Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

முதன்மையானவரின் மகனுடன் சேர்ந்து பிசினஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஒரு வருடமாகக் காத்திருக்கிறார் துணையானவரின் மகன். ஆனாலும், `கட்சி வேறு, தொழில் வேறு’ எனப் பிடிகொடுக்காமல் விலகியே நிற்கிறார் முதன்மையானவரின் மகன். அப்பாவின் அறிவுரையே விலகலுக்குக் காரணமாம். #தந்தை சொல் மிக்க...

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தன் வாரிசுக்குக் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார் மதுரைக்காரர். அதனால்தான், அநியாயத்துக்கு அடக்கி வாசிக்கிறார். `தனி மெஜாரிட்டியில் ஜெயித்து, அதன் பிறகு தம்பியானவர் கண்டுகொள்ளாமல்விட்டால் என்ன செய்வது?’ என உடனிருப்பவர்கள் கேள்வியெழுப்ப, மத்தியஸ்தம் செய்தவர்களுக்கு இப்போதே போன் மேல் போன் போடுகிறாராம் மதுரைக்காரர். #அன்பு மலர்களே...

கிசுகிசு

ஊடகங்களின் முன்னால் தினமும் நின்று பழக்கப்பட்ட ‘மைக்’ அமைச்சருக்கு வீட்டில் இருப்புக்கொள்ளவே இல்லையாம். ‘இப்போதைக்கு நிர்வாகம் நம் கையில் இல்லை. அரசு குறித்தோ கட்சி குறித்தோ ஏதும் பேச வேண்டாம்’ என முதன்மையானவர் கறாராகச் சொல்லிவிட்டதால், ஐபிஎல் பார்த்தே நேரத்தைக் கழிக்கிறார் ‘மைக்’ அமைச்சர். #ஆடிய காலும் பாடிய வாயும்…

அபராதத் தொகையைக் கட்ட முடியாமல் சிறையிலேயே இருக்கும் வளர்ப்புப்புள்ளி, தன் உடன்பிறந்த சகோதரர்கள் இருவருக்கும் உருக்கமான கடிதம் அனுப்பினாராம். பணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டவர், வெளியே வந்ததும் அதைத் திருப்பித் தந்துவிடுவதாக எழுதியிருந்தாராம். ஆனாலும், சகோதரர்கள் இருவரும் சைலன்ட் மோடிலேயேதான் இருக்கிறார்களாம். #அண்ணன் என்னடா தம்பி என்னடா…

கிசுகிசு

இரண்டு பெல் அமைச்சர்களைத் தவிர பிற அமைச்சர்கள் பணப்பட்டுவாடாவைச் சரிவரச் செய்யவில்லை என முதன்மையானவருக்கு அறிக்கை கொடுத்திருக்கிறதாம் உளவு அமைப்பு. சிகிச்சையிலிருந்து மீண்ட டெல்டா அமைச்சரை முதன்மையானவர் ரொம்பவே நம்பியிருக்க, அவர்தான் பெரிதாக அமுக்கிவிட்டதாகத் தகவல் வந்ததாம். முதன்மையானவர் கணக்கு கேட்க, டெரராகிக் கிடக்கிறார் டெல்டா அமைச்சர். #கணக்கு... பிணக்கு!

இழுபறிநிலை வந்தால், உரிய நிபந்தனைகளுடன்தான் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனக் கதர் தலைவருக்குப் பலரும் அட்வைஸ் செய்கிறார்களாம். ‘அமைச்சரவையில் பங்கு’, ‘வாரியங்களில் பதவி’, ‘ராஜ்யசபா எம்.பி’ என அவர்கள் லிஸ்ட் போட்டுக் கொடுக்க, கதர் தலைவருக்குக் கிறுகிறுக்கிறதாம். #மறுபடியும் கண்ணீருக்கு வேலையா..?

நடிகரின் மனைவிக்கு அடுத்தபடியாக, கனியெழுத்துப் பிரமுகர் நடுநிலைக் கட்சியைவிட்டுக் கழன்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். நினைத்த நேரத்தில் தலைவரைச் சந்திக்கவோ, பேசவோ முடியாதபடி கொடுக்கப்படும் நெருக்கடிகள்தான் காரணமாம். ‘தலைவரைச் சுற்றி ஏன் இந்த வெட்டிக் கூட்டம்’ என அந்தப் பிரமுகரைப் போலவே பலரும் வெடிக்கிறார்கள். #நெக்ஸ்ட்டு... ரெஸ்ட்டு!

தம்பிக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மல்லுக்கட்டை ஆரம்பத்திலேயே முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறார் கப்பல் தலைவரின் மனைவி. இரு தரப்பிலும் இருப்பவர்கள் கொம்புசீவி விடுவதால்தான் இந்தப் பனிப்போராம். அதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளைக் கூப்பிட்டு ‘கட்சி வேலைகளை மட்டும் பாருங்க’ என அதட்டி அனுப்பியிருக்கிறார் அம்மணி. #திரும்பத் திரும்பப் பேசற...

கிசுகிசு

விருப்ப ஓய்வில் சென்று அரசியலில் இறங்கிய அதிகாரி, `2026 தேர்தல்தான் நம் இலக்கு’ எனச் சொல்லி இளைஞர்களைத் தயார்படுத்துகிறாராம். ‘தொகுதிக்கு ஒரு வாரம்’ என ஒதுக்கி, தமிழகம் முழுக்கப் பயணிக்கத் திட்டம் தயாராகிவருகிறதாம். ‘இதுக்கே வருஷக்கணக்கா ஆகிடுமே…’ என அதிகாரியிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் உடனிருப்பவர்கள். #நெஞ்சம் நிமிருமா!

அந்தத் துணைத் தலைவர் ஒருவேளை தோற்றுவிட்டால், உடனடியாக தலைவர் ஆக்காமல் புதுச்சேரி ராஜ்யசபா சீட்டை அவருக்குக் கொடுக்க கட்சி மேலிடம் உத்தேசித்திருக்கிறதாம். அதற்குக் காரணம், 2026 வரை அவரைத் தயார்ப்படுத்திவிட்டு, எதிர்கால அரசியலில் முக்கிய வாரிசுக்குப் போட்டியாகக் களமிறக்க கட்சி விரும்புவதுதானாம். #நான் டெல்லிக்குப் போறேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism