Published:Updated:

காவிரி விவகாரம்: ``தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் இது!"

தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனி அமைப்பாகச் செயல்பட்டுவந்த இந்த ஆணையத்தை, தற்போது நீர்வளத் துறையின் (ஜல்சக்தித் துறை அமைச்சகம்) நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஊரடங்கில் நாடே முடங்கிக் கிடக்கிறது. கொரோனா பயத்தில் மக்கள் நிலைகுலைந்து கிடக்கின்றனர். இந்த நேரத்திலும்கூட, காவிரி உரிமையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக, குமுறல்கள் வெடிக்கின்றன.

தமிழர்களின் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம்தான் காவிரி விவகாரத்தில் இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கான ஒரே ஆறுதல்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனி அமைப்பாகச் செயல்பட்டுவந்த இந்த ஆணையத்தை, தற்போது நீர்வளத் துறையின் (ஜல்சக்தித் துறை அமைச்சகம்) நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதற்கு, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் அ.வீரப்பனிடம் பேசினோம். ''இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். மத்திய அரசு எப்போதுமே தமிழக மக்களுக்கு, குறிப்பாக இங்கு உள்ள பாசன விவசாயிகளுக்கு பாதகமாகவே நடந்துகொள்கிறது.

காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும், மேலாண்மை ஆணையம் அமைக்க மறுத்துவந்தது. நம் மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியும்கூட அலட்சியம் செய்தது. 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகே மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், அதற்கு நிரந்தர தலைவரை நியமிக்கவில்லை.

இதற்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் இல்லையென்றாலும்கூட, இங்கேயாவது நமது ஆதங்கத்தைப் பதிவுசெய்தோம்... அழுத்தம் கொடுத்தோம். தற்போது இதற்கும் ஆபத்து வந்துவிட்டது..." என்றார்.

காவிரி
காவிரி

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளருமான கி.வெங்கட்ராமன், ''காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இதுவரை குறைந்தபட்ச தற்சார்ப்புத் தன்மையாவது இருந்துவந்தது. அதையும் குழிதோண்டிப் புதைக்கும் நோக்கிலேயே நீர்வளத் துறையின்கீழ் இதை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. இது சட்டவிரோதமானது. இதை தமிழக அரசு கண்டித்திருக்க வேண்டும்; தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்" என்றார்.

- இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்கிறது? இதன் விளைவுகள் எப்படி இருக்கும்? ஆளும் பா.ஜ.க தரப்பு சொல்வது என்ன? - விரிவான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > "இனி காவிரியில் தண்ணீர் வருவது சந்தேகம்தான்!" - பறிபோகும் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம்... க்ளிக் செய்க https://bit.ly/3bdzgo9

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம்.

குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு