Published:Updated:

``இது தேசத் துரோகம்...!'' - முன்னாள் துணை ஜனாதிபதி மீது கிளம்பும் பகீர் குற்றச்சாட்டு

ந.பொன்குமரகுருபரன்

முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரிமீது தேசத் துரோக குற்றச்சாட்டை முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் எழுப்பியுள்ளார்.

ஹமீது அன்சாரி
ஹமீது அன்சாரி

2007 முதல் 2017 வரை இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஹமீது அன்சாரி. நீண்டகாலம் மாநிலங்களவை தலைவராகவும் இருந்தவர் என்கிற புகழுக்குரியவர். அன்சாரிமீது முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர், தேசத் துரோகம் செய்துவிட்டதாகப் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருப்பது டெல்லி அரசியலில் புயலை உருவாக்கியுள்ளது.

என்.கே.சூத்
என்.கே.சூத்

இந்தியாவின் வெளியுலக உளவு அமைப்பான ‘ரா’வில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றவர் என்.கே.சூத். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மூன்று நாள்களுக்குப் பிறகு, தெஹ்ரானுக்கு வெளியே சாலையோரம் ஒன்றில், கிழிந்த ஆடைகளுடன் சந்தீப் கபூரை ‘ரா’ உளவுத்துறையினர் மீட்டனர். இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்தும், தனது பணியை அன்சாரி செய்யவில்லை என இச்சம்பவத்திலிருந்து, ‘ரா’வுக்கும் அன்சாரிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது.
என்.கே.சூத்

இதுகுறித்து என்.கே.சூத் -ன் ட்விட்டர் பக்கத்தில், “1991-93 காலகட்டத்தில் இரான் நாட்டுக்கான இந்தியத் தூதராக, இரான் தலைநகர் தெஹ்ரானில், முகமது அன்சாரி பணிபுரிந்து வந்தார். அச்சமயத்தில், மே 1991-ல் சந்தீப் கபூர் என்கிற இந்தியர் இரான் உளவுத்துறையான ‘சவாக்’கால் கடத்தப்பட்டார். அங்குள்ள ‘ரா’ அதிகாரிகளும் உடனடியாக அன்சாரியின் கவனத்துக்கு இவ்விவகாரத்தைக் கொண்டுசென்றதுடன், சந்தீப் கபூரை விடுதலை செய்ய இரான் வெளியுறவுத் துறையிடம் பேசுமாறு கூறினர்.

ஹமீது அன்சாரி
ஹமீது அன்சாரி

ஆனால், அன்சாரி அப்படி எதுவும் செய்யவில்லை. கபூர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினார். மூன்று நாள்களுக்குப் பிறகு, தெஹ்ரானுக்கு வெளியே சாலையோரம் ஒன்றில் கிழிந்த ஆடைகளுடன் சந்தீப் கபூரை ‘ரா’ உளவுத்துறையினர் மீட்டனர். இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்தும், தனது பணியை அன்சாரி செய்யவில்லை என இச்சம்பவத்திலிருந்து, ‘ரா’வுக்கும் அன்சாரிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது.

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், தெஹ்ரானில் உள்ள மத இயக்கமான ‘கோம்’-ல் ஆயுதப் பயிற்சி பெறுவது ‘ரா’வுக்குத் தெரியவந்தது. இவ்விஷயத்தை அன்சாரியிடம் ‘ரா’ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜாங்க விவகாரத்தை இந்திய வெளியுறவுத் துறையிடம் மட்டுமே பகிர வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை மீறி, இவ்விஷயத்தை இரான் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் அன்சாரி பகிர்ந்துள்ளார். இதையடுத்து, ‘கோம்’ இயக்கத்தைக் கண்காணித்து வந்த டி.பி.மாத்தூர் என்கிற இந்திய அதிகாரியை ஆகஸ்ட் 1991-ல் ‘சவாக்’ கடத்தியது. மாத்தூரைக் கடத்தியது இரான் உளவுத்துறைதான் என ‘ரா’ அறிக்கை அளித்தும், அதை இந்திய அரசுக்கு அன்சாரி தெரிவிக்கவில்லை.

பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய்
பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய்

டி.பி.மாத்தூர் காணாமல் போய்விட்டதாக மட்டும் இந்திய அரசுக்கு அன்சாரி கடிதம் எழுதினார். இனியும் அமைதியாக இருக்கக் கூடாது எனக் கருதி, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயிடம், இவ்விஷயத்தை 'ரா' கொண்டுசென்றது. உடனடியாக அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ்விடம் பேசிய வாஜ்பாய், மாத்தூரை எவின் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்ய உதவினார்.

‘ரா’வைப் பலவீனப்படுத்தும் வேலையில், மற்ற இந்தியத் தூதர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அன்சாரி செயல்பட்டதால், 1992 மும்பை குண்டுவெடிப்பின்போது, சவூதி அரேபியா, இரான், குவைத், கத்தார், துபாய் என மொத்த மத்திய கிழக்கிலும் ‘ரா’ வலுவிழந்தது.
என்.கே.சூத்

இந்திய வெளியுறவுத் துறை வரலாற்றிலேயே, ஓர் இந்தியத் தூதருக்கு எதிராகத் தூதரக அதிகாரிகளின் மனைவிமார்கள் போராட்டம் நடத்தியது அன்சாரிக்கு எதிராக மட்டும்தான். இவர் இரானில் பணிபுரிந்தபோது, ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டனர். ஆனால், அவர்களை மீட்க அன்சாரி எதுவும் செய்யவில்லை. தேசத் துரோகம் இழைத்துவிட்டார். இரானிலிருந்து அவர் வெளியேறியபோது, அங்குள்ள மொத்த தூதரக அதிகாரிகளும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இன்டிய வெளியுறவுத்துறை அமைச்சகம்
இன்டிய வெளியுறவுத்துறை அமைச்சகம்

இரானைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி அனுமதிச் சீட்டு அளிக்கப்பட்டு இந்திய விசா வழங்கப்படுவதாக ‘ரா’ தகவல் அளித்தது. அதையும் அன்சாரி கண்டுகொள்ளவில்லை. ‘ரா’வைப் பலவீனப்படுத்தும் வேலையில், மற்ற இந்தியத் தூதர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அவர் செயல்பட்டதால், 1992 மும்பை குண்டுவெடிப்பின்போது, சவூதி அரேபியா, இரான், குவைத், கத்தார், துபாய் என மொத்த மத்திய கிழக்கிலும் ‘ரா’ வலுவிழந்து இருந்தது. நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். 1991-93 காலகட்டத்தில், பாகிஸ்தான் தூதரை அடிக்கடி அன்சாரி ஏன் சந்தித்தார்? அவர்களுக்கு இடையில் பரிமாறிக்கொண்ட தகவல்கள் என்ன? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என்று என்.கே.சூத் கூறியுள்ளார்.

என்.கே.சூத் வெளியிட்டுள்ள இத்தகவல்கள் டெல்லியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கு முன்னாள் ‘ரா’ அதிகாரிகள் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், என்.கே.சூத்-ன் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டுமென்று கோரியுள்ளது.

மோடி
மோடி

இக்குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரையில் ஹமீது அன்சாரி எந்தப் பதிலும் சொல்லவில்லை. விகடன் சார்பில் நாம் அனுப்பிய இ-மெயிலுக்கும் அவரது அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.