Published:Updated:

குமாரசாமிக்கு குட்பை... என்ட்ரியாகும் எடியூரப்பா!

கர்நாடகா களேபரம்
பிரீமியம் ஸ்டோரி
கர்நாடகா களேபரம்

கர்நாடகா களேபரம்

குமாரசாமிக்கு குட்பை... என்ட்ரியாகும் எடியூரப்பா!

கர்நாடகா களேபரம்

Published:Updated:
கர்நாடகா களேபரம்
பிரீமியம் ஸ்டோரி
கர்நாடகா களேபரம்

டந்த ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, காங்கிரஸ் 79, ம.ஜ.த 37, பகுஜன் சமாஜ்வாதி 1, இரண்டு சுயேச்சைகள் என மொத்தம் 119 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவில், கூட்டணி ஆட்சி அமைத்து ம.ஜ.த குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வர் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

105 இடங்களில் வெற்றி பெற்ற பி.ஜே.பி, தனிப் பெரும்பான்மை கட்சி என்றபோதும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. எனவே கர்நாடகாவில் ஏற்பட்ட காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க ஆறு முறை ‘ஆபரேஷன் தாமரை’யைக் கையில் எடுத்த பி.ஜே.பி-யின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன. பி.ஜே.பி-யின் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு அணுகுமுறையைக் கர்நாடக மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

எனவேதான் ஓர் ஆண்டுக்குப் பிறகு இம்முறை நேரடியாக ‘ஆபரேஷன் தாமரை’யை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் அமித்ஷா. இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ-க்கள் ம.ஜ.த-வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசுக்கு ஆதரவளித்துவந்த 2 சுயேச்சைகளும் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியான ம.ஜ.த பெரும்பான்மை இழந்ததையடுத்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் பின்னணியில், கர்நாடகா பி.ஜே.பி பொதுச்செயலாளர் அரவிந்த் லிம்பாவாலி, பி.ஜே.பி மேல் சபை உறுப்பினர் ராஜூ சந்திரசேகர், எம்.எல்.ஏ அசோக் நாராயணா, சி.பி.யோகேஷ்வர் மற்றும் எடியூரப்பா இளைய மகன் விஜயேந்திரா என 5 பேர் கொண்ட டீமை, அமித்ஷா பயன்படுத்தி யுள்ள தகவல் தற்போது கசிந்துள்ளது.

மும்பை ரினைசன்சஸ் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள ராஜினாமா எம்.எல்.ஏ-க்களுக்குத் தேவையானதைக் கவனிக்கும் பொறுப்பை விஜயேந்திரா செய்துவருகிறார். மும்பையில் இருந்தவாறே பி.ஜே.பி எம்.எல்.ஏ அசோக் நாராயணா, பி.ஜே.பி மேல் சபை எம்.பி ராஜூ சந்திரசேகர், சி.பி.யோகேஷ்வர் மூவரும் இந்தப் பணியில் விஜயேந்திராவுக்கு உதவியாக ஈடுபட்டு வருகின்றனர். ராஜினாமா செய்த 14 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள 2 சுயேச்சை எம்.எல்.ஏ-க்களுக்கு தலா ‘20 சி’ முதல்கட்டமாக வழங்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

குமாரசாமிக்கு குட்பை... என்ட்ரியாகும் எடியூரப்பா!

ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், முனிரத்தினா, பசவராஜ், சோமசேகர், சிவராம் ஹெப்பர் ஆகியோர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பதுதான் காங்கிரஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து சமாதானப்படுத்த எடுத்த முயற்சியை ஓட்டல் நிர்வாகம் தடுத்து விட்டதால், சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களைக்கூட சந்திக்க முடியவில்லை என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதை முன்னாள் பிரதமர் தேவகவுடா, ‘எமர்ஜென்சியை விட மிகக் கடுமையான அடக்குமுறையை பி.ஜே.பி கையாள்வதாக’ தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான சூழலில், கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியின் பலம் 119-லிருந்து, 103 ஆகக் குறைந்துள்ளது. பி.ஜே.பி-யின் பலம், இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் 107 ஆக உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடி நிலை குறித்து ஆலோசித்த கர்நாடக மாநில காங்கிரஸ், ‘ராஜினாமா செய்துள்ள 14 எம்.எல்.ஏ-க்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் அவர்களைக் கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை பி.ஜே.பி-யிடம் விட்டுக்கொடுத்து எதிர்க் கட்சியாக இருந்து செயல்படலாம்’ என்று முடிவெடுத்துள்ளது. காங்கிரசின் இந்த முடிவுக்கு மாறாக, ‘ஆட்சியைக் கலைத்துவிட்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக் கலாம்’ என்று தேவகவுடா மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், இன்றையச் சூழ்நிலையில் கர்நாடகா, மீண்டும் ஒரு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால், தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்று உளவுத்துறையிடம் முதல்வர் குமாரசாமி அறிக்கை கேட்டதில், ‘186 முதல் 200 இடங்களில் பி.ஜே.பி வெற்றிபெறக் கூடும்’ என்று தெரிவித்துள்ளனர். எனவேதான், ‘தற்போது இருக்கும் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸ் இழக்காமல், எதிர்க்கட்சியாக இருந்து சட்டமன்றத்தில் செயல்படலாம்’ என்று தெளிவான முடிவை எடுத்துள்ளது கர்நாடக காங்கிரஸ் தரப்பு.

கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் சதுரங்க ஆட்டத்தில், ஒரு வருடத்துக்குப் பிறகு இப்போதுதான் விளையாட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நெருக்கடிகளைக் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள், ஜூலை 19-ம் தேதிக்குள் கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்க வாய்ப்புள்ளதாக உறுதியாகக் கூறுகின்றனர்.