Published:Updated:

"நான் இந்த அரசை முழுமையாக குற்றம் சாட்டவில்லை; அந்த துறையின் செயலாளர்..." - சி.வி.சண்முகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செய்தியாளர் சந்திப்பில் சி.வி.சண்முகம்.
செய்தியாளர் சந்திப்பில் சி.வி.சண்முகம். ( தே.சிலம்பரசன் )

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, 'அம்மா உணவகம், கிளினிக்' அடித்து நொறுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அம்மா பெயரிலுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தை முடக்குவதற்கான முயற்சியும் நடந்து கொண்டுள்ளது" - சி.வி.சண்முகம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன் இரண்டாக பிரிக்கப்பட்டது. விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு 'டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்' என கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பழைய தாலுகா அலுவலகத்திற்கு புதிய வண்ணம் மட்டும் தீட்டி தற்காலிகமாகத் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக அன்பழகன், மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம், இன்று இந்தப் பல்கலைக்கழகத்திற்கு சென்று பார்வையிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

"இப்பகுதியில் தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் மக்களின் கோரிக்கையை அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கூறியபோது, வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தில் அம்மாவின் பெயரிலே (டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்) தனியாக பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என அறிவித்தார். பின்னர் அதற்கான சட்டத்தை உருவாக்கி, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி விழுப்புரத்தில் இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. துணைவேந்தரும் நியமிக்கப்பட்டாகிவிட்டது. இப்போது இந்த பல்கலைக்கழகம், தற்காலிகமான இடத்தில் செயல்பட்டு வருகிறது.

விழுப்புரம்: பழைய தாலுக்கா அலுவலகத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம்! பின்னணி என்ன?

கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதி இது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் நிறைந்த மாவட்டங்களாக இருக்கும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் 'திருவள்ளுவர் பல்கலைக்கழக'த்திலும்; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இந்த பல்கலைக்கழகத்திலும் வரும்படி வரையறை செய்யப்பட்டது. அதன்படி, 'அவரவர்களின் அதிகாரம், அவரவர்களுடைய பகுதியில் மட்டுமே செல்லும்' என சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள உயர்க்கல்வி படிப்பு சார்ந்த அனைத்தும் இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது.

டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம், விழுப்புரம்.
டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம், விழுப்புரம்.
தே.சிலம்பரசன்

பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடமும் எங்களின் அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டாகிவிட்டது. நிர்வாக கட்டிடம் கட்டுவதற்கு ஆவின் இருக்கும் இடத்தில் 20 ஏக்கரும், நிரந்தர வளாகம் கட்டுவதற்கு செம்மேடு பகுதியிலே சுமார் 70 ஏக்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது... ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த பல்கலைக்கழகத்தை முடக்குவதற்கான சதி நடந்து கொண்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தன்னுடைய அதிகாரத்தைத் தாண்டி செயல்படுகிறது. அம்மாவின் பெயரால் இயங்கும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு தான் விண்ணப்பிக்க வேண்டும் எனும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன? தனியாக பல்கலைக்கழகம் இருக்கும்போது, அதை சிதைக்கும் வகையிலே, மூடுகின்ற வகையிலே, இன்றைக்கு இந்த அரசு ஈடுபட்டு கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் இந்த அரசை முழுமையாக குற்றம் சாட்டவில்லை. இந்த துறையின் செயலாளராக இருக்கக்கூடிய கார்த்திகேயன் தான் இந்த அரசாங்கத்திடம் நல்ல பேரை வாங்க வேண்டும் என்பதற்காக இதை செய்து கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தை முடக்குவதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அம்மா உணவகம் மற்றும் கிளினிக் அடித்து நொறுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான முயற்சி நடந்து கொண்டுள்ளது. இந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சருக்கு இது தெரியுமா..! தெரியாதா..! என்று தெரியவில்லை. அவருடைய கவனத்திற்கும், முதல்வருடைய கவனத்திற்கும் இதை கொண்டு வர விரும்புகிறேன்.

சி.வி.சண்முகம் காட்டிய அறிவிப்பு தாள்
சி.வி.சண்முகம் காட்டிய அறிவிப்பு தாள்

மேலும், இந்த பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாகனம் கூட இதுவரை தரப்படவில்லை. பதிவாளரை நியமனம் செய்யும் அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. 'எந்த பணியையும் நீங்கள் செய்யக் கூடாது' என வாய்வழி தடை உத்தரவு இவர்களுக்கு போடப்பட்டுள்ளது. முதுகலைப் படிப்பு விண்ணப்பிப்பதற்கு இந்த பல்கலைக்கழகத்திற்கே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு