Published:Updated:

பொருளாதார வீழ்ச்சியை `திட்டமிட்டு' மறைக்கிறதா பி.ஜே.பி அரசு?

ஆ.பழனியப்பன்

"இது ஒரு சவால்மிகுந்த காலம்" என்று குறிப்பிடுகிறார். "பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது"

Economy cartoon
Economy cartoon

முத்தலாக் சட்டம், என்.ஐ.ஏ, காஷ்மீர் பிரிப்பு என அடுத்தடுத்த மசோதாக்களால் தேசத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது மோடி-அமித்ஷா ஜோடி. நாட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பக்கம் கொண்டாடுகிறார்கள். முப்பது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்துக்கொண்டிருக்கிறது, அதை மறைக்கவே இந்த அவசர மசோதாக்கள் என்று இன்னொரு புறத்தில் கொந்தளிக்கிறார்கள். உண்மை நிலை என்ன...? https://bit.ly/308CRz8

உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனை சரிந்துவருகிறது; பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துவருகிறார்கள்; முதலீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன; லாபம் சரிந்துள்ளது என்பதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய யதார்த்தம் என்று புள்ளிவிவரம் தருகிறார்கள் தொழில் அமைப்பினர்.

Economy cartoon
Economy cartoon

ஸ்டீல், சிமென்ட் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 2018 ஜூனில் 7.8 சதவிகிதமாக இருந்தது. அது, 2019 ஜூனில் 0.2 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இது கடந்த ஐம்பது மாதங்களில் இல்லாத சரிவு. பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் உற்பத்தி 25%, டிராக்டர் போன்ற வாகனங்களின் உற்பத்தி 13%, இருசக்கர வாகனங்களின் உற்பத்தி 11% எனச் சரிவடைந்துள்ளன. உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் 2.8% குறைந்துள்ளது. இந்தச் சரிவு காரணமாக, கடந்த ஒருசில மாதங்களில் மட்டும் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

இதற்குமுன் இல்லாத அளவுக்கு இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்கள் பலரும் வெளிப்படையாக, தாமே முன்வந்து நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்...

"உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு மார்க்கெட் இல்லை, பொருள்களை விற்க முடியவில்லை, பொருள்களுக்கான தேவை (டிமாண்டு) இல்லை. தனியார் முதலீடு இல்லை" என்று தொழிலதிபர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான 'எல் அண்டு டி' நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். நாயக், "இது ஒரு சவால்மிகுந்த காலம்" என்று குறிப்பிடுகிறார். "பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்று கூறியுள்ள எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவரான தீபக் பரேக், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கம் கடினமாக ஆகியிருக்கும் சூழல் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார்.

cartoon
cartoon

அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரம் ஒன்றும் அபாயகரமான நிலையில் இல்லை என்கிற கருத்தை, பொருளாதார வல்லுநர்களில் ஒரு சாரார் முன்வைத்துவருகிறார்கள். இன்னொரு சாரார், இது தற்காலிகப் பிரச்னைதான், விரைவில் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

- இதுகுறித்த விரிவாக ஆனந்த விகடன் இதழில் வெளிவந்துள்ள அலசல் கட்டுரைக்கு > இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா? https://www.vikatan.com/news/politics/special-story-about-indian-economics

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/