Published:Updated:

`ஆறு பைசா'-வுக்குள் அரசியல் ஆயிரம்: ஜியோ யுத்தமும் பி.ஜே.பி `பின்னணி'யும்!

ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் எந்தளவுக்கு வீரியமாக எழுந்ததோ அதற்கும், தற்போது 4ஜி அலைக்கற்றையை மையமாக வைத்து பா.ஜ.க ஆட்சியில்

jio
jio

ஆரம்பத்தில் இலவசம்... பிறகு குறைந்த கட்டணங்களில் சேவைகளைத் தருவதாக அறிவித்த ஜியோ, தற்போது மற்ற டெலிகாம் நிறுவன அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்துக்கு ஆறு பைசா எனக் கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. ஜியோவுக்கும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமே இந்தக் கட்டணத்துக்குக் காரணம். இதன் பின்னணியில் பா.ஜ.க அரசு ஜியோவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ''கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் எந்தளவுக்கு வீரியமாக எழுந்ததோ அதற்கும், தற்போது 4ஜி அலைக்கற்றையை மையமாக வைத்து பா.ஜ.க ஆட்சியில் நடப்பவற்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை'' என்கிறார்கள் இதன் உள்விவரங்களை அறிந்தவர்கள்.

தற்போது ஜியோ விதித்திருக்கும் ஆறு பைசா கட்டணம் வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படும் என்பதால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/32F8kui

`ஆறு பைசா'-வுக்குள் அரசியல் ஆயிரம்: ஜியோ யுத்தமும் பி.ஜே.பி `பின்னணி'யும்!

இந்தப் பிரச்னையின் ஆணிவேர் IUC (Interconnect Usage Charge) கட்டணம்தான். ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளரை அழைத்தால், அந்த அழைப்பை இணைக்க ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையை ஜியோ வசூலிக்கும். அதுபோல் ஜியோ வாடிக்கையாளர் ஏர்டெல்லுக்கு அழைத்தால், அந்த அழைப்பை இணைக்க ஜியோ நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையை ஏர்டெல் நிறுவனம் வசூலிக்கும். இதுதான் IUC கட்டணம். ஆனால், இந்தத் தொகையை முற்றிலுமாக நீக்கவேண்டும் என்கிறது ஜியோ. மற்ற நிறுவனங்களோ, இந்த நடைமுறை தொடரவேண்டும் என்கின்றன.

இன்று அழைப்புகள் அதிகம் செல்வது ஜியோவிலிருந்துதான். அதாவது, IUC கட்டணம் அதிகம் கொடுக்கும் இடத்தில் ஜியோவும், வாங்கும் இடத்தில் மற்ற நிறுவனங்களும் இருக்கின்றன. இதனால்தான் இந்தத் தொகையே வேண்டாம் என்கிறது ஜியோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. அப்போது இந்தக் கட்டணம் நிமிடத்துக்கு 14 பைசாவாக இருந்தது. மற்ற நிறுவனங்கள் 'இதை 30 பைசாவாக உயர்த்த வேண்டும்' என்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் வலியுறுத்தின. 'இந்தக் கட்டணமே கூடாது' என்றது ஜியோ.

‘நெட்வொர்க் கட்டமைப்புகளுக்காக டெலிகாம் நிறுவனங்கள் செலவுசெய்த முதலீட்டைத் திரும்ப எடுக்கவே, இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை ஏற்கெனவே பெற்ற லாபத்திலிருந்தே திரும்பப் பெற்றுவிட்டன. பிறகு ஏன் IUC கட்டணத்தை அந்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும்?' என்று அப்போது கேள்வி எழுப்பியது ஜியோ. இந்த விவகாரத்தில், 14 பைசாவாக இருந்த கட்டணத்தை ஆறு பைசாவாகக் குறைத்தது டிராய். 'பா.ஜ.க அரசின் அழுத்தங்களால் டிராய், ஜியோவுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறது' என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

`ஆறு பைசா'-வுக்குள் அரசியல் ஆயிரம்: ஜியோ யுத்தமும் பி.ஜே.பி `பின்னணி'யும்!

15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக்கொண்டிருந்த இந்திய தொலைதொடர்புச் சந்தை, ஜியோவின் நெட்வொர்க் யுத்தத்தால் நான்கு நிறுவனங்களாக சுருங்கிக்கிடக்கிறது. அதேசமயம் அசுரத்தனமாக வளர்ந்துவருகிறது ஜியோ. அக்டோபர் மாதம் டிராய் (TRAI) வெளியிட்ட அறிக்கையின்படி 2019, ஆகஸ்ட் மாதம் மட்டும் 84.4 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது ஜியோ. இதில் வோடஃபோன் 49.5 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 5.6 லட்சம் வாடிக்கையாளர்களையும், பி.எஸ்.என்.எல் இரண்டு லட்சம் வாடிக்கையாளர்களையும் ஆகஸ்ட் மாதம் இழந்துள்ளன. இப்படி பிற நிறுவனங்களைக் காணாமல்போகச் செய்ததன் பின்னணியில், மத்திய பா.ஜ.க அரசு ஜியோவுக்கு எப்படியெல்லாம் சாதகமாக நடந்துகொள்கிறது என்பதை வரிசையாகப் பார்போம்.

15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்த இந்திய தொலைதொடர்புச் சந்தையில் இன்று நான்கே நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. இது விரைவில் இரண்டாகக்கூட ஆகலாம். அப்படியொரு நிலை வந்தால், டிராய்க்கான தேவையே இல்லாமல்போய்விடும். இதனால் IUC கட்டணத்தை 2020-க்குள் முழுவதுமாக நீக்கலாம் எனத் திட்டமிட்டிருந்த டிராய், இப்போது அதை மறுபரிசீலனை செய்துவருகிறது. அதனால்தான், ஜியோ இறுதியாக இந்த IUC கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்தே பெற்றுவிடலாம் என முடிவுசெய்தது. இந்த அறிவிப்புதான் கடந்த வாரம் பெரும் விவாதங்களை உண்டாக்கியிருக்கிறது. 'இதுவும் IUC கட்டணத்தை டிராய் நீக்கும் வரைதான். அதுவரை பொறுமை காணுங்கள்' என்கிறது ஜியோ. IUC நீக்கப்பட வேண்டும் என்று டிராய்க்கு ஜியோ தரும் மறைமுக மிரட்டல்தான் இந்தப் புதிய திட்டம்.

இந்த விவகாரத்தின் பின்னணியில் பி.ஜே.பி | பி.எஸ்.என்.எல்-க்குக் கிடைக்காத ஆதரவு | காணாமல்போன நிறுவனங்கள் | தனிக்காட்டு ராஜாவான ஜியோ | மிஸ்டுகால் மெஸ்மரிசம் | மூடப்பட்ட மொபைல் டெலிகாம் நிறுவனங்கள் | "ஜியோவுக்கு விளம்பரத் தூதரான மோடி!'' | "அனைத்தும் சட்டப்படியே நடக்கின்றன!'' | ஒளிவுமறைவு, சட்டமீறல் எதுவும் இல்லை எனும் ஜியோ | டிராய் என்ன செய்யப்போகிறது? - இப்படி அனைத்துக் கோணங்களிலும் அலசும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/news/politics/discuss-about-bjp-government-supporting-for-jio

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க> http://bit.ly/2MuIi5Z |