@ஜி.ராமலிங்கம், கொரட்டூர், சென்னை.

மூச்சுக்கு முந்நூறு தடவை ‘தமிழ்... தமிழ்’ என முழங்கும் தி.மு.கழகத்தைச் சார்ந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோர், நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுகிறார்களே?

ஆங்கிலத்தில் பேசுவதில் தவறு ஒன்றுமில்லை. ஏன், இந்தியில்கூடப் பேசலாம். கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (பல மத்திய அமைச்சர்களுக்கு), இந்தியில் பேசினால் உடனடியாகச் சென்று சேர்ந்துவிடும். விஷயத்தை, சரியானவர்களிடம் சரியான நேரத்தில் கடத்துவதுதான் முக்கியம். இதற்கு வசதியான மொழியில் பேசுவதையும் மொழித் திணிப்புக்கு எதிராகக் குரல்கொடுப்பதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.

ஹெச்.மோகன் பிரசாத், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

அன்று... மத்தியில் ஆட்சி செய்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோருக்கு மொரார்ஜி தேசாய், ராஜ் நாராயணன், ஜெகஜீவன்ராம், சரண் சிங், வி.பி.சிங் போன்ற அரசியல் தலைவர்கள் சிம்மசொப்பனமாக இருந்தார்கள். தற்போது அப்படிப்பட்டவர்கள் இல்லாதது மோடிஜிக்கு ப்ளஸ் பாயின்ட்தானே?

நமக்கு மைனஸ் பாயின்ட்!

@இராமன், சென்னை.

‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றிருப்பது பற்றி..?

மிக முக்கியமான நிகழ்வு. நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும்போது தான், `வளர்ச்சி’ என்ற பெயரில் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு அரசாங்கங்கள் எந்த அளவுக்குத் துணைபோய்க்கொண்டிருக் கின்றன என்பதைக் கண்கூடாக உணர முடியும். அப்படி நம் பிரதமர் மோடியும் உணர்வாரேயானால், பாரத துணைக்கண்டத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அண்டத்துக்குமே நல்லது. இதற்கு முன்பாக, பியர் கிரில்ஸ் ஏற்பாடு செய்த இதேபோன்ற ஒரு நிகழ்வில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பங்கேற்றார். ஆனால், அவர் எதையும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. சுற்றுச்சூழல் தொடர்பான உலக ஒப்பந்தத்துக்குப் பல ஆண்டுகளாக அமெரிக்கா போட்டுக்கொண்டிருக்கும் முட்டுக்கட்டையை அகற்றக்கூட அவர் முயற்சிக்கவில்லை.

அதேபோல இதை ஒரு ஜாலி டிரிப் எனத் தானும் கடந்துவிடாமல், உலகைச் சூழ்ந்திருக்கும் பேராபத்தை உணர்ந்து குரல் கொடுப்பதுடன், இந்திய அளவில் செயலாற்றவும் தொடங்கினால், உலகமே மோடியைத் திரும்பிப் பார்க்கும். அது, ‘மோடி வித் வைல்டு’ என்று புதிய வரலாறு படைக்கும்.

@காந்தி, திருச்சி.

முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடம் பூண்டுள்ளதே?

அங்கு எல்லாமே ‘ரெண்டு’தானே!

@ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘நாங்கள் உழைத்து மேலே வந்திருக்கிறோம். தி.மு.க-வில் வாரிசு அரசியல் தொடர்கிறது’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

தி.மு.க-வின் விஷயம் ஊரறிந்தது. அதேபோல, இவர்களின் ‘உழைப்பும் பிழைப்பும்’ ஊரறிந்ததே!

@கருமாரி கணபதி, மடிப்பாக்கம், சென்னை.

37 - 38 ஆகுமா அல்லது 1 - 2 ஆகுமா?

இரட்டைப்படை ஆகும்!

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

எடியூரப்பா முதலமைச்சர் ஆன விதம், பி.ஜே.பி-யின் இமேஜை ஒரேயடியாகச் சிதைத்துவிட்டதல்லவா?

‘காங்கிரஸ், பி.ஜே.பி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்’ என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான்.

எஸ்.அன்பழகன், செங்கல்பட்டு.

தமிழா... சம்ஸ்கிருதமா... எந்த மொழி மிகத் தொன்மை வாய்ந்தது?

மொழி என்பது, தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே; உணர்ச்சிவசப்படுவதற்கு அல்ல என்பதை அனைவருமே உணரவேண்டும். இதில், ‘நான் முந்தி... நீ முந்தி, நான்தான் ஒசத்தி... நீதான் ஒசத்தி’ என்பதெல்லாம் தேவையற்ற சர்ச்சைகளே. அந்தந்த வட்டாரத்தில் தோன்றிய மக்கள் அந்தந்த வட்டாரத்தில் இயல்பாக உருவான மொழியைப் பேசிவருகிறார்கள். அதையெல்லாம் அப்படி அப்படியே பேசவிடுவதுதான் மனிதப் பண்பு. அதைவிடுத்து ஒன்றை உயர்த்திப் பிடிப்பதன் மூலமாக, மற்றொன்றை நசுக்கப் பார்ப்பது நாகரிகமற்றச் செயலே!

பா.அரங்கன், வளசரவாக்கம் சென்னை.

வைகோ என்றால் கர்ஜனை, ஹெச்.ராஜா என்றால் அர்ச்சனை... இது எப்படி இருக்கு?

வேண்டாமே தேவையில்லாத பிரச்னை!

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

‘ரூட்டு தல’?

ஒழிச்சுத் தொல!

@அ.குணசேகரன், புவனகிரி.

கர்நாடகத்தைப்போல தமிழகத்தில் குதிரை பேர அரசியல் வெற்றிபெறவில்லையே?

நேர்மையான வியாபாரம் என்றாலே கொஞ்சம்போல சுயபலமாவது இருக்கவேண்டும். அதிலும் சட்டவிரோத வியாபாரம் என்றால், போலீஸ், ஆட்சி, அதிகாரம் என்று பெரும் பலம் வேண்டுமே!

@பொன்விழி, அன்னூர்.

டி.டி.வி.தினகரன், ரஜினி இருவரும், வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பார்களா?

கேள்வி கேட்பதற்காகவே ரூம் போட்டு யோசிப்பீர்களோ!

@ரம்யா ராகவ்.

மாநில கவர்னருக்கு, சட்டமன்ற சபாநாயகரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதா?

இருக்கு. ஆனா, இல்லை.

வி.கருணாநிதி, திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம்.

‘சிலைக்கடத்தலில் தொடர்பு’ என்றதும் பதறிக் கொண்டு மறுக்கிறார்களே இரண்டு அமைச்சர்களும்?

`அமைச்சர்களுக்குத் தொடர்பு’ என்று பொன்..மாணிக்கவேல் சொன்னதாகத்தான் ஒரு செய்தி பரவியது. அதற்குள் பூ சூட்டிப் பொட்டும் வைத்தால், பதறாமல் இருக்க முடியுமா? அந்த இருவரின் பெயரும் நீதிமன்றத்தில் சொல்லப்படாத சூழலில், அவர்களின் படங்களுடன் வண்டி வண்டியாகச் செய்திகளை அள்ளிவிட்டது துளியும் நியாயமற்ற செயல். ஊடக அறம் மீறப்படுவது நாட்டுக்கே நல்லதல்ல.

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ‘பருவமழைக்கு முன்பாக அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாருவதன் மூலமாகத் தமிழ்நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்’ என்கிறாரே?

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது, மண் மற்றும் மணலைக் கொள்ளையடிப்பது என்று வலம்வரும் பஞ்சமா பாதகர்கள் பலரும், அனைத்துக் கட்சிகளிலும் மாநிலம், மாவட்டம், ஒன்றியம், கிராமம் என்று முக்கியமான பொறுப்புகளில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், அமைச்சர்கள் என்று பலருடைய அருளாசிகளுடன்தான் இவர்கள் வலம் வருகிறார்கள். இரக்கமற்ற இந்தப் பாவிகளுக்கு எதிராக யாரும் மூச்சுகூட விட முடிவதில்லை. சமீபத்தில்கூட, ஏரி ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து பொதுநல வழக்குத் தொடர்ந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பா, மகன் என இரண்டு விவசாயிகளை, கொடூரமாகக் கொன்றுள்ளனர் கொலைகாரப் பாவிகள். இத்தகைய பாவிகளை ஒழித்தாலே, நீர்நிலைகள் உயிரோடு இருக்கும். எனவே, அறிக்கை விடுவதையெல்லாம் விட்டுவிட்டு, இதுபோன்றோரைத் தன் கட்சியிலிருந்து நீக்குவதன் மூலம் புதிய அத்தியாயத்தை கேப்டன் முதலில் தொடங்கிவைக்கட்டும்.

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.

‘தி.மு.க., பொய் வாக்குறுதிகளைக் கூறி எம்.பி தொகுதிகளில் வெற்றிபெற்றது’ என்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி அ.தி.மு.க-வினர் பலரும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படியென்றால், இவர்களுடைய வாக்குறுதிகளை ஏன் மக்கள் நம்பவில்லை?

சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றதன் மூலமாகத்தான் இன்றைக்கு ஆட்சியிலேயே இருக்கிறது அ.தி.மு.க. அங்கே இவர்கள் கொடுத்ததும் பொய் வாக்குறுதிகள் தானே?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!