Published:Updated:

அயோத்தி வழக்கு முடிவுக்கு வந்தது பா.ஜ.க-வுக்கு ஒருவகையில் சிக்கலா?

அயோத்தி
அயோத்தி

"ராமர் கோயிலுக்காக வி.ஹெச்.பி அமைப்பை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் இனி மதுரா, காசிக்காக வேறு அமைப்புகளைக் களத்தில் இறக்கலாம்" என்கிறார்கள் இதன் உள்விவரங்களை அறிந்தவர்கள்.

அயோத்தி விவகாரத்தை வீரியமாகக் கையில் எடுத்தவர் வி.ஹெச்.பி-யின் தலைவராக இருந்த அசோக் சிங்கால். அதை அரசியல் இயக்கமாகக் கொண்டு சென்றவர் அத்வானி. ஒருகட்டத்தில் அசோக் சிங்கால் உடல்நிலை நலிவடைந்த நேரத்தில், சுப்பிரமணியன் சுவாமியிடம் இந்த விவகாரத்தை ஒப்படைத்தார். 2015-ம் ஆண்டு அசோக் சிங்கால் மறைவுக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இணைந்தார். இப்போது அயோத்தி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி பா.ஜ.க என்ன செய்யும்?

"உண்மையில் அயோத்தி வழக்கு முடிவுக்கு வந்தது பா.ஜ.க-வுக்கு ஒருவகையில் சிக்கல்தான். நாட்டின் பொருளாதாரநிலை தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. வேலை வாய்ப்பின்மை பிரச்னை பெரிதாகிக்கொண்டிருக்கிறது. "இத்தனை ஆண்டுகள் ராமரை முன்னிறுத்தி இந்த பிரச்னைகளைச் சமாளித்து வந்தோம். இனி அதற்கும் வாய்ப்பில்லை" என்று பா.ஜ.க தரப்பிலேயே ஒப்புக்கொள்கின்றனர்.

அடுத்ததாக, ஆர்.எஸ்.எஸ் இரண்டு விஷயங்களைக் கையிலெடுக்க உள்ளது. ஒன்று, காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டியுள்ள மசூதி இட விவகாரம். மற்றொன்று, மதுராவில் கிருஷ்ணர் ஆலயத்தை ஒட்டியுள்ள மசூதி இட விவகாரம். ஆலயங்களை இடித்தே இவையும் கட்டப்பட்டன என்கிற வாதத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முன்வைக்கக் கூடும்.

அயோத்தி
அயோத்தி

ஆனால் 1991-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், '1947-ம் ஆண்டு வழிபாட்டுத்தலங்கள் எங்கே எந்த நிலையில் இருந்தனவோ அந்த இடங்கள் அவர்களுக்கே சொந்தம்' என்று குறிப்பிட்டுள்ளது. இதன்படி மதுரா, காசி ஆகிய இரண்டு மசூதிகளுக்கும் சிக்கல் வராது என்கிறார்கள்.

ஆனால், அயோத்தி தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் செய்தியாளர்கள் மதுரா மற்றும் காசி குறித்து கேள்வி எழுப்பியபோது "நாங்கள் அந்த விவகாரத்தில் தலையிடப் போவதில்லை. ஆனால், வேறு யாரும் தலையிட்டால் எங்களுக்குத் தெரியாது" என்று பதில் அளித்திருக்கிறார். இதை முன்வைத்து, "ராமர் கோயிலுக்காக வி.ஹெச்.பி அமைப்பை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் இனி மதுரா, காசிக்காக வேறு அமைப்புகளைக் களத்தில் இறக்கலாம்" என்கிறார்கள் இதன் உள்விவரங்களை அறிந்தவர்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய அஜெண்டாக்கள் அனைத்துமே கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டன. பொது சிவில் சட்டம் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அதற்குப் பிறகு காசி, மதுரா விவகாரம் எழலாம் என்கிறார்கள் விஸ்வ ஹிந்து பரிஷத் தரப்பினர்

- நூற்றாண்டு கடந்த பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் முடிவுரை எழுதியிருக்கிறது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் என்கிற நீண்டகால நோக்கத்தை நிறைவேற்றிய திருப்தியில் இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்தத் தீர்ப்புக்கு முன்னும் பின்னுமாக பல சுவாரஸ்யங்கள் அரங்கேறியுள்ளன. அதுகுறித்த ஒரு மீள்பார்வையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > இப்போது அயோத்தி... அடுத்து காசி, பின்னே மதுரா! - ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா ரெடி https://www.vikatan.com/social-affairs/politics/rss-agenda-for-kashi-and-mathura

எப்படி இருக்கிறது அயோத்தி? - ஒரு நேரடி ரிப்போர்ட்

லக்னோவில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது அயோத்தி. டாக்ஸி புக் செய்தபோது டிரைவர் முதலில் கேட்ட கேள்வி, "எதுக்கு அயோத்தி போறீங்க?" "கோயிலுக்கு" என்றோம். "அயோத்தி வரைக்கும் விடுவாங்களான்னு தெரியாது. எதுவரைக்கும் முடியுமோ அதுவரைக்கும் போகலாம்" என்றார்...

... மீண்டும் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ''எந்த பிரஸ், பர்மிஷன் வாங்கியிருக்கீங்களா?" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, நம் புகைப்படக்கலைஞரிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டது. அதன் கேலரியைத் திறந்தார்கள். முந்தைய செக்போஸ்ட்டில் போலீஸ் சோதனை செய்துகொண்டிருந்ததை அதில் பதிவு செய்திருந்தோம். "பாருங்க... போலீஸ் செக் பண்றதைலாம் வீடியோ எடுத்திருக்காங்க" என்று உயரதிகாரியிடம் முறையிட்டார் காவலர். நான் அவர்களிடம், "உங்களுக்கு இது எப்படி டியூட்டியோ, அப்படி எங்களுக்கும் இது டியூட்டிதான்" என்றேன். பொத்தாம் பொதுவாக, "உள்ளே மீடியாவுக்கு அனுமதி இல்லை" என்றார்கள்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அயோத்தி
அயோத்தி

என் செல்போன், பர்ஸிலிருந்த பத்திரிகையாளர் அடையாள அட்டை, இதர அடையாள அட்டைகள், ரெக்கார்டர், ஹெட்செட், பாக்கெட்டிலிருந்த பென்டிரைவ் எல்லாவற்றையும் புகைப்படக் கலைஞரிடம் கொடுத்தேன். பர்ஸில் சிறிது பணம் மட்டுமே இருந்தது. ''ஒரு பக்தனாக உள்ளே அனுமதிப்பீர்கள்தானே?'' என்றேன்.

''நீங்க மீடியா என்று சொல்லிவிட்டீர்கள். அப்புறம் எப்படி விடுவது?'' என்றார்.

"ஏன், மீடியாவில் இருக்கிறவங்களுக்கு பக்தி இருக்கக்கூடாதா?'' என்று கேட்டேன். இப்போது உயரதிகாரி பேசினார். ''நீங்கள் உள்ளே செல்லலாம். பக்தர்களுக்கு அனுமதி மறுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை'' என்றார் அந்த அதிகாரி.

700 மீட்டர் தூரத்தில் இருக்கும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான ராமஜென்ம பூமியைப் பார்க்க, உள்ளே காலடி எடுத்துவைத்தேன்!

- செய்தியாளர் பரிசல் கிருஷ்ணாவின் அயோத்தி நேரடி விசிட் ரிப்போர்ட்டிங்கை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > எப்படி இருக்கிறது அயோத்தி? - ஒரு நேரடி ரிப்போர்ட்

https://www.vikatan.com/social-affairs/judiciary/current-situation-of-ayodhya-after-verdict

அயோத்தி தீர்ப்பு... வரவேற்பும் எதிர்ப்பும்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குப் பிறகு கனத்த அமைதி தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாக, 'இது நம்பிக்கை அடிப்படையிலான தீர்ப்பு', 'இல்லையில்லை சட்டபூர்வமான தீர்ப்பு' என வாதப்பிரதிவாதங்கள் சன்னமாகக் கேட்கின்றன!

அயோத்தி வழக்கு முடிவுக்கு வந்தது பா.ஜ.க-வுக்கு ஒருவகையில் சிக்கலா?

- இதுகுறித்த ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரைக்கு > அயோத்தி தீர்ப்பு... வரவேற்பும் எதிர்ப்பும்! https://www.vikatan.com/social-affairs/judiciary/comments-about-ayodhya-verdict

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு