Published:Updated:

``முதல்வர் பழனிசாமிதான் இளைய தலைமுறைக்கு இன்ஸ்பிரேஷன்!" - சிவசங்கரி சொல்லும் காரணம்

விகடன் டீம்

என்னதான் பெரியாரின் பரிணாம வளர்ச்சியில் வந்த கட்சி அ.தி.மு.க என்றாலும், கடவுள் நம்பிக்கை போன்ற தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லை

Sivashankari
Sivashankari

ஊடக விவாதங்களில் அ.தி.மு.க-வின் முக்கியமான பிரசார பீரங்கியாக வலம்வருபவர், சிவசங்கரி. உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர். பேச்சாற்றல் மற்றும் திறமையான வாதங்கள் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தைப்பெற்றவர். அவருடனான சந்திப்பில்... https://bit.ly/2ZcvS7f

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எப்படி இருக்கிறது?

முதல்வரின் அரசியல், ஓர் அன்பான அரசியல். மிகவும் எளிமையான மனிதர் அவர். எல்லோருக்கும் உரிய வாய்ப்புகளை வழங்குகிறார். ஜனாதிபதியைப் பார்த்தாலும் அதே புன்னகைதான், ஒரு தொண்டரைப் பார்த்தாலும் அதே புன்னகைதான். என்னைப் போன்ற இளைய தலைமுறையினர் அடுத்த கட்டத்துக்கு வளர்வதற்கு, அவருடைய இந்த அணுகுமுறைதான் முக்கியக் காரணம்.

'கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்' என்று வெளியே சொல்லிக்கொண்டு, ரகசியமாகக் கோயிலுக்குப் போகிற இரட்டை வேடம்

பி.ஜே.பி-யின் அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியல் என்பது அதிகாரத்தை நோக்கியது. இப்போது, அவர்களின் கையில் அதிகாரம் இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுக் கால பி.ஜே.பி ஆட்சியில், ஊழல் என்பது இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட முந்தைய அரசுகள் செய்த தவறுகளைச் சரிசெய்து, நல்ல ஆட்சியை நடத்துகிறார்கள்.

அ.தி.மு.க-வின் ஆன்மிக அரசியல் பற்றி..?

என்னதான் பெரியாரின் பரிணாம வளர்ச்சியில் வந்த கட்சி அ.தி.மு.க என்றாலும், கடவுள் நம்பிக்கை போன்ற தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. கும்பாபிஷேகம், யாகம் எல்லாம் அம்மாவே நடத்தினார்கள். இதில், நாங்கள் வெளிப்படையாகவே இருக்கிறோம். தி.மு.க-வைப்போல, 'கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்' என்று வெளியே சொல்லிக்கொண்டு, ரகசியமாகக் கோயிலுக்குப் போகிற இரட்டை வேடம் எங்கள் கட்சியில் இல்லை.

Sivashankari
Sivashankari

* நீங்கள் யாரிடம் அரசியல் கற்றுக்கொண்டீர்கள்?

* உங்கள் கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார். கட்சியை எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். அதன் அசைக்க முடியாத தலைவராக ஜெயலலிதா இருந்தார். இவர்களில் யாருடைய கொள்கைகளை அதிகமாகப் பின்பற்றுகிறீர்கள்?

* ஈழ அரசியலில் உங்கள் ஈடுபாட்டுக்கான காரணம் என்ன?

- இந்தக் கேள்விகளுக்கு சிவசங்கரி அளித்துள்ள விரிவான பதில்களை அவள் விகடன் இதழில் வாசிக்க > நம் முதல்வரின் அரசியல், ஓர் அன்பான அரசியல்! - சிவசங்கரி https://www.vikatan.com/government-and-politics/politics/six-political-questions-to-admk-spokes-person-sivasankari

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/