Published:Updated:

சென்னைப் பல்கலையில் முதுகலை... காலாட்படையில் எடுத்துவைத்த முதல் அடி! - எம்.எம்.நரவானே யார்?

எம்.எம்.நரவானே
News
எம்.எம்.நரவானே ( DEFENCE )

ஜெனரல் பிபின் ராவத்தின் இறப்புக்குப் பிறகு இந்திய முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவராக ஜெனரல் எம்.எம்.நரவானே தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த கோர ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இறந்துவிட்ட நிலையில், முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவராக, இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய ராணுவத்தை வழிநடத்திவந்த அவர், இனி முப்படைகளின் தளபதி குழுவையும் நிர்வகிக்கவிருக்கிறார்.

நாட்டின் மிக உயரிய பொறுப்புக்கு வந்திருக்கும் அவர் குறித்துப் பார்க்கலாம்...

எம்.எம்.நரவானே மகாராஷ்டிரா மாநிலத்தில், 1960-ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை இந்திய விமானப்படையிலும், இவரின் தாயார் அகில இந்திய வானொலி நிலையத்திலும் பணியாற்றியவர்கள். தன் பள்ளிப் படிப்பை புனேவில் முடித்த எம்.எம்.நரவானே, முதுகலைப் படிப்பைச் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர், தமிழகத்தின் வெலிங்டனிலிருக்கும் பாதுகாப்புச் சேவைகள் பணியாளர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். மேலும் இவர் பாதுகாப்பு மற்றும் ஸ்ட்ராடஜிக் துறையில் Ph.D முடித்திருக்கிறார்.

எம்.எம்.நரவானே
எம்.எம்.நரவானே

1980-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர், சீக்கிய காலாட்படையில் முதலில் பணியாற்றினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றிவரும் நரவானே, வட கிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். அதேபோல, இந்திய-சீன எல்லையிலும் பணியாற்றியிருக்கிறார். ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பட்டாலியனை வழிநடத்திய இவர், அஸ்ஸாம் ரைஃபில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றியிருக்கிறார். இந்திய ராணுவத்தின் பெருமைமிக்க ஸ்டிரைக் கார்ப்ஸையும் வழிநடத்தி, காலாட்படையின் பிரிகேட் மேஜராகவும் எம்.எம்.நரவானே இருந்திருக்கிறார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையிலும் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திய ராணுவத்தில் திறம்பட பணியாற்றிவந்த இவர், நாட்டின் 27-வது ராணுவ தலைமைத் தளபதியாக 2019-ம் ஆண்டு பதவியேற்றார். இந்தியா மற்றும் பிற நாடுகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, வங்காள தேசம் உள்ளிட்ட நாடுகளுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நரவானே நடத்தியிருக்கிறார். இந்திய ராணுவத்தை மேம்படுத்தி, நவீனமயமாக்கியதில் இவர் பங்கு அளப்பரியது.

இவரின் மனைவி வீணா ஆசிரியர் மற்றும் ராணுவத்தினரின் மனைவிகள் நல சங்கத்தின் துணைத் தலைவியாக இருக்கிறார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

எம்.எம்.நரவானே
எம்.எம்.நரவானே

2015-ல் 'சேனா', 'விஷிஷ்ட் சேவா', 2017-ல் 'அதி விஷிஷ்ட் சேவா', 2019-ல் 'பரம் விஷிஷ்ட் சேவா' என இவர் வாங்கிய பதக்கங்கள் இவருடைய சீருடையை அலங்கரிக்கின்றன.