Published:Updated:

இந்தியா 75: வாக்குரிமை, கல்வி உரிமை டு தகவல் உரிமை - சுதந்திர இந்தியாவின் டாப் 10 உரிமைகள்!

இந்தியா 75

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழலை எளியவர்களும் வெளிக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இந்தியா 75: வாக்குரிமை, கல்வி உரிமை டு தகவல் உரிமை - சுதந்திர இந்தியாவின் டாப் 10 உரிமைகள்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழலை எளியவர்களும் வெளிக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

Published:Updated:
இந்தியா 75
வறிய தேசம் என்ற அடையாளத்துடன் சுதந்திரம் பெற்ற இந்தியா, 75 ஆண்டுகளில் உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்தியாக உச்சம் பெற்று நிற்கிறது. `எல்லோரையும் இணைத்த வளர்ச்சி' என்பதை நம் தேசத்தில் சாத்தியமாக்கிய 10 விஷயங்கள் இங்கே...

1. அமெரிக்கா சுதந்திரம் பெற்றபிறகு அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க 150 ஆண்டுகள் ஆனது. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலிலேயே எல்லோருக்கும் வாக்குரிமை வந்துவிட்டது. 1951-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலை நாம் நடத்தினோம். அவசரநிலை கால கறுப்பு வரலாற்றைத் தாண்டி, உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக தழைத்து நிற்கிறது இந்தியா.

2. நம்முடன் சுதந்திரம் அடைந்து பிரிந்த பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் போனது. சீனாவோ ஒற்றைக் கட்சியின் சர்வாதிகாரக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தியர்கள் 75 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் ஆகிய நான்கு தூண்களும் தாங்கி நிற்கும் அழகிய ஜனநாயக மண்டபமே இந்தியா!

சட்டம்
சட்டம்

3. உலகின் மிக நீளமான அரசியல் சட்டம் இந்தியாவுடையது. தேவைப்படும் இறுக்கமும், அவசியமான நெகிழ்வுத்தன்மையும் கொண்டது இது. அரசியல் சட்டம் ஏற்கப்பட்ட 1950-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் அதில் செய்யப்பட்டுள்ளன.

4. பொதுநல வழக்கு என்ற ஆயுதத்தை எளிய இந்தியர்களின் கையில் 1979-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்தது. நீதி தேவதையின் கரங்களை எந்தப் பிரச்னைக்கும் எவரும் இறுகப் பற்ற முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது. ஒரு சாதாரண போஸ்ட் கார்டு கூட மனுவாக ஏற்கப்பட்டு நீதி விசாரணை நடத்தி தீர்ப்பு சொன்ன அதிசயங்கள் நிகழ்ந்த மண், இந்தியா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5. அதிக விளைச்சல் தரும் பயிர்கள், உரங்கள், பாசன வசதிகள் எனப் பசுமைப் புரட்சியே இந்திய விவசாயத்தின் முகத்தை மாற்றியது. சர்ச்சைகள் இருந்தாலும், இதுவே பட்டினிச் சாவுகளைத் தடுத்தது. பாலுக்காக ஏங்கிய இந்தியாவை, டாக்டர் வர்கீஸ் குரியன் ஏற்படுத்திய வெண்மைப் புரட்சி, உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றியது.

6. பொருளாதார தாராளமயமாக்கலை 91-ம் ஆண்டு அனுமதித்தது இந்தியா. அந்நிய முதலீடுகளை அனுமதித்து, திறந்த பொருளாதாரத்தை அது உறுதி செய்தது. தடுமாறிக் கொண்டிருந்த இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கிய முடிவு அது. இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

7. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கிராமப்புற மக்களுக்கு ஆண்டில் 100 நாள் வேலையை உறுதி செய்தது. வறுமையும் பசியும் நீங்குவதற்கான ஆதாரமாக இது இருந்தது. இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும், கிராமப் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் உன்னதமான நோக்கம் கொண்ட திட்டம் இது.

8. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழலை எளியவர்களும் வெளிக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. கடைக்கோடி கிராமத்தில் இருப்பவரும் துணிச்சலுடன் தலைநகர அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் வாய்ப்பை இது கொடுத்தது.

9. கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டாய இலவசக் கல்வியை ஏழைக் குழந்தைகளுக்கும் சாத்தியமாக்கிய நடைமுறை இது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக இது மாற்றியது. தனியார் பள்ளிகளிலும் கூட எளிய குடும்பங்களின் குழந்தைகள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை இது அளித்தது.

Education (Representational Image)
Education (Representational Image)

10. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-ம் ஆண்டு அமலானது. மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் இந்தத் திட்டம், வறிய குடும்பங்களின் பசி நோயைப் போக்கி உணவு உரிமையை வழங்கியது.