Published:Updated:

Ghost Town: `ஒரு லட்சம் பேரைக் கொன்ற வைரப் பேராசை... - Real KGF Story' | பகுதி 4

பெருங்கோபமடைந்த ஜெர்மானியர்கள் கண்மூடித்தனமான முறையில் பூர்வகுடி மக்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள். 20-ம் நூற்றாண்டின் முதல் இன அழிப்பு இதுதான் என வரலாறு குறிப்பிடுகிறது.

Ghost Town: `ஒரு லட்சம் பேரைக் கொன்ற வைரப் பேராசை... - Real KGF Story' | பகுதி 4

பெருங்கோபமடைந்த ஜெர்மானியர்கள் கண்மூடித்தனமான முறையில் பூர்வகுடி மக்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள். 20-ம் நூற்றாண்டின் முதல் இன அழிப்பு இதுதான் என வரலாறு குறிப்பிடுகிறது.

Published:Updated:

கறுப்பு… மானுட இனத்தின் மூதாதை நிறம். மனித இனத்தின் முதல் உயிர் கறுப்பு நிறம்தான் கொண்டிருந்தது என்பதை எவராலும், ஒருபோதும் மறுத்திட முடியாது. ஆனால், இந்தக் கருப்பு நிறம் கீழ்மையின் அடையாளமாக உருமாற்றப்பட்டிருக்கிறது. உலக வரலாறு முழுக்கவே இந்தக் கருப்பு நிறம் பட்ட, படும் துயரங்களும், அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

கறுப்பின் பிறப்பிடம் மட்டுமல்ல, மனித இனத்தின் பிறப்பிடமும் ஆப்பிரிக்காதான். கறுப்பைத் தன்மீது அப்பிக்கொண்டிருப்பதாலோ என்னவோ… ஆப்பிரிக்க கண்டத்தின் வரலாறு முழுக்கவே கறுப்பு நிறத்தால் நிரம்பியிருக்கிறது.

நமீபியா
நமீபியா

கறுப்பின் மீதான வெள்ளைத் தோல் அடக்குமுறையைக் கொஞ்சம் புரிந்துகொண்டால் இந்தக் கதையின் நுண்ணரசியலைப் புரிந்துகொள்ள முடியும். நிறத்தின் பெயரால் அடக்குமுறை செய்து, ஒரு நகரத்தை GHOST TOWN-ஆக மாற்றிய கதை விளங்கும். ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதியின் ஒரு ஓரத்தில் அமைந்திருக்கும் சின்ன நாடு நமீபியா (Namibia). பாலைவனங்களும், கடற்கரைகளும் ஒருசேர அமைந்திருக்கும் Coastal-Desert பகுதிகள் நிறைந்திருக்கும் ஒரு நாடு. 1884-லிருந்து ஜெர்மானிய காலனியாதிக்கத்தில் இருந்துவந்தது நமீபியா. இந்த நாட்டில் இரண்டு முக்கிய பூர்வகுடி இனங்கள் இருந்தன. ஒன்று ஹெரேரோ (Herero) மற்றொன்று நமக்குவா (Namaqua).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூர்வகுடி
பூர்வகுடி

பல ஆண்டுகளாகவே ஜெர்மானியப் பிடியிலிருந்து விடுதலை பெற இந்த இரண்டு இனத்தினரும் தொடர் போராட்டங்களை நடத்திவந்தார்கள். 1904-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், சாமுவேல் மஹரேரோ ( Samuel Maharero ) தலைமையில் ஹெரேரோ மக்களும், ஹெண்ட்ரிக் விட்பூய் ( Hendrik Witbooi) தலைமையில் நமக்குவா மக்களும் வெகுண்டெழுந்து ஜெர்மானியர்களுக்கு எதிராகக் கடுமையாக சண்டை செய்தார்கள். கடுமையாக நடந்த அந்தப் போராட்டத்தில், வழியிலிருந்த ஜெர்மானியப் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, ஆப்பிரிக்க பூர்வகுடி மக்கள் 100 ஜெர்மானிய ஆண்களைக் கொலை செய்தார்கள். இதனால், பெருங்கோபமடைந்த ஜெர்மானியர்கள் கண்மூடித்தனமான முறையில் பூர்வகுடி மக்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள். `20-ம் நூற்றாண்டின் முதல் இன அழிப்பு இதுதான்’ என வரலாறு குறிப்பிடுகிறது.

பூர்வகுடிகள்
பூர்வகுடிகள்

இந்த இன அழிப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பூர்வகுடிகள் நேரடியாகக் கொலை செய்யப்பட்டார்கள். மேலும், பல பெண்களையும், குழந்தைகளையும் ஜெர்மானியப் படைகள் வறண்ட பாலைவனத்துக்குள் துரத்திவிட்டார்கள். அங்கு தண்ணீரில்லாமல், உணவில்லாமல் பல்லாயிரக்கணக்கானோர் மரணத்தைத் தழுவினார்கள். இந்த இன அழிப்புக்குப் பிறகு, பூர்வகுடிகள் வெகுவாக பயந்துபோனார்கள். பூர்வகுடிகளின் அந்த பயம், ஜெர்மானியர்களுக்குப் பெரும் தைரியத்தைக் கொடுத்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1908-ம் ஆண்டு ஜக்காரியாஸ் லெவாலா (Zacharias Lewala) என்கிற கறுப்பின இளைஞர் இன அழிப்பால் பாதிக்கப்பட்டு, தான் இதற்கு முன்னர் பார்த்துவந்த வைரச் சுரங்க வேலையை இழந்து, லூட்ரிட்ஸ் (Luderitz) எனும் ரயில் நிலையத்தில் தொழிலாளராக வேலைக்கு வந்தார்.

பூர்வகுடிகள்
பூர்வகுடிகள்

பாலைவனப் பகுதி என்பதால், அவ்வப்போது அங்கு மணற்புயல் ஏற்படும். அந்தப் புயலால், ரயில்வே தண்டவாளங்கள் மணலால் மூடப்பட்டுவிடும். அப்படி மூடும் மணலை, மண்வாரி கொண்டு சுத்தம் செய்வது ஜக்காரியாஸ் லெவாலாவின் முக்கியப் பணி. அப்படியாக ஒருநாள் அவர் தன் பணியில் இருந்தபோது, தண்டவாளங்களை ஒட்டி சில மினுமினுக்கும் கற்களைப் பார்த்தார். பார்க்க வைரக்கற்களைப்போல் இருந்ததால், அவற்றைத் தன் எஜமானரான ஆகஸ்ட் ஸ்டாக் (August Stauch)- கிடம் சென்று கொடுக்கிறார்.

ghost story
ghost story

“ ஐயா… இது வைரமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் இருக்கு. இந்தப் பகுதி முழுக்க இந்தக் கற்கள் நிறைய இருக்கின்றன” என்று சொல்கிறார். ஆகஸ்ட் அவற்றை லேப் டெஸ்டுக்கு அனுப்புகிறார். அவை தூய்மையான வைரக்கற்கள் என்று ரிப்போர்ட் வருகிறது. ஆகஸ்ட் இதை ஜெர்மானிய அரசுக்கு அனுப்பிவைக்கிறார். உடனடியாக ஜெர்மானிய அரசு லூட்ரிட்ஸ் நகரை ஒட்டியிருக்கும் மிகப்பெரிய நிலப்பரப்பை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கிறது. அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவந்த பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். பல ஜெர்மானிய தொழிலதிபர்களும் நமீபியா நோக்கிப் படையெடுக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு புதிய நகரம் உருவாகிறது. கோல்மேன்ஸ்கோப் ( Kolmanskop ) என்ற அந்த நகரம் ஆடம்பரமாக இருக்கிறது. ஜெர்மானியக் கட்டடக்கலை அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடுகள், இறைச்சிக்கடை, போஸ்ட் ஆபீஸ், ஐஸ் ஃபேக்டரி, பேக்கரி, நாடக அரங்கு, மருத்துவமனை எனச் சகல வசதிகளும் உருவாக்கப்பட்டன.

தென் துருவத்திலேயே முதல் எக்ஸ்ரே மெஷின் வைக்கப்பட்டது கோல்மேன்ஸ்கோப் நகர மருத்துவமனையில்தான் என்றும் சொல்லப்படுகிறது. சகல வசதிகளோடும், ஆடம்பரங்களோடும் நகரின் ஜெர்மானிய மக்கள் வாழ்ந்து வந்தார்கள். தங்கள் சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களில் பலரும் வைரச் சுரங்கத்தில் வேலை செய்யும் அடிமகளாக மாற்றப்பட்டனர்.

1908-ல் தொடங்கப்பட்ட வைர சுரங்கத்தின் உற்பத்தி, 1912 எனும்போது உலகின் மொத்த வைர உற்பத்தில் 12 சதவிகிதம் கோம்ல்மேம்ஸ்கோப் நகரினுடையது என்ற அளவுக்கு வளர்ந்தது.

1928-ம் ஆண்டு காலங்களில், முதலாம் உலகப் போர் தாக்கத்தின் காரணமாக வைரத்தின் விலை கடுமையாக வீழ்ந்தது. மேலும், கோல்மேன்ஸ்கோப் நகரின் பெரும்பாலான வைரங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. இனி இருக்கும் வைரங்களை மிகுந்த சிரமப்பாடுகளோடு எடுக்க வேண்டும் என்ற நிலை. அதே சமயத்தில், தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான வைரக்கற்கள் கிடைக்கின்றன எனத் தகவல்கள் வரவும், கோல்மேன்ஸ்கோப் நகரம் கொஞ்சம், கொஞ்சமாக காலியானது.

1956-ல் மொத்த ஊரும் காலியாகி மனிதர்கள் அற்ற ஊராக நின்றது கோல்மேன்ஸ்கோப்.

ghost story
ghost story

தொடர் மணற்புயல்களால் நகரின் பல கட்டடங்கள் பெரும்பாலும் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. ஜெர்மானியர்களின் ஆதிக்கத்தில் இன்று நமீபியா இல்லை. இங்கிருந்து வைரங்களை எடுத்து வியாபாரம் செய்த பல ஜெர்மானியக் குடும்பங்களும் இன்றும் பெரும் பணம் படைத்தவர்களாக வாழ்ந்துவருகின்றனர். நமீபியா பூர்வகுடிகளோ இன்றும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறார்கள். இந்த வைர நகரத்துக்கு முதல் வித்திட்ட ஜக்காரியாஸ் லெவாலா தன் இறுதிக் காலத்தில் வறுமையில் உழன்று இறந்ததாக வரலாறு சொல்கிறது.

வைரம்
வைரம்

எல்லா வளங்களும் கொண்ட ஆப்பிரிக்கா வறுமையில் இருக்கிறது… அதன் வளங்களைச் சுரண்டும் பல நாடுகளும் பணக்கார நாடுகளாக மிளிர்கின்ற்ன. ஜொலி ஜொலிக்கும் ஒவ்வொரு வைரக் கல்லுக்குப் பின்னாலும் இப்படியான துயரக் கதைகள் இருக்கின்றன.

பகுதி 3-க்குச் செல்ல...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism