Published:Updated:

தமிழகத் தொல்லியல் துறையை மத்திய அரசு வஞ்சிக்கிறதா? - மாஃபா பாண்டியராஜன் பதில்

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

தி.மு.க-வுக்கு கீழடி குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கீழடியில் ஆராய்ச்சி நடத்தியிருக்கலாமே...

'சங்க காலம் என்பது கி.மு. 4-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2-ம் நூற்றாண்டு வரை' என்று நம் வரலாற்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 'அதைவிடவும் பழைமையானது தமிழர் நாகரிகம்' என்பதை நிரூபித்திருக்கிறது கீழடி அகழாய்வு. தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலம் கி.மு 583 என்று தெரியவந்துள்ளது. ஆனால், 'அது இன்னும் பழைமையாகவும் இருக்கலாம்' என்கிறார்கள் தொல்லியல் வல்லுநர்கள். இந்நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை சந்தித்தோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2lxZmi5

''மூன்றாம் அகழாய்வின் முடிவில் கீழடி ஆராய்ச்சி மூடப்படவிருந்ததே?''

''அந்தக் கண்காணிப்பாளர் எடுத்த முடிவு அது. அவரும் ஒரு தமிழர்தான். முதல் இரண்டு கட்டங்களை ஆராய்ச்சி செய்தவர், பல பொருள்களைக் கண்டுபிடித்தார். அவருக்குப் பிறகு வந்தவர், இதில் பெரிதாக எதுவும் கிடைக்காது எனத் தெரிவித்தார். நான்காம் கட்ட ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி கொடுத்ததும் மத்திய அரசுதான்.''

தி.மு.க-வுக்கு கீழடி குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கீழடியில் ஆராய்ச்சி நடத்தியிருக்கலாமே...

''அதேசமயம், அமர்நாத் ராமகிருஷ்ணனை அறிக்கை தாக்கல் செய்யவிடாமல் செய்கிறார்களே?''

''முதல் இரண்டு ஆய்வுகள் மேற்கொண்டதும் அவர் மாற்றப்பட்டார். தொல்லியல் துறையைப் பொறுத்தவரை அவர்கள் இடைக்கால அறிக்கையைக் கொடுப்பார்கள். சிறிது காலம் கழித்து முழு அறிக்கையும் கொடுப்பார்கள். ஆதிச்சநல்லூரை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு ஆய்வு நடந்து பல வருடங்கள் ஆகிறது. இடைக்கால அறிக்கையை மட்டும் தமிழக அரசிடம் கொடுத்தார்கள். அதன் முழு அறிக்கையும் வேண்டும் எனக் கேட்கவிருக்கிறோம். இந்தத் துறையின் பிரச்னை இதுதான்.''

''தமிழகத் தொல்லியல் துறையை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே?''

''தவறான குற்றச்சாட்டு. தமிழகத் தொல்லியல் துறையில் சுமார் நூறு பேர்தான் பணியில் இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் பிரிவில்தான் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் உள்ள 414 தொல்லியல் களங்களை மத்திய அரசுதான் பராமரித்து வருகிறது.''

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

''கீழடி ஆய்வு விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனவே?''

''தி.மு.க-வுக்கு கீழடி குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கீழடியில் ஆராய்ச்சி நடத்தியிருக்கலாமே... மத்திய அரசில் அங்கம்வகித்தபோது கீழடியில் இன்னும் பெரிதாக ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கலாமே. இப்போது எல்லாம் சரியாக நடந்து வரும்போது, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? எங்களைக் குறை சொல்ல முடியாததால், மத்திய அரசைக் குறை சொல்கிறது தி.மு.க.''

> ''கீழடியின் தொன்மை மிகவும் பழைமையானது என்பது நிரூபணமாகியிருக்கிறது. துறை அமைச்சராக எப்படி உணர்கிறீர்கள்?''

> ''கீழடி முடிவுகளையடுத்து வரலாறே மாறும் வாய்ப்பிருக்கிறதா?''

> ''நீங்கள் இதை இந்திய நாகரிகம் என்கிறீர்கள். ஆனால் மத்திய அரசு, இதை தமிழர் நாகரிகமாகக் கருதுகிறதே?''

- இந்தக் கேள்விகளுக்கு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அளித்த பதில்களை, ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > ''தமிழர் நாகரிகம் என்பது இந்திய நாகரிகம்!'' - மாஃபா பாண்டியராஜன் புது விளக்கம் https://www.vikatan.com/government-and-politics/politics/minister-ma-foi-pandiarajan-interview

| அனைத்து விகடன் இதழ்கள் +

2006 முதல் இன்று வரையிலான

300K சிறப்புக் கட்டுரைகள்!

> ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv

அடுத்த கட்டுரைக்கு