Published:Updated:

சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி? #DoubtOfCommonMan

சாதிச் சான்றிதழ் / Representational Image
News
சாதிச் சான்றிதழ் / Representational Image

சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவதற்கென அரசாங்கத்தில் தனி வழிமுறைகள் எதுவும் கிடையாது. வழக்கமாக சாதிச் சான்றிதழ் பெறுவது போலத்தான் சான்றிதழ் பெறமுடியும்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``சாதி மதம் அற்றவர் சான்றிதழ் வாங்குவது எப்படி? அதை அரசுத்துறை சார்ந்த விண்ணப்பங்களில் குறிப்பிடலாமா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் சூர்யபிரகாஷ். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சாதி, மத ஒழிப்பு குறித்த உரையாடல்கள் எழும்போதெல்லாம் , `சாதிச் சான்றிதழ்களில் சாதியற்றவர்களாகக் குறிப்பிட்டாலே சாதி ஒழியும்' என்ற கருத்தும் முன்வைக்கப்படும்'. ஆனால், அது சரியான தீர்வு அல்ல. மக்களின் மனமாற்றமே முழுமையான தீர்வாக அமையும் என்றும் சிலர் கருதினாலும், சாதி, மத அடையாளமற்றவர்களாகப் பதிவு செய்வதைப் பலரும் வரவேற்கவே செய்கிறார்கள்.

சாதி, மத அடையாளமற்றவர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறவர்களில் சிலர் சாதிச் சான்றிதழிலும் சாதி, மதம் இல்லை எனக் குறிப்பிட முடிவெடுக்கின்றனர். அவ்வாறு சாதி, மதம் இல்லை எனப் பெறப்படும் சான்றிதழ்களைக் கொண்டு அரசுத்துறை சார்ந்து விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். இந்தியாவில் முதல்முறையாக சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெற்றுள்ள வழக்கறிஞர் ம.ஆ.சினேகாவிடம் இதுகுறித்துப் பேசினோம்.

``சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவதற்கென அரசாங்கத்தில் தனி வழிமுறைகள் எதுவும் கிடையாது. வழக்கமாக சாதிச் சான்றிதழ் பெறுவது போலத்தான் சான்றிதழ் பெறமுடியும். கிராம நிர்வாக அலுவலரிடம் (V.A.O) நாம் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். அதை அவர் உறுதிசெய்து வருவாய் ஆய்வாளருக்கு (R.I) பரிந்துரை செய்வார். வருவாய் ஆய்வாளர் அதை வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்வார். வட்டாட்சியர் அதைத் சரிபார்த்து சம்பந்தப்பட்ட பகுதியின் வி.ஏ.ஓ நேரில் சென்று கள ஆய்வு நடத்திய பின் சான்றிதழ் வழங்கப்படும்.

ம.ஆ.சினேகா
ம.ஆ.சினேகா

இதுதான் சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கான வழிமுறை. சாதி, மதமற்றவர் (`No Caste No Religion') எனச் சான்றிதழ் பெறவும் இதே வழிமுறைதான். நான் முதல்முறையாக இந்தச் சான்றிதழ் பெறுவதால் அந்த விண்ணப்பத்துடன் என் பள்ளி மாற்றுச் சான்றிதழை (School Transfer Certificate) சமர்ப்பித்தேன். அதில் நான் சாதி, மதம் அற்றவர் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதைச் சான்றாக வைத்து எனக்கு `No Caste No Religion' சான்றிதழ் வழங்கினார்கள். இதைப் போலவே சான்றிதழ் யாராவது வைத்திருந்தார்கள் எனில், அதை ஆவணமாக சமர்ப்பித்து `No Caste No Religion' சான்றிதழ் பெறலாம். நான் சான்றிதழ் பெற்ற பிறகு, ஊட்டியைச் சேர்ந்த பகத்சிங், சுக்தேவ் , ராஜகுரு என்ற மூன்று சகோதரர்கள் வாங்கினார்கள். அவர்களின் பள்ளிச் சான்றிதழிலும் `No Caste No Religion' என அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆத்தூரைச் சேர்ந்த ரவி என்கிற தோழர் தனது MBC சான்றிதழைக் கொடுத்துவிட்டு `No Caste No Religion' சான்றிதழ் பெற்றார். இது சவாலான ஒன்று. ஏற்கெனவே சாதிச் சான்றிதழ் வைத்திருந்தவர் அதைச் சமர்ப்பித்துவிட்டு `No Caste No Religion' சான்றிதழ் வாங்கினார். இவர் மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் சாதியைக் குறிப்பிட்டு பின் `No Caste No Religion' சான்றிதழ் பெற்றவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவற்றையெல்லாம்விட கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று எங்களுக்கெல்லாம் சான்றிதழ் வழங்கிய தாசில்தார்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருந்ததுதான். ஏனென்றால், இவ்வாறு சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கேட்கும்போது வழங்க முடியாது எனத் தெரிவிக்க தாசில்தார்களுக்கு சட்டப்படியான உரிமை உண்டு. `No Caste No Religion' சான்றிதழ் வழங்க வேண்டும் என எந்த அரசாணையும் நீதிமன்ற உத்தரவும் கிடையாது. எனவே, தாசில்தார்கள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு அதை மறுக்கவும் வாய்ப்புள்ளது.

Doubt of common man
Doubt of common man

தமிழ்நாடு அரசு, பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே இது நடைமுறையில் உள்ளது. பள்ளிச் சான்றிதழில் சாதி, மதம் எனக் குறிப்பிட்டுள்ள இடத்தில் `Verify Community Certificate' எனக் குறிப்பிடுகிறார்கள். `No Caste No Religion' சான்றிதழை அரசுத்துறை சார்ந்த விண்ணப்பங்களில் பயன்படுத்தலாம். ஊட்டியில் `No Caste No Religion' சான்றிதழ் பெற்ற சுகுதேவ் தற்போது ராணுவத்தில் சேர்ந்துள்ளார். அவர் `No Caste No Religion' சான்றிதழைச் சமர்ப்பித்தே பணியில் சேர்ந்தார். அதிகாரிகள் அவரை வெகுவாகப் பாராட்டியும் உள்ளனர். `No Caste No Religion' சான்றிழ் வழங்கலாம் என அரசாணை வரும்போது இது இன்னும் எளிமையாகும். இடஒதுக்கீடு மட்டுமே சமூகநீதியைக் குறைந்த அளவேனும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இடஒதுக்கீடு மூலம் பயனடைபவர்கள், முதல்முறை பட்டதாரிகள் சாதிச் சான்றிதழ்களையே பயன்படுத்த வேண்டும் என்பதான் நம் எண்ணம். `No Caste No Religion' சான்றிழ் வாங்குவதால் மட்டுமே சாதி ஒழியும் என்பதும் சரியானதல்ல" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!