Published:Updated:

சுருங்கிய இந்தியப் பொருளாதாரம்: தொழிலதிபர்கள் கொதிப்பது ஏன்?

modi
modi

45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 22 - 24 சதவிகிதம் இருந்த ஏற்றுமதி, 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. உற்பத்திக்குத் தேவையான தளவாடப் பொருள்களின் இறக்குமதி கணிசமாகக் குறைந்து விட்டது.

நிலையான ஆட்சியைத் தருவோம்' என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் களமிறங்கிய பி.ஜே.பி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சரி... ஆட்சி நிலைபெற்றுள்ளதுதான். ஆனால், நாட்டின் பொருளாதாரம்? அது சரிந்துகொண்டிருப்பதாக, குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு மாதகாலம் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக், காஷ்மீர் போன்ற விவகாரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டதால், சரிந்துள்ள இந்தியப் பொருளாதாரம் குறித்த விவாதங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. https://bit.ly/31TBJjG

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே, பொருளாதாரம் சரிந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. ஆனால், வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அதைக் கண்டும்காணாமலும் இருந்தனர். 'மிஷன் காஷ்மீர்' ஆபரேஷன் முடிந்த பிறகு இயல்புநிலைக்குத் திரும்பிய ஆட்சியாளர்கள், இப்போது தொழிலதிபர்களை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். 'பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

"நாட்டின் மொத்த வருமானத்தில் ஏழு சதவிகிதம், பெரிய கார்ப்பரேட்களின் லாபமாக இருந்தது. இன்றைக்கு அது இரண்டு சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

அதிக மதிப்புகொண்ட பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 7-வது இடத்துக்குப் போய்விட்டது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறை தலைவரான பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் பேசும்போது, "2014-ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு, ஜி.டி.பி-யைக் கணக்கிடும் முறை மாற்றப்பட்டது. பழைய கணக்கீட்டு முறையில் இந்தியாவின் இப்போதுள்ள பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தால், 3.3 சதவிகிதம் என்கிற அளவுக்கு மட்டுமே இருக்கிறது. இதன் விளைவுகள் கடுமையாக உள்ளன.

45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 22 - 24 சதவிகிதம் இருந்த ஏற்றுமதி, 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. உற்பத்திக்குத் தேவையான தளவாடப் பொருள்களின் இறக்குமதி கணிசமாகக் குறைந்து விட்டது. ஜி.டி.பி-யில் 40 - 45 சதவிகிதம் என்ற அளவில் இருந்த ஏற்றுமதியும் இறக்குமதியும் தற்போது 23 - 24 சதவிகிதமாகக் குறைந்துவிட்டன. ஸ்டீல், சிமென்ட் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் வளர்ச்சி 0.2 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நம்முடைய பொருளாதாரம் சுருங்கிவிட்டது என்பதையே காட்டுகிறது" என்றார்.

indian economy
indian economy

ஆடிட்டரும் பொருளாதார நிபுணருமான எம்.ஆர்.வெங்கடேஷ் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, "நாட்டின் மொத்த வருமானத்தில் ஏழு சதவிகிதம், பெரிய கார்ப்பரேட்களின் லாபமாக இருந்தது. இன்றைக்கு அது இரண்டு சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. அதனால் தொழிலதிபர்கள் இன்று கொதிக்கிறார்கள். எங்கேயோ கொஞ்சம் பிரச்னை இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், பூகம்பமாக வெடித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அது இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும்" என்றார்.

- 30 ஆண்டுகள் பின்னோக்கி, வெளியே போன ரூ.65,383 கோடி, அச்சுறுத்தும் 'வரி பயங்கரவாதம்!', அறிகுறிகள் தெரியவில்லை, பிரதமர் தரும் நம்பிக்கை, ஜி.டி.பி கணக்கீடு - எது சரி, எது தவறு?, ஆலோசகர்கள் எங்கே போனார்கள்? உள்ளிட்ட தலைப்புகளுடன் அலசும் விரிவான சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > வேகமாகச் சரிகிறதா இந்தியப் பொருளாதாரம்? - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி https://www.vikatan.com/government-and-politics/news/special-story-about-indian-economy

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு