குமேலான அனைவரின் தகவல்களும் மத்திய அரசிடம் உள்ளன. அவற்றுடன் இந்தத் தொழில்நுட்பமும் சேர்ந்தால் அவ்வளவுதான்! அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள்.

Face Recognition
Face Recognition

'பல நல்ல நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்ட Face Recognition என்ற தொழில்நுட்பத்தை, தங்களுக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு' என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

தொலைந்துபோன குழந்தைகளைக் கண்டறியவும், அடையாளம் தெரியாத உடல்கள் மற்றும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும் Face Recognition என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக, கடந்த நவம்பர் மாதம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) அறிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் சோதனை அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய டெல்லி காவல்துறையினர், 'Face Recognition உதவியுடன் தொலைந்துபோன 3,000 குழந்தைகளைக் கண்டறிந்திருப்பதாகக் கூறியுள்ளனர். தொலைந்துபோன குழந்தைகளைக் கண்டறிவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது... இந்த இடம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. இதை வைத்து போராட்டங்களை ஒடுக்க நினைத்தால்?

கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதில் பங்கேற்கச் சென்ற பொதுமக்கள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் இயந்திரம் வழியாக அனுப்பி சோதனையிட்டனர். இது வழக்கமான நடைமுறைதான். அதன்பிறகு கேமரா மூலம் ஒவ்வொருவரின் முகத்தையும் ஸ்கேன் செய்த பிறகே நிகழ்ச்சியில் அனுமதித்திருக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களை இந்த ஸ்கேனிங் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 'தொலைந்துபோனவர்களையும் குற்றம்புரிந்தவர்களையும் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் என்ற அறிவிப்புடன் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை, பொதுமக்கள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பயன்படுத்துவதற்கான அவசியம் என்ன?' என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், மக்களிடையே அச்சமும் பரவியிருக்கிறது.

இந்தத் தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்பது ஒருபுறமிருக்க, `இப்படிச் சேமிக்கும் தகவல்களைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பம் மத்திய அரசிடம் உள்ளதா?' என்பதும் மிக முக்கியமான கேள்வியாக எழுகிறது.

'தற்போது இருக்கும் சூழலில், அரசுக்குச் சாதகமான ஒரு தொழில்நுட்பத்தை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை. டெல்லியில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது ஒரு முன்னோட்டமாகக்கூட இருக்கலாம். தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் எடுத்த நடவடிக்கைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். போராட்டம் தொடர்ந்து நடைபெற காரணமாக இருந்த ஒருசிலரை மட்டும் குறிவைத்து கைதுசெய்தது போலீஸ். இதுவே போராட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால்... எப்படியிருக்கும்? Face Recognition தொழில்நுட்பம் இருந்தால் அதைச் செய்திருப்பார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2TkbOAx

ஏற்கெனவே, ஆதார் என்ற பெயரில் நாட்டில் உள்ள ஐந்து வயதுக்குமேலான அனைவரின் தகவல்களும் மத்திய அரசிடம் உள்ளன. அவற்றுடன் இந்தத் தொழில்நுட்பமும் சேர்ந்தால் அவ்வளவுதான்! அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படலாம் அல்லது வேறுவிதமான அச்சுறுத்தல்கள் கொடுக்கப்படலாம்' - இப்படி நீளும் சந்தேகங்கள் தான் மக்களைப் பதைபதைக்கவைத்திருக்கின்றன.

Face Recognition தொழில்நுட்பம், பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படவில்லை. அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் செய்யப்பட்ட சோதனை முயற்சிகளில்கூட பல நேரம் அது தவறான தகவல்களையே காட்டியிருக்கிறது. சீனா மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அதிக மக்களின் முகங்களை தங்கள் தகவல்தளத்தில் சேர்த்திருக்கிறது. தற்போது இந்தியாவும் இந்த கோதாவில் குதித்துள்ளது.

Face Recognition
Face Recognition

இந்தத் தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்பது ஒருபுறமிருக்க, `இப்படிச் சேமிக்கும் தகவல்களைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பம் மத்திய அரசிடம் உள்ளதா?' என்பதும் மிக முக்கியமான கேள்வியாக எழுகிறது. முறையான பாதுகாப்பு இல்லாததால் ஆதார் தகவல் இணையத்தில் கசிந்த கசப்பான அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொழில்நுட்பம் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டால், அது பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்தத் தொழில்நுட்பத்தை எந்த இடத்திலெல்லாம் பயன்படுத்துவோம் என்று, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான எந்தத் தனியுரிமைச் சட்டமும் இதுவரை இல்லை. இப்போது இருக்கும் இந்தியத் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66E-ன்படி, எந்த ஒரு தனிநபரையும் அவரின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பதும், அதைப் பரப்புவதும் அவரின் தனி உரிமையை மீறுவதாகக் கருதப்படும். அது தண்டனைக்குரிய குற்றம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எதன் அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது என்று தெரியவில்லை.

- மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எப்படிப் பார்ப்பது? - ஜூனியர் விகடன் சிறப்புப் பார்வையை முழுமையாக வாசிக்க > Face Recognition பாசிட்டிவ் தொழில்நுட்பமா... போராட்டங்களை ஒடுக்குவதற்கான திட்டமா? https://www.vikatan.com/news/general-news/discussion-about-face-recognition

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9