நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தயார் நிலையில் இருக்கிறது, தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதா-2019. இந்தச் சட்டம் மீனவர்களை பாதிக்கும் என்று கவலை தெரிவிக்கின்றனர் கன்னியாகுமரி மீனவர்கள்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மிக அதிகம் பாதிக்கும் தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதாவின் அம்சங்களை நம்மிடம் அடுக்கினார், நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச்செயலாளர் குறும்பனை பெர்லின். ‘‘ஆசியாவிலேயே ஆழ்கடல் மீன் பிடிப்பில் சிறந்தவர்கள் குமரி மீனவர்கள்தாம். ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் இங்குதான் அதிகளவில் இருக்கின்றனர். குமரி மாவட்ட மீனவர்கள் ஒரு மாத்துக்கு மேல் ஆழ்கடலில் பயணித்து மீன் பிடிக்கக் கூடியவர்கள் என்பதால், அதற்கு ஏதுவாகப் படகின் நீளத்தையும் இன்ஜினின் சக்தியையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது. ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை ஊக்கப் படுத்துவதாகச் சொல்லும் மத்திய அரசு, தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா மூலமாக, ‘படகின் நீளத்தை அதிகரிக்கக் கூடாது; இன்ஜினின் பவரை அதிகரிக்கக் கூடாது’ என்று ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப்போகின்றனர். இந்த மசோதா நிறைவேறினால், விசைப் படகுகளின் திறன் மட்டுப் படுத்தப்படும். அப்படி நிகழ்ந்தால் எதிர்காலத்தில் ஆழ்கடல் மீன்பிடித்தொழில் நசிந்துபோகும்.

பேருந்துகள் முன்பு இருந்ததைப் போலவா இப்போதும் இருக்கின்றன? ஸ்லீப்பர், ஏசி என்று வசதிகளும் இன்ஜின் பவரும் அதிகரித்து இருக்கிறதல்லவா? வாகனங்களுக்குப் பழைய நடைமுறையை மாற்றி அனுமதி கொடுக்கும் அரசு, மீன்பிடிப் படகுகளுக்கு 1983 ஃபிஷ்ஷிங் மரைன் சட்டப்படிதான் அனுமதி கொடுப்போம் என்று முரண்டுபிடிப்பது எந்த வகையில் நியாயம்? கன்னியாகுமரி மாவட்டக் கடல் பகுதியில், 10 முதல் 15 நாட்டிகல் மைல் தூரத்தில் கப்பல் வழித்தடம் உள்ளது. அதனால், மீன்பிடிப் படகில் கப்பல் மோதிக் கன்னியாகுமரி மீனவர்கள் இறந்துபோன சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, அந்தக் கப்பல் வழித்தடத்தை 50 முதல் நூறு நாட்டிகல் மைல் தூரத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது நிறைவேற்றப்பட உள்ள சட்டத்தின்படி சாதாரணக் கட்டு மரங்கள், பாய்மரப் படகுகள், வெளியில் இயந்திரம் பொருத்தி இயக்கும் வள்ளங்கள், கனரக இயந்திரங்கள் பொருத்தி இயக்கப்படும் விசைப் படகுகள் ஆகியவற்றையும் வணிகக் கப்பல்கள் சட்டம் 1958-ன் கீழ் பதிவுசெய்ய வேண்டும் என்கின்றனர். நூறு கப்பல்கள் வைத்திருக்கும் அதானியும், ஒரே ஒரு கட்டுமரம் வைத்திருக்கும் அந்தோணியும் ஒரே மாதிரியான முதலாளிகள் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. அனைத்து மீன்பிடிக் கலன்களுக்கும் இதுவரை மாநில அரசுதான் அனுமதி வழங்கிக்கொண்டிருந்தது. மாநில அரசின் உரிமையை இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. கேரள, ஆந்திர அரசுகளும் பி.ஜே.பி ஆளக்கூடிய கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும் கூட இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன. ஆனால், தமிழக அரசு மீனவர்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு மௌனம் சாதிக்கிறது’’ என்றார்.

இந்தச் சட்டம் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை. மீனவர்கள் சொல்லும் விஷயங்களை அதிகாரிகள் காதுகொடுத்துக் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நாகர்கோவிலில் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிக் கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேயிடம் பேசினோம். ‘‘கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மீனவர்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்த அம்சங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டோம். அவற்றைத் தொகுத்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்துத் தமிழக மீன்வளத்துறைச் செயலர் கோபாலிடம் பேசியபோது, ‘‘தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா மூலம் மீனவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். வள்ளத்தில் மீன் பிடிப்பவர்களுக்கும், விசைப்படகில் மீன் பிடிப்பவர்களுக்கும் இடையே சில சமயங்களில் மோதல்கள் நடப்பதைப் பார்க்கிறோம். இந்தச் சட்டப்படி ஆழ்கடல் மீனவர்களுக்கும், வள்ளத்தில் மீன்பிடிப்பவர்களுக்கும் எனத் தனித்தனி லிமிட் வகுக்கப்படும். விசைப்படகுகளில் 240 குதிரைத்திறன் (ஹெச்.பி) கொண்ட மெஷின் பொருத்த வேண்டும். ஆனால், சிலர் 400 குதிரைத்திறன் கொண்ட மெஷின்களைப் பொருத்துகின்றனர். விசைப்படகின் நீளம் 24 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால், 40 மீட்டர் நீளம் வரை விசைப்படகைக் கட்டுகின்றனர். அதிக சக்தி வாய்ந்த விசைப்படகுகள் மூலம் மீன்வளம் பெருகுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எதிர்காலத்தில் மீன்வளம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்றால், இந்தச் சட்டம் அவசியம். இந்தச் சட்டம் தமிழகத்துக்கு மட்டுமானது அல்ல, நாடு முழுவதுக்குமானது. மீனவர்கள் பாதுகாப்புக்காகவும், மீன்வளத்தை எப்போதும் சமச்சீராக வைப்பதற்காகவும் இந்தச் சட்டம் அவசியம்’’ என்றார்.

நிச்சயமாக மீன்வளம் காப்பாற்றப்பட வேண்டும்தான். ஆனால், மீனவர்களின் படகுகள் 24 மீட்டர் நீளம்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசு, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டுகளின் கப்பல்களுடைய நீளத்தை மட்டும் கணக்கில் கொள்வதில்லையே. அந்தக் கப்பல்களால் மீன்வளம் பாதிக்காதா?

மீனவர்களின் இந்தக் கேள்விக்கு அரசிடம் பதில் இருக்காது. காரணம், அவர்கள் அதானிகள்... இவர்கள் அந்தோணிகள்!