Published:Updated:

எப்படி அமையவிருக்கிறது ராமர் கோயில்? - அயோத்தி ஸ்பாட் விசிட்

அயோத்தி
அயோத்தி

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரிகளில் ஒருவரான சரத் ஷர்மா, "இதுதான் இறுதி மாடல். இதன் அடிப்படையில்தான் கோயில் கட்டப்படும். முப்பது வருடங்களாக இதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க 24 கதவுகள். நிருத்ய மண்டபம், ரங் மண்டபம் தனித்தனியாக அமையப்பெறும். கீழ்த்தளத்தில் ராமர் சிலை. மேல்தளத்தில் 'ராமர் தர்பார்'. கீழ்த்தளத்தில் 106, மேல்தளத்தில் 106 என மொத்தமாக 212 தூண்கள். தூண்கள் ஒவ்வொன்றும் 16 அடி உயரம்கொண்டது. ஒவ்வொரு தூணிலும் 16 சிற்பங்கள். இவை தவிர, பிரமாண்டமான ராமர் ரதம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது ராமர் கோயில். சர்வதேச அளவில் அயோத்தியை இந்துக்களின் புனித பூமியாக்கும் வகையில் இருக்கின்றன இவர்களின் யோசனைகள். விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2QQhjG1

இவை மட்டுமா... இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராம் ஷிவபுரத்தில் ராமாயண இதிகாசத்தை கற்சிற்பங்களில் கதையாக வடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 125 ஸ்கிரிப்ட்டுகள். அவை 125 பீடங்களில் தயாராகிவருகின்றன. அங்கு இருக்கும் சிற்பக்கலைஞர் ரஞ்சித் மண்டலிடம் பேசினேன். "2006-ம் ஆண்டிலிருந்து 13 வருடங்களாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுவரை 40 பீடங்கள் வடிக்கப்பட்டு, வண்ணப்பூச்சு வேலை மட்டும் பாக்கி இருக்கிறது. தீர்ப்பு வந்துவிட்டதால் பணிகளை மேலும் தீவிரமாக்கியிருக்கிறோம்" என்றார்.

எப்படி அமையவிருக்கிறது ராமர் கோயில்? - அயோத்தி ஸ்பாட் விசிட்

இன்னொரு பக்கம் வேறுமாதிரியான திட்டங்களும் சொல்லப்படுகின்றன. அயோத்தியைச் சுற்றி ஏராளமான இந்து சாதுக்கள் இருக்கிறார்கள். இவர்களில் காங்கிரஸ், பா.ஜ.க என கட்சி சார்புடையவர்களும் உண்டு; அரசியலுக்கு அப்பாற்பட்டு பக்தியே பிரதானம் என நினைப்பவர்களும் உண்டு. பா.ஜ.க கட்சி சார்புடைய இந்து சாதுக்கள், '`2023-ம் ஆண்டுக்குள் ராமர் கோயிலைக் கட்டிவிட வேண்டும்'' என்கிறார்கள்.

``கோயிலைக் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெறும் நாளில், தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளையும் அயோத்திக்கு அழைத்து மரியாதை செய்யவேண்டும்'' என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். 2023-ம் ஆண்டுக்குள் ராமர் கோயிலைக் கட்டி முடித்தால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரம்மாஸ்திரமாக பா.ஜ.க இதைப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவர்களுக்குள் மற்றொரு தரப்பினரோ, ''ராமர் கோயில் இந்துக்களின் ஆன்மா; இந்தியாவின் பெருமை. இதை தேர்தல் மற்றும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது" என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் 'நிர்மோகி அகாரா' என்னும் சாதுக்கள் அமைப்பினர், ராமர் கோயிலின் மாதிரியை ஏற்றுக் கொள்ளவில்லை. 'நிர்மோகி அகாரா' என்றால் 'பற்றற்றக் குழு' என்று பொருள். இந்தக் குழுவும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலைக் கட்டும் உரிமையைக் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது. உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் அதை நிராகரித்திருந்தது.

'நிர்மோகி அகாரா' அமைப்பின் தலைமை சாதுக்களில் ஒருவரான மஹந்த் ராஜா ராமசந்திர ஆச்சார்யா, "இது ஒன்றும் மாடர்ன் காம்ப்ளெக்ஸ் அல்ல. கோயிலுக்கென சில கடமைகள், பிரார்த்தனை முறைகள், மரபுகள் உள்ளன. அவற்றையொட்டியே கோயிலின் மாதிரி முடிவுசெய்யப்பட வேண்டும். கோயிலைக் கட்டுவதற்கான அறக்கட்டளைக் குழுவில் எங்களையும் சேர்க்க வேண்டும். கோயிலின் இறுதி மாதிரியை முடிவுசெய்யும் முன் எங்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்" என்று எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்.

இதுமட்டுமல்ல... "ராம ஜென்ம பூமி ந்யாஸ், கோயில் கட்டுவதாகச் சொல்லி பக்தர்களிடம் கடந்த முப்பது வருடங்களாக பணம் வசூல் செய்கிறது. அதன் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்றும் கேட்டிருக்கிறது 'நிர்மோகி அகாரா'.

எப்படி அமையவிருக்கிறது ராமர் கோயில்? - அயோத்தி ஸ்பாட் விசிட்

ஆனால், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரிகளில் ஒருவரான சரத் ஷர்மா, "இதுதான் இறுதி மாடல். இதன் அடிப்படையில்தான் கோயில் கட்டப்படும். முப்பது வருடங்களாக இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. ஆகமவிதிகளின்படியே கோயில் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை அமித் ஷாவும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அறக்கட்டளையில் இடம்பெற வேண்டும். தேவைப்பட்டால் அதற்கேற்ப விதிகளைக்கூட மாற்றி அமைப்போம்" என்கிறார்.

குஜராத்தின் சோம்நாத் கோயில் கட்டப்பட்டபோது அதற்காக அமைப்பட்ட அறக்கட்டளையில் மத்திய அமைச்சர் கே.கே.முன்ஷி இடம்பெற்றிருந்ததை இதற்கு முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள். சோம்நாத் கோயிலின் வரலாற்றைப் படித்தபோது பிரதமர் மோடியின் மாஸ்டர் பி்ளான் கண்முன் விரிந்தது!

- அயோத்தி காவல் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ராம ஜென்ம பூமி ந்யாஸ். அது என்ன ராம ஜென்ம பூமி ந்யாஸ்? > செய்தியாளர் பரிசல் கிருஷ்ணாவின் அயோத்தி நேரடி விசிட் ரிப்போர்ட்டிங்கை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > நிலம் நீதி அயோத்தி 4: இந்துக்களின் சர்வதேச புனிதபூமியாகும் அயோத்தி! https://www.vikatan.com/news/policies/400-muslim-families-shifted-places-what-is-happening-in-ayodhya-vikatan-spotvisit

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு