Published:Updated:

திருநர் கேள்விகள்: கலைஞர் சாதனையை அழிக்கும் முயற்சியா..? நிர்வாணப்பட்டுதான் நிரூபிக்கணுமா..?

மிகவும் பிரச்னைக்குரிய இம்மசோதா, இந்தியா முழுவதிலும் இருக்கும் எல்லா திருநர் மக்களாலும் பல காரணங்களுக்காக எதிர்க்கப்பட்டாலும், தமிழச்சியாக என்னை நெருடிய கூடுதல் காரணம், இம்மசோதாவில் திருநங்கை என்ற பதத்துக்குப் பதிலாக அரவாணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

திருநர்
திருநர்

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20, திருநர் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 'ஜிவென்டோலின் ஆன் ஸ்மித்' என்ற திருநங்கை 1999-ம் ஆண்டு கொல்லப்பட்டதை நினைவுகூரும் இந்நாள், இன்று திருநர் மீதான வெறுப்பு, பாலியல் வன்கொடுமை, நிற வெறி மற்றும் சாதியம் போன்ற சமூகக் கொடுமைகளால் தூண்டப்படும் வன்முறைகள், சமூக ஒடுக்குமுறையால் தற்கொலைக்குத் தள்ளப்படுதல் போன்ற பல்வேறு வன்முறைக்கு உள்ளாகி மரணித்த திருநர்களின் நினைவாக உலகெங்கிலும் உள்ள திருநர் மக்களாலும் தோழமை அமைப்புகளாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒருவகையில் உலகெங்கிலும் திருநர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது. இந்நாளில் தாராவயும் இந்த நாளில் இந்திய திருநர் மக்களுக்கு இந்த வருடம் இந்நாள் பெரும் பதற்றத்துடனும் மன உளைச்சலுடனும் விடிந்தது. மாநிலங்களவையில் 'திருநர் பாதுகாப்பு மசோதா' தாக்கல் செய்யப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததே அதற்குக் காரணம்.

திருநர் கேள்விகள்: கலைஞர் சாதனையை அழிக்கும் முயற்சியா..? நிர்வாணப்பட்டுதான் நிரூபிக்கணுமா..?

அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து எங்களில் பலருக்குத் தூக்கம் இல்லை. மிகவும் பிரச்னைக்குரிய இம்மசோதா, இந்தியா முழுவதிலும் இருக்கும் எல்லா திருநர் மக்களாலும் பல காரணங்களுக்காக எதிர்க்கப்பட்டாலும், தமிழச்சியாக என்னை நெருடிய கூடுதல் காரணம், இம்மசோதாவில் திருநங்கை என்ற பதத்துக்குப் பதிலாக அரவாணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு முற்போக்குச் சிந்தனையின் சான்றாக விளங்கிய அப்பதம், மதத்தை மையப்படுத்திய சித்தாந்தத்தால் அழிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தமிழகத்திலிருந்து எதிர்வினையாற்ற வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நவம்பர் 24 அன்று வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை, வருகின்ற 2020 ஏப்ரல் மாதம் சென்னையில் நடத்தவிருக்கும் திருநங்கையர் தினம் குறித்த செய்திக்குறிப்பில், ஏற்கெனவே `திருநங்கையர்' என்று இருந்த இடங்களில் அப்பதத்தை அழித்துவிட்டு கையால் `மூன்றாம் பாலினத்தவர்' என எழுதப் பட்டிருந்தது குறித்த செய்தி அது.

திருநங்கை... இன்று திராவிட முற்போக்கு சமூகநீதிப் பார்வையின் அடையாளமாகவே மாறியிருக்கிறது இந்த வார்த்தை. திருநங்கை என்ற வார்த்தையின் மிக பெரிய பண்பு, அது திருநம்பி, திருநர் என்ற வார்த்தைகளுக்கு வித்திட்டதே. அதிலும் பாலின எல்லைகளைக் கடந்த திருநர் என்ற சொல் மிக முக்கியமானது. 'FtoM (Female to Male)' என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டெல்லியைச் சேர்ந்த திருநம்பி ஒருவர், “உங்கள் மொழியில் இருப்பதைப்போல இப்படி ஒரு வார்த்தை எங்களிடம் இல்லையே'' என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் மாற்றுப்பாலின மக்கள் திருநங்கை, திருநம்பி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தமிழ் மொழியின் சிறப்புக்கு இது மற்றுமொரு சான்றே ஆகும். சமூக, பொருளாதார அடிப்படையில் கடைநிலையில் இருந்த திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு ஊக்கியாக இந்த வார்த்தை இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்போது, திருநங்கை என்ற பெயரை மூன்றாம் பாலினம் என்று தமிழக அரசு மாற்றியிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது என்ற குழப்பமே முதலில் எனக்கு வந்தது. என்னளவில் இதற்கு இரண்டு காரணங்களை மட்டுமே யூகிக்க முடிந்தது. முதல் காரணம் திருநங்கை என்ற சொல், கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனையாக இருப்பதால் அதை அழிக்கும் முயற்சியாக இருக்கக்கூடும். மற்றொன்று இச்சமூகத்தை மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடுவதன் மூலம் அவர்கள் தங்களை ஆண் மற்றும் பெண் என்று அடையாளப்படுத்திக்கொள்வதிலிருந்து தடுத்து நிறுத்தலாம் என்ற எண்ணம். ஏனென்றால்... - கனகா வரதன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மூன்றாம் பாலினம் என்பது பிற்போக்கு அடையாளம்! https://www.vikatan.com/social-affairs/policies/transgenders-are-not-the-third-gender-here-is-why

"நிர்வாணப்பட்டுதான் நிரூபிக்க வேண்டுமா?"

திருநர்களின் கேள்விக்குறியான வாழ்க்கையை மொத்தமாகவே ஒழித்துக்கட்டும் வகையில், சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது திருநர் உரிமைப் பாதுகாப்பு மசோதா. பிறப்பால் ஆண் அல்லது பெண்ணாகப் பிறந்தவர்கள் தங்களுக்குள் நிகழும் பாலின மாற்றத்தை உணர்வது, ஏதோ ஒரே நாளில் நிகழ்வதல்ல. பெரும்போராட்டக் காலம் அது. ஒருகட்டத்தில் அந்த மாற்றம் வெளிப்படத் தொடங்கும்போது குடும்பமும் சமூகமும் அவர்களை ஏற்பதில்லை. சமூக அறுபடல் இங்கேதான் நிகழ்கிறது.

இவ்வளவு போராட்டங்கள் நிறைந்த திருநர்கள் சமூகத்தில்தான் திருநர் உரிமைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளதாகக் கொந்தளிக்கிறார் கிரேஸ் பானு. திருநங்கை செயற்பாட்டாளரான இவர், இந்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெறுவதற்கு முன்பிருந்தே அதற்கு எதிராகக் குரல்கொடுத்தவர்.

திருநர் கேள்விகள்: கலைஞர் சாதனையை அழிக்கும் முயற்சியா..? நிர்வாணப்பட்டுதான் நிரூபிக்கணுமா..?

“நால்சா வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி, திருநர்கள் தங்களை ஆணாகவோ பெண்ணாகவோ அல்லது மூன்றாம் பாலினமாகவோ அடையாளப் படுத்திக்கொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் திருநர் உரிமைப் பாதுகாப்பு மசோதாவோ, அரசுதான் அவர்களுடைய அடையாளத்தை முடிவுசெய்யும் என்று குறிப்பிடுகிறது. ‘அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். சிகிச்சை செய்த மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்தச் சான்றிதழுடன் எங்களது உடலை மாவட்ட மேஜிஸ்திரேட் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். மேஜிஸ்திரேட், நாங்கள் திருநர் என முடிவுசெய்தால் மட்டுமே எங்களது பாலின அடையாளம் அங்கீகரிக்கப்படும்’ என்கிறது இந்த மசோதா.

நாங்கள் எங்கள் பாலினத்தை உணர அறுவைசிகிச்சை செய்யத் தேவையில்லை. மேலும், பரிசோதனை செய்யும் அந்த மேஜிஸ்திரேட் பெரும்பாலும் ஆணாகவே இருப்பார். ஒரு ஆண் முன்பு நாங்கள் நிர்வாணப்பட்டே எங்கள் உரிமையைப் பெற வேண்டுமென்றால், எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்புதான் என்ன? உடல் பரிசோதனையை நால்சா வழக்கு தீர்ப்பு எதிர்க்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசுகளே இன்றும் உடல் பரிசோதனைதான் செய்கின்றன. இதுபோதாது என இப்போது மத்திய அரசு இந்தக் கொடுமையை மசோதாவாக்குகிறது.

அதிலும் 18 வயதுக்குக்கீழ் இருப்பவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள்தான் அடையாளத்துக்கு விண்ணப்பிக்க வேண்டுமாம். இது எப்படிச் சாத்தியப்படும்? குடும்பத்தினரால் தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுவதால்தானே நாங்கள் இவ்வளவு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி நெருக்கடி கொடுத்தால் எத்தனை பிள்ளைகள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த முன்வருவார்கள்?” என்றவர், அடுத்து சொன்னதுதான் இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம். - விரிவான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > “நிர்வாணப்பட்டுதான் நிரூபிக்க வேண்டுமா?”

https://www.vikatan.com/news/general-news/a-transgender-woman-shanavi-ponnusamy-job-rejected-case-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |