Published:Updated:

ஒரே நாளில் நாடற்றவர்கள் ஆன 19 லட்சம் பேர்... மத்திய அரசு செய்தது சரியா?

assam
assam

பெயர் விடுபட்டிருப்பது மட்டுமே பிரச்னையல்ல. இறுதிப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள். குடும்பத்தையே துண்டுத் துண்டாகக் கூறுபோட்டிருக்கிறது தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம்

ஒரே நாளில் 19 லட்சம் பேரை நாடற்றவர்கள் ஆக்கியிருக்கிறது, மத்திய அரசு. ஆகஸ்ட் 31-ம் தேதி தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட தேசிய குடியுரிமைப் பதிவேட்டில், அஸ்ஸாமில் 60 ஆண்டுகளாக வசித்துவந்த 19 லட்சம் பேரின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன. சட்டரீதியான நடவடிக்கை என்றாலும் பெரும் எண்ணிக்கை, பீதியைக் கிளப்பியிருக்கிறது. கிட்டத்தட்ட நாகலாந்து மாநிலத்தின் மக்கள்தொகை இது. புதுச்சேரி, கோவா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் மக்கள்தொகையைவிட அதிகமும்கூட! விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2m2jsAR

ஒரு தரப்பினர், 'இது மனித உரிமை மீறல்' என்றும், மற்றொரு தரப்பினர் 'இது தேசத்தின் பாதுகாப்புக் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கை' என்றும் வாதங்களை வைக்க, தேசத்தின் பேசுபொருளாகியிருக்கிறது இந்த நடவடிக்கை!

தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பில், தங்களின் குடியுரிமைப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும் என்றுதான் அஸ்ஸாம் மாநில மக்கள் நினைத்திருந்தார்கள். எதிர்பார்ப்புக்கு மாறாக, அவர்களின் தலையில் இடி விழுந்துள்ளது. தேயிலைத் தொழிலாளர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், பூர்வகுடிகள் என, எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து தரப்பினர் பெயர்களையும் பட்டியலில் இருந்து தூக்கியிருக்கிறது தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெண்களே! குறிப்பாக, மேற்குவங்கப் பெண்கள் மற்றும் அஸ்ஸாம் இளைஞர்களைத் திருமணம் செய்த மேகாலயா பெண்கள் கதறுகிறார்கள்.

பெயர் விடுபட்டிருப்பது மட்டுமே பிரச்னையல்ல. இறுதிப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள். குடும்பத்தையே துண்டுத் துண்டாகக் கூறுபோட்டிருக்கிறது தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம்

பெயர் விடுபட்டிருப்பது மட்டுமே பிரச்னையல்ல. இறுதிப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள். குடும்பத்தையே துண்டுத் துண்டாகக் கூறுபோட்டிருக்கிறது தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம். பட்டியலில் அம்மாவின் பெயர் இருந்தால் குழந்தையின் பெயர் இல்லை. குழந்தையின் பெயர் இருந்தால் அப்பாவின் பெயர் இல்லை. பல இடங்களில் மனைவியின் பெயர் இருக்கிறது. கணவரின் பெயர் இல்லை. வீரப்பதக்கம் பெற்ற முன்னாள் ராணுவ வீரர் முகம்மது சனாவுல்லா, தெற்கு அபயாபூரி

எம்.எல்.ஏ அனந்தகுமார் மாலோவின் பெயர்கள்கூட விடுபட்டுள்ளன. இந்தக் குளறுபடிகள், தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி யிருக்கின்றன. 'அஸ்ஸாம் மாநில அதிகாரிகள் மட்டுமல்லாமல் மேற்குவங்கம், மேகாலயா அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் இதற்குக் காரணம்' என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். பல கோடி ரூபாய் பணம், ஐந்து ஆண்டுகால மனித உழைப்பு அனைத்தும் வீண்.

2009-ல் அஸ்ஸாம் பொதுநலச் சேவை அமைப்பு, பதிவேட்டைப் புதுப்பிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, திருத்த நடவடிக்கைகள் வேகமெடுத்தன. 2018, ஜூலையில் வெளியான வரைவுப் பட்டியலில் 40 லட்சம் பேர் இடம்பெறவில்லை. இப்போது இறுதிப் பட்டியலில் 19 லட்சம் பேர்!

assam
assam

அடிப்படையில், இது தேசத்தின் பாதுகாப்புடனும் தேசிய நலனுடனும் சம்பந்தப்பட்ட விவகாரம்தான். ஏனெனில், அஸ்ஸாம் மட்டுமல்ல நாடு முழுவதும் இரண்டு கோடி வங்கதேசக் குடியேறிகள் சட்டவிரோதமாக ஊடுருவியிருக்கிறார்கள். பட்டியலில் பெயர் நீக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்க, 120 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நடுவர் தீர்ப்பாயத்தில் அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப் பட்டால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையிடலாம்.

> சரி, எதிர்காலம் என்ன? அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைப்பாடு எத்தகதையது? - ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > 'அஸ்ஸாம்' அந்நியர்கள் 19 லட்சம் பேர்! - என்ன செய்யப்போகிறது மத்திய அரசு https://www.vikatan.com/government-and-politics/politics/being-an-assamese-is-still

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு