Published:Updated:

கல்வான் பள்ளத்தாக்கு யாருக்குச் சொந்தம்? - சரித்திரமும் சமகாலமும்

கல்வான்  - விவகாரம்
News
கல்வான் - விவகாரம்

கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய மலை முகட்டிலிருந்து பார்த்தால், சியாச்சின் வரையிலான இந்தியப் பகுதியை எளிதாகக் கண்காணிக்க முடியும்

குலாம் ரசூல் கல்வான் என்பவர் லடாக்கைச் சேர்ந்த மலையேற்ற வீரர். லடாக்கிலிருந்து திபெத்துக்கு பாதை உருவாக்க பிரிட்டிஷ் காலத்தில் முயற்சி நடந்தபோது, அந்தக் குழுவுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றவர்.

இமயமலைப் பனி உருகி, லடாக்கில் ஓடும் நதிக்கு அவர் பெயரையே வைத்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள். கல்வான் நதியும் அதன் பள்ளத்தாக்குப் பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்கு இந்த ஒற்றை ஆதாரமே போதுமானது.

கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய மலை முகட்டிலிருந்து பார்த்தால், சியாச்சின் வரையிலான இந்தியப் பகுதியை எளிதாகக் கண்காணிக்க முடியும். இந்தப் புவிசார் முக்கியத்துவத்தாலேயே சீனா இதை அபகரிக்கப் பார்க்கிறது. 1962-ம் ஆண்டு இந்திய-சீன யுத்தமும் இந்தப் பகுதியில்தான் வெடித்தது. அதன் பிறகும் அடிக்கடி சிறு சிறு மோதல்கள் இங்கு எழுந்துள்ளன.

கல்வான்  - விவகாரம்
கல்வான் - விவகாரம்

இப்போது இந்தியா, தர்புக் என்ற இடத்திலிருந்து தவுலத் பெக் ஓல்டி விமான இறங்குதளம் வரை 224 கிலோமீட்டர் நீளத்துக்கு இங்கு சாலை அமைக்கிறது. இதனால் இந்திய ராணுவம் மிக விரைவில் எல்லைக்கோட்டுப் பகுதியைச் சென்றடைய முடியும். இதுவரை சீனாவுக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது. இப்படி இந்தியா வலிமை பெறுவதை சீனா விரும்பவில்லை. அதனால்தான், 'கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம். இங்கு நீங்கள் எல்லை தாண்டி வரக் கூடாது. சாலை போடக் கூடாது' என்று சீனா பிரச்னை செய்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல எல்லை தாண்டி வந்து கூடாரம் அமைத்த சீன ராணுவத்தினர், அவர்களாகவே திரும்பிப் போனார்கள். 2017-ம் ஆண்டு டோக்லாம் பகுதியில் சீனா அத்துமீறி சாலை போட முயன்றபோது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்து படையைக் குவித்தது. அப்போது பிரிக்ஸ் மாநாடு நடக்கவிருந்தது. கூடவே பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்கவிருந்தார். அதனால், சீன ராணுவம் பின்வாங்கியது.

இப்படி ஒவ்வொரு முறையும் அரசியல் சூழலே சீனாவை அடக்கி வைத்தது. ஆனால், கொரோனா வெறியாட்டம் போடும் இன்றைய சூழலில், அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை என்பதால் சீனா ஆக்ரோஷம் காட்டுகிறது.

கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்ததை சீனா ரசிக்கவில்லை. 'சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் அக்சாய் சின் பகுதியை மீட்போம்' என அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசியதையும் சீனா ரசிக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மத்திய ஆசிய நாடுகளை சீனாவுடன் இணைக்கும்விதமாக பல சாலைக் கட்டமைப்புகளை சீனா உருவாக்கிவருகிறது. லடாக் எல்லையை இந்தியா வலுப்படுத்துவது அதற்குத் தடையாக இருப்பதாக சீனா கருதுகிறது.

இப்போதுகூட 11 சிறப்பு ரயில்களில் தொழிலாளர்கள் சீன எல்லைக்குச் சென்று சாலைக் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இருந்தனர். (எல்லை வரை ரயில் பாதை இல்லை. சில கி.மீ தூரத்துக்கு முன்பு வரை ரயிலில் சென்று, பின்னர் வாகனங்கள் மூலம் எல்லைக்குச் செல்ல வேண்டும்).

முதல் ரயில் கிளம்பிய நேரத்தில் திட்டமிட்டு சீனா இந்த மோதலை நடத்தியது. விளைவு... ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அங்கு போவது நின்றுவிட்டது.

- இந்தியாவும் சீனாவும் உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நாடுகள். மிகப்பெரிய ராணுவ பலத்தைக்கொண்டவை. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஆசியாவின் பலம் பொருந்திய தேசங்கள். தேசியவாத உணர்வு கொண்ட தலைவர்களால் ஆளப்படும் இரண்டு தேசங்களும், தங்கள் ராணுவத்தை தேசத்தின் பெருமையாக நினைப்பவை. எனவே, இந்த மோதலை உலகமே கவலையுடன் உற்றுப் பார்க்கிறது. இனி..?

> விரிவான சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > ரத்தம் பாய்ந்த கல்வான் நதி... சீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்? https://bit.ly/2BoK5Yq

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV