Published:Updated:

``வீழ்வோம்... வெல்வோம்... அதற்காக ரஜினிகாந்தை அனுமதிக்க முடியாது!” - சீமான்

சீமான்

`ராமதாஸ், வைகோ, திருமா போன்றோரை அருகேயிருந்து பார்த்துவிட்டேன். அவர்கள் செய்த தவற்றை நாம் செய்யக்கூடாது என்றே தனித்துக் களம் காண்கிறோம்'

``வீழ்வோம்... வெல்வோம்... அதற்காக ரஜினிகாந்தை அனுமதிக்க முடியாது!” - சீமான்

`ராமதாஸ், வைகோ, திருமா போன்றோரை அருகேயிருந்து பார்த்துவிட்டேன். அவர்கள் செய்த தவற்றை நாம் செய்யக்கூடாது என்றே தனித்துக் களம் காண்கிறோம்'

Published:Updated:
சீமான்

தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆளும் அ.தி.மு.க அமைச்சர் பெருமக்களுக்குப் போட்டியாக எதிர்க்கட்சிகளும் தங்கள் படை, பரிவாரங்களைக் களத்தில் இறக்கி பிரசாரம் செய்துவருகின்றன.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இந்நிலையில், அ.தி.மு.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே, நாம் தமிழர் கட்சியும் இடைத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக வேட்பாளர்களைத் துணிச்சலாகக் களமிறங்கியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளோடு புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்து, ஒட்டுமொத்த அரசியல் உலகின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கருணாநிதி
கருணாநிதி

அவரை சந்தித்துப் பேசினோம்... ''கடந்த 10 ஆண்டுகளாக தனித்தே தேர்தல் களத்தை எதிர்கொள்வதும், மிக மெதுவான வளர்ச்சி விகிதமும் நாம் தமிழர் தம்பிகளுக்கு ஒருவித சலிப்பு உணர்வை ஏற்படுத்திவிடாதா?''

''பதவி உள்ளிட்ட சுய எதிர்பார்ப்புகளோடு செயல்படுகிற சாதாரண கட்சித் தொண்டனுக்குத்தான் நீங்கள் சொல்லுகிற சலிப்பெல்லாம் ஏற்படும். இன விடுதலை, தான் வீழ்ந்தாலும் தன் மண்ணும் மக்களும் வாழவேண்டும் என்ற இலக்கை நோக்கிய புரட்சிகரப் போராளிகளுக்கு, இப்படிப்பட்ட உணர்வுகளெல்லாம் எழுவதில்லை.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நான், தற்சோர்வு அடைந்தால்தான் என் பிள்ளைகளும் தற்சோர்வு அடைவார்கள். கடந்த தேர்தலில், என் தாய், தந்தை, அண்ணன், தங்கைகள் என்று 17 லட்சம்பேர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்காக நான் மேலும் மேலும் உற்சாகத்தோடு வேலை செய்கிறேன்.

'விமர்சிக்கிறவர்களுக்கு நிரூபிக்கப் போராடுவதைவிடவும், நம்பியிருக்கிறவர்களுக்கு உண்மையாகப் போராடு என்கிறார் லெனின். சரியானது வென்றே தீரும்!

ராமதாஸ்
ராமதாஸ்

கடந்த கால காயத்தையும் எதிர்காலக் கனவையும் தொலைத்துவிட்டு, நிகழ்காலத் தேவையை மட்டுமே நம்பி நின்றதால்தான் என் இனமே வீழ்ந்துபோனது. ஐயா ராமதாஸ், அண்ணன் வைகோ, அண்ணன் திருமா எல்லோரோடும் இருந்து பார்த்துவிட்டேன். இந்தத் தவற்றை நாமும் வரலாற்றில் செய்துவிடக்கூடாது என்றெண்ணித்தான் நாங்கள் தனித்துக்களம் காண்கிறோம்!''

''அரசியலில், கொள்கையைவிடவும் திரையுலகக் கவர்ச்சி மக்களை எளிதில் ஈர்த்துவிடுகிறது என்ற நடைமுறை எதார்த்தத்தைப் புரிந்திருக்கிறீர்களா?''

திருமாவளவன்
திருமாவளவன்

''நடிகர்கள் மீதுதான் மக்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்பதற்காக அதை நாம் அனுமதிக்க முடியாது. நல்லகண்ணு போன்ற மாமனிதனை இந்த தமிழ்ச்சமூகம் கண்டுகொள்ளவில்லை என்பதே சமூகப் பிழைதான்; ஒரு குறைதான். இதைச் சரிசெய்தாக வேண்டுமே.

'நடிகரையெல்லாம் வரவிடக்கூடாது' என்ற தெளிவு அன்றைக்கு எங்கள் முன்னோரிடம் இல்லை. ஆனால், நாங்கள் இப்போது தெளிவுபெற்றுவிட்டோம். அதனால் நாங்கள் மோதுவோம்.

வைகோ
வைகோ

இதில் ஒருமுறை நாங்கள் வெல்லலாம்; மற்றொரு முறை வீழலாம்... அதில் ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், அதற்காக ‘வேறு வழி ஒன்றுமில்லை, ரஜினிகாந்த் வரட்டும்’ என்று விட்டுவிட முடியாது.

கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இருந்தபோதே அரசியலுக்குள் நுழைந்தவர் விஜயகாந்த். அந்த இரு தலைவர்களையும் பிடிக்காதவர்கள்கள்தான் விஜயகாந்துக்கு 10 விழுக்காடு வாக்குகளை வழங்கினர்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

எம் இன அழிப்புக்குப் பிந்தைய சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தபோதும்கூட, ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருபெரும் தலைவர்கள் இருந்தனர். ஆனால், அந்தத் தலைவர்கள் யாருமில்லாத இந்நேரத்தில், பொட்டல் காட்டில் வந்து நின்றுகொண்டு 'என்னோடு யார் போட்டியிடுவது' என்று ரஜினிகாந்த் கம்பு சுத்துவது... நல்ல ஆண்மைக்கும் வீரத்துக்கும் அழகல்ல!''

‘‘இந்தியத் தேர்தல் அரசியலுக்குட்பட்டு இயங்குகிற நீங்கள், தனியே ‘நெய்தல் படை கட்டுவேன்’ என்பதெல்லாம் சாத்தியம்தானா?''

சீமான்
சீமான்

‘‘நான் சொல்லும்போது உங்களுக்கெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நான் சொன்னதுபோலவே கேரளாவில் மீனவர்களுக்குப் பயிற்சி அளித்து, பேரிடர் மீட்புப் படை ஒன்றை உருவாக்கிக் காட்டியிருக்கிறாரே பினராயி விஜயன்... அவரை நீங்கள் என்ன செய்தீர்கள்? காவலர் தேர்வை மாநில அரசுதானே செய்கிறது. அதுபோல், நெய்தல் படைக்கான மீனவர்களை நானே தேர்வு செய்துவிட்டுப்போகிறேன். எம்.ஜி.ஆர், மத்திய அரசு அலுவலகங்களுக்கெல்லாம் பூட்டு போட்டுவிட்டு, போய்க்கொண்டே இருக்கவில்லையா! இப்போதும்கூட மத்திய அரசுக்கு எதிராக தனியொரு மனுஷியாக மம்தா பானர்ஜி போராடிக்கொண்டுதானே இருக்கிறார்.’’

தி.மு.க-வை மிகக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள், அ.தி.மு.க -வை அப்படி விமர்சிப்பதில்லையே ஏன்?

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஆதரிப்பதன் மூலம், ரஜினிக்கு எதிராக விஜய்யை கொம்பு சீவி விடுகிறீர்களா?

- இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அண்ணன் சீமான் அளித்துள்ள பதில்களைப் படிக்க, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...