Published:Updated:

மோடி அரசின் 100 நாள்கள் ஆட்சி... பி.ஜே.பி-யினரின் 'தவிப்பு'!

விகடன் டீம்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானியவிலையில் சிலிண்டர், விவசாயிகளுக்கு உதவும் கிசான் சமான் திட்டம், மழைநீரைச் சேகரிக்கும் ஜல்சக்தி திட்டம், போக்சோ சட்டத்திருத்தம், போக்குவரத்துச் சட்டத்திருத்தம் எனச் சில விஷயங்கள் பாராட்டத்தக்கவை.

modi
modi

'பிரதமர் நரேந்திர மோடி 2.0 அரசு' பதவியேற்று, செப்டம்பர் 6-ம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்துவிட்டன. 70 ஆண்டுகளுக்கும்மேலாக எந்த ஓர் அரசும் செய்யத் துணியாத காரியங்களை, கனகச்சிதமாகச் செய்துவருகிறது இந்த அரசு. இந்த அதிரடி அரசியல் சிலம்பத்துக்கு, மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி பெற்றுள்ள அசுரபலம் உதவியுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் செய்ய முடியாத வேலைகளை 'மோடி 2.0' ஆட்சியில், எந்தத் தயக்கமுமின்றி நிறைவேற்றி வருகின்றனர்.

என்னதான் பல அதிரடி அரசியல் சடுகுடு ஆட்டத்தை ஆடினாலும் பொருளாதார மந்தநிலை, மோடி அரசுக்கு சற்று அயர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதனால், '100 நாள்கள் ஆட்சி சாதனை' என்று கொண்டாட முடியாமல், அவர்கள் ரொம்பவே தவிக்கின்றனர். > விரிவாக அலசும் ஜூனியர் விகடன் சிறப்புக் கட்டுரைக்கு > 100 நாள்களைக் கடந்த மோடி 2.0 ஆட்சி... சாதனையா... வேதனையா? https://www.vikatan.com/government-and-politics/politics/analysing-100-days-of-narendra-modis-regime

Modi
Modi

துணிச்சலும் விமர்சனமும்

தன் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆட ஆரம்பித்திருக்கிறார் மோடி. ஒரே காரணம்... முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 300-க்கும் மேல் எம்.பி-க்கள் கிடைத்திருக்கும் துணிச்சல். இந்தத் துணிச்சலே இன்னொருபுறம் எதிர்ப்பாளர்களின் விமர்சனப் பொருளாகவும் மாறியிருக்கிறது.

மோடி செய்துள்ள பல விஷயங்கள் ஒரே நேரத்தில் சாதனையாகவும் வேதனையாகவும் பார்க்கப்படுவதுதான் முரண்நகை. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகளவிலான மசோதாக்களை நிறைவேற்றிய முதல் மக்களவைத் தொடர் என்ற சாதனையும் இதில் அடக்கம். விரிவாக படிக்க.... http://bit.ly/2mdy6FC

இவற்றில் முத்தலாக், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், என்.ஐ.ஏ மற்றும் உபா சட்டத்திருத்தங்கள், தேசிய மருத்துவ ஆணைய மசோதா, ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற மசோதாக்கள் கடும் எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளன.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானியவிலையில் சிலிண்டர், விவசாயிகளுக்கு உதவும் கிசான் சமான் திட்டம், மழைநீரைச் சேகரிக்கும் ஜல்சக்தி திட்டம், போக்சோ சட்டத்திருத்தம், போக்குவரத்துச் சட்டத்திருத்தம் எனச் சில விஷயங்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் இவையெல்லாம் அறிவிப்புகள் என்ற நிலையில் இருக்கின்றனவே தவிர, அவை நடைமுறைக்கு வரும்போதுதான் விடை தெரியும். சென்ற ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 'தூய்மை இந்தியா' திட்டமும் பாராட்டுக்குரியதுதான். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்டு முழுவெற்றி அடையவில்லையே?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கமும் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலைக்குக் காரணமென்ற வாதம் வலுத்துள்ளது. "கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துவருகிறது" என்கிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை, மோடி எதிர்ப்புதான் இதன் அடிப்படை என்று மறுக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

Modi
Modi

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தில் பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பல தரப்புகளால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இத்திட்டத்துக்கு 60,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் கைது, மோடி அரசின் துணிச்சல் என்று ஒருபக்கம் பாராட்டும் இன்னொருபுறம் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனங்களும் குவிகின்றன.

யார் என்ன விமர்சித்தாலும் தங்கள் அதிரடி நடவடிக்கைகளைத் தொடரத்தான் செய்கிறார்கள் 'கிருஷ்ணன்' அமித்ஷாவும் 'அர்ஜுனன்' மோடியும். துணிச்சல் நல்லதுதான். ஆனால் அது நாட்டுக்கு நல்லதாக இருக்கவேண்டுமே? > இதுதொடர்பான ஆனந்த விகடன் இதழின் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/government-and-politics/politics/a-progress-report-on-modis-100-days-of-rule

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/