Published:Updated:

போக்ஸோ முதல் உபா வரை... திருத்தப்பட்ட மசோதாக்கள் சொல்வது என்ன?

ஜெ.பிரகாஷ்

இந்தச் சட்டத்திருத்த மசோதாவில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கும் பி.ஜே.பி அரசு, சமீபகாலமாகப் பழைய சட்டங்களில் பல்வேறு திருத்தங்களைச் செய்து புதிய மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. புதிய சட்டமசோதாக்கள் மற்றும் சட்டத்திருத்த மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், போக்ஸோ மற்றும் முத்தலாக் ஆகிய இரண்டும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுவிட்டன. மற்றவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. அவை, என்னவென்பதை இங்கு காண்போம்...

போக்ஸோ சட்ட மசோதா:

போக்ஸோ சட்டத்திருத்த மசோதா
போக்ஸோ சட்டத்திருத்த மசோதா

இந்தச் சட்டத்திருத்த மசோதாவில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, ஆபாசப்படம் தொடர்பான குற்றங்களுக்குத் தண்டனை விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா

ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா
ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா

இந்தச் சட்டத்திருத்த மசோதாவில், மத்திய தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள், மாநிலத் தகவல் ஆணையர்கள் ஆகியோரின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றை நிர்ணயிப்பதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மோட்டார் வாகனச்சட்டத்திருத்த மசோதா

மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா
மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா

இந்தச் சட்டத்திருத்தத்தின்படி, மோட்டார் வாகன விதிகளை மீறுவோருக்கான அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் பல மடங்கு அதிகரிக்கும். போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 200-ன் கீழ் கொண்டுவரப்படும்.

முத்தலாக் தடைச்சட்ட மசோதா

இந்த மசோதாவில், முஸ்லிம் மதப் பெண்களை, ஒரே நேரத்தில் மூன்று முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்வது இனி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் ஆண்களுக்கு, மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ சட்டத்திருத்த மசோதா

என்.ஐ.ஏ சட்டத்திருத்த மசோதா
என்.ஐ.ஏ சட்டத்திருத்த மசோதா

இந்த மசோதா, தேசியப் புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தீவிரவாதக் குற்றங்கள் தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்கும். நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி, எத்தனை நாள்களுக்கு வேண்டுமென்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. எல்லாச் சட்டத்திருத்தங்களைவிடவும் இதுவே கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

ஊதிய சட்டத்திருத்த மசோதா

ஊதிய சட்டத்திருத்த மசோதா
ஊதிய சட்டத்திருத்த மசோதா

இந்தச் சட்டத்திருத்தங்களின்படி, குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவது, தொழிலாளர்களின் உரிமையாக்கப்படும். உரிய நேரத்தில் அவர்களுக்கான ஊதியம் கிடைக்கப்பெறுவது உறுதி செய்யப்படும்.

அணை பாதுகாப்பு மசோதா

அணை பாதுகாப்பு மசோதா
அணை பாதுகாப்பு மசோதா

இந்தச் சட்ட மசோதா, அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான அணைப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

நதிநீர் சட்டத்திருத்த மசோதா


நதிநீர் சட்டத்திருத்த மசோதா
நதிநீர் சட்டத்திருத்த மசோதா

இந்தச் சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரே தீர்ப்பாயத்தை அமைக்க வழிவகுக்கும். நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு இந்த மசோதா தீர்வளிக்கும் என்று உறுயளிக்கப்பட்டுள்ளது.

உபா சட்டத்திருத்த மசோதா

உபா சட்டத்திருத்த மசோதா
உபா சட்டத்திருத்த மசோதா

தனிநபர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்க உதவும் இந்தச் சட்டத்திருத்த மசோதா தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது என்கின்றன எதிர்க்கட்சிகள். பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்தாலும், அதில் இருப்போர் வேறு அமைப்புகளைத் தொடங்குவதால் தனிநபர்களைப் பயங்கரவாதி என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்கிறார் அமித் ஷா. மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது இந்த உபா சட்டத்திருத்த மசோதா.