Published:Updated:

கொரோனா: முழு ஊரடங்கு அறிவிப்புகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியதா... கட்டவிழ்த்துவிட்டதா?

ஊரடங்கு
News
ஊரடங்கு

இந்தியாவில் மட்டும் முழு முடக்கம் முழு தோல்வி அடைந்திருக்கிறது. இதைச் சொல்வது நான் அல்ல... தரவுகள். ஐந்தாம் கட்ட முடக்கத்துக்குப் பிறகும் நாளுக்கு நாள் இந்தியாவில் நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

2020-ம் ஆண்டு தொடங்கும் போது, நிச்சயம் இப்படியான ஒரு ஆண்டை, வாழ்வை யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டோம். உண்மையிலேயே உலகம் தலைகீழாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இயக்கம் இழந்து முடங்கியிருக்கிறது. அதில், இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன?

மார்ச் 25-ம் தேதியிலிருந்து இன்று வரை படிப்படியாக ஐந்து கட்டங்களாக முழு முடக்கத்தைக் கண்டிருக்கிறது இந்தியா. நிற்க. இந்தியா ஒருவிதத்தில் விதிவிலக்குதான், உலகின் மற்ற நாடுகளில் எல்லாம் முழு முடக்கம் வெற்றியடைந்து நோய்த் தொற்று குறைந்து கொண்டிருக்க, இந்தியாவில் மட்டும் முழு முடக்கம் படு தோல்வியடைந்திருக்கிறது. இதைச் சொல்வது நான் அல்ல தரவுகள். ஐந்தாம் கட்ட முடக்கத்துக்குப் பிறகும் நாளுக்கு நாள் இந்தியாவில் நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில வாரங்களுக்கு முன்னர், `கொரோனா எதிர்ப்பில் இந்தியா உலக நாடுகளுக்கு எல்லாம் முன்னோடி' என்று நாம் தம்பட்டம் அடித்துக்கொண்ட நிலை மாறியிருக்கிறது. கொரோனா நோயால் அதிகம் பாதித்த முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்பதே உண்மை. ஜூன் 23-ம் தேதி வரை சுமார் நாலரை லட்சம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மரணமடைந்தவர்கள் சுமார் 14,000 பேர். இந்தியாவின் இந்த நிலைக்கு லாக் டௌன் எனப்படும் முழு முடக்கம் பெரும் தோல்வியடைந்ததே காரணம் என்கிறார்கள் பலர். காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி, இந்தியாவின் லாக் டௌன் தோல்வி என ட்விட்டர் வழியாகக் குற்றம் சாட்ட, பலவாறாக விவாதிக்கப்பட்டது முழு முடக்கம். அந்த விவாதங்களின் சில முக்கிய அம்சங்கள் இந்தக் கட்டுரையில் .....

ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு
ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு

பெருந்தொற்று நேரத்தில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டிய தேசியப் பணிக் குழுவின் (National Task Force) வேலை, அரசுக்கு இந்தத் தொற்றைச் சமாளிக்கச் சரியான திட்டங்களைப் பரிந்துரைப்பது. ஆனால் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த தொற்றுநோயியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களிடம் கூட அரசு முறையாகக் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, சம்பந்தப்பட்டவர்களே இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்க, அரசின் திறன் மீதான நம்பிக்கை அங்கிருந்தே கேள்விக்குறியானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முக்கியமாக, நிபுணர்களைக் கேட்காமல் விஞ்ஞானம் அற்ற முறையில் லாக் டௌன் செயல்படுத்தப்பட்டது என்று பல தரப்புகளிலிருந்து அரசின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மாஸ்க் அணிவது, சமூக விலகல் போன்றவை நோய்த் தொற்றைக் குறைக்குமே தவிர முழுவதுமாகக் கட்டுப்படுத்தாது. அரசு முடக்கம் அறிவித்த அதே நேரத்தில் நோய்த் தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்துவது (testing), மருத்துவக் கட்டுமானத்தைப் பலப்படுத்துவது (medical infrastructure), தொடர்பு தடமறிதலை (contact tracing) அதிகப்படுத்துவது போன்ற முக்கியமான முன்னெடுப்புகளைச் செய்ய அரசு தவறிவிட்டது. மேலும், முழு முடக்கம் மட்டுமே கொரோனவை வெல்லப் போதுமானது என்ற தவறான புரிதல் பலரிடம் இருந்தது மிகவும் ஆபத்தை விளைவித்தது.

Corona test (Representational Image)
Corona test (Representational Image)

இந்தியப் பிரதமர் மோடி, ஊடகங்களில் ஆற்றிய உரைகளில் ஆக்கப்பூர்வமான தரவுகளைப் பகிர்ந்துகொள்ளாமல், அரசியல் கருத்துகளையும், வெற்று நம்பிக்கைகளையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். உதாரணமாக, ``இது 21 நாள் போர்” என ஒரு உரையில் அவர் குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். வெறும், 21 நாள்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை அவர் அறிந்திருப்பார். ஆனால், அவரைக் கண்மூடித்தனமாக நம்பும் மக்கள் இந்த நோய்த் தொற்று பரவலின் தீவிரத்தையும், ஆபத்தையும் அவரின் உரைகளின் மூலம் புரிந்துகொள்ளவில்லை. அவர் புரியவைக்கவும் இல்லை.

மேலும், ``மக்கள் தொகை அடர்த்தி மிகக் குறைவான மேலை நாடுகளைப் போலவே, இந்தியாவைக் கையாண்டது தவறு” என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள் விஞ்ஞானிகள். நமது நாட்டின் தனித் தன்மையைக் கணக்கில் கொள்ளாமல் பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, நோய்த் தொற்றின் சாத்தியங்களை ஆராய்வது சரியான முடிவுகளைத் தராது. நோய்த் தொற்று பரவுதல் பற்றிய அறிவியல்பூர்வமான கணிப்புகளைச் சரியாக எடுக்கத் தவறியது லாக் டௌன் தோல்விக்கான முக்கியக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு பெரு நகரங்களிலும் 20% மக்கள் வீடற்ற நிலையிலோ அல்லது மிக மோசமான குடியிருப்பு வசதிகளில் நெருக்கமாக வாழ்கிறார்கள். பலர் தங்கள் சொந்த மண்ணிலிருந்து நீண்ட தொலைவில் புலம்பெயர் தொழிலாளர்களாக வாழ்கிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்கு வழி செய்யாமல் அரசு திடீரென முடக்கம் அறிவித்தது.

கோயம்பேட்டில் கூடிய தமிழ் மக்கள் தொடங்கி, சாலைகளில் நிறைந்த வடமாநிலத் தொழிலாளர்கள் வரை, சொந்த ஊர் செல்ல மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர நேரிட்டது. முறையான திட்டமிடல் இல்லாத அரசின் இந்த அவசரப் போக்கால், பலர் உயிரிழக்க நேரிட்டது. அதுமட்டுமன்றி, நோய்த் தொற்றும் பல இடங்களிலும் பரவியது.

அரசு ஒருவேளை சரியாகத் திட்டமிட்டிருந்தால், புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் இருக்கும் இடங்களிலேயே தங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்க முடியும். அதன் மூலம், பல அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்க முடியும்.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

தொடர்ந்து ஆதாரமற்ற செய்திகளையும், தவறான தகவல்களையும் மக்களிடம் சிலர் கொண்டு சேர்த்தது, அரசும் அதிகாரிகளும் இந்த ஆபத்தைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தத் தவறியது ஆகியவை கொரோனா விஷயத்தில் இந்தியாவின் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

உதாரணமாக, அரசின் சிறப்புப் பணிக் குழுவின் தலைவர் வினோத் பால், ஏப்ரல் 24-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். அப்போது அவர் சமர்ப்பித்த கணிப்புகள் படி, ``மே 16-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்காது'' என்றார். ஆனால், அதிவேகப் பாய்ச்சலில் இன்று நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

இதேபோல ஏப்ரல் மாதம் அரசு தரப்பில் பகிரப்பட்ட செய்தியில், . இந்தியாவில் முழு முடக்கம் வெற்றிபெற்றது என எப்படியாவது நிரூபிக்க வேண்டிய நோக்கம் மட்டுமே இருந்தது. அதன் காரணமாக, அடிப்படையற்ற தரவுகள் அரசு சார்பில் பகிரப்பட்டன. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 22 -ம் தேதி covid -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 341. அதன்பிறகு முதல் முடக்கம் முடிவடைந்த ஏப்ரல் 15 -ம் தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 12,000.

``ஒருவேளை முடக்கம் இல்லையெனில், இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கும்" என்று அரசு ஒரு அறிக்கையில் சொன்னது. இந்திய அரசின் இந்த அறிக்கைக்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின.

உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் சல்மான் சோஸ் இதுபற்றிக் கூறுகையில், ``முடக்கம் இல்லையெனில் 21 நாளில் எட்டு லட்சம் பேருக்கு நோய் பரவியிருக்கும் என்று அரசு சொல்வது உண்மையானால், ஒருநாளைக்கு நோய் பரவும் வேகம் சராசரியாக 40 சதவிகிதமாக இருக்க வேண்டும். நான் கணக்கிட்ட 51 நாடுகளில் ஒரு நாடு கூட இந்த நோய்ப் பரவல் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதுவரை, உலகிலேயே அதிக வேகமாக நோய் பரவிவரும் ரஷ்யாவில் கூட 19 சதவிகிதம்தான் பதிவாகியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய மற்றொரு தரவும் இருக்கிறது. ரஷ்யாவில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் நோய் பரவும் வேகம் பத்தொன்பது சதவிகிதமாக இருந்தது. ஆனால், ஸ்பெயின் நாட்டில் முடக்கம் அறிவிக்கப்படவில்லை எனினும், அங்கு நோய் பரவும் தினசரி சராசரி விகிதம் 7 மட்டுமே. கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு முடக்கம் மட்டுமே போதாது என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

நோய் பரவுவதைத் தடுக்காமல் விட்டது, உயிரிழப்புகளைக் குறைப்பதில் தவறவிட்டது மட்டும் முழு முடக்கத்தின் தோல்வி அல்ல. இந்தியாவின் பொருளாதாரம் மரணப் படுக்கையில் வீழ்ந்ததற்கும் இந்த முழு முடக்கம் காரணமாகி இருக்கிறது. இந்த முடக்கத்தின் காரணமாக இந்தியாவுக்குச் சுமார் 300 பில்லியின் டாலர் பொருள் இழப்பு ஏற்படும் எனக் கணித்திருக்கிறது ஒரு சர்வதேச நிறுவனம். இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக விளங்கிய சிறு குறு தொழில்கள் பெரும் சரிவில் இருக்கின்றன. இனி எதிர்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், பசி எனப் பல கொடுமைகளைச் சந்திக்க இருக்கிறது இந்தியா. திட்டமிடப்படாத அரசின் அவசர முடிவுகளே இதற்கும் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்த் திட்டமும், இன்று வரை எட்டாத தூரத்தில் இருக்கும் நிலையில், இந்த முடக்கம் இந்தியாவுக்கு நோய்த்தொற்றை விடவும் பெரும் ஆபத்தாக இருக்கிறது.

அவசர அவசரமாக மற்ற நாடுகளைப் பார்த்து, முறையான ஆலோசனைகள், திட்டமிடல் இன்றி முழு முடக்கத்தை அரசு அறிவித்திருக்க வேண்டாம் என்பதே பல அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தியாவில் மிக மெதுவாகத்தான் நோய் பரவியது. மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்படி இல்லாமல், சற்று தாமதித்து முடக்கத்தைக் கொண்டு வந்திருந்தால், மக்களும், அரசும் முடக்கத்தைச் சமாளிக்க முழு ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியும். நமக்கு அதற்கான வாய்ப்பு இருந்ததாகவே விவரம் அறிந்தோர் சொல்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால், புலம்பெயர் தொழிலாளர்கள் முறையாக அவர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றிருப்பார்கள். தொழிற்சாலைகள் ஸ்தம்பிக்காமல் நிதானமாக தங்கள் தயாரிப்புகளை நிறுத்தியிருக்க முடியும். மார்ச் மாத இறுதியில் நடப்பாண்டு கணக்குகள் முறையாக முடிக்கப்பட்டிருக்கும். அது பொருளாதார தேக்க நிலையைக் குறைத்திருக்கும். மாணவர்களின் தேர்வுகள் முடிந்திருக்கும். இன்னும் நிறைய இப்படியான நன்மைகளைத் தாமதித்த திட்டமிட்ட முழு முடக்கம் சாத்தியப்படுத்தி இருக்கும். என்பது அவர்கள் வாதம்.

corona-india
corona-india

அரசின் அனைத்து முடிவுகளும் வெறும் அரசியலாக மட்டுமே இருக்கிறது என்பதே இன்று பலரது புலம்பலாக இருக்கிறது.

ஒருநிமிடம் கொரோனவை டைட்டானிக் கப்பலாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும் போது, உயிர் காக்க லாக் டௌன் எனும் லைஃப் போட்டில் ஏறுவதிலேயே குறியாக இருந்தது அரசு. அதுவும் அனைத்து மக்களுக்கும் லைஃப் போட் வசதி இல்லை, இருந்த லைஃப் போட் அனைத்தும் சமமாகச் சரியாகப் பயன்படுத்தப்படவும் இல்லை. முக்கியமாக அரசு கரை சென்று சேர்வதற்கான வழியையும் அறிந்திருக்கவில்லை. இந்தநிலையில், அரசு ஏறி அமர்ந்த படகிலும் ஓட்டைவிழவே, அவசரமாக தற்போது நடுக்கடலில் குதித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.