Published:Updated:

போரிஸ் ஜான்சனும் திருவட்டாறு கோயில் யானையும்! - முன்னாள் அமைச்சர் பகிர்ந்த நாஸ்டால்ஜியா

சிந்து ஆர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில் யானையிடம் 2003-ம் ஆண்டு மயிரிழையில் தப்பித்த போரிஸ் ஜான்சன் இப்போது இங்கிலாந்து பிரதமராகியுள்ளார்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன் ( AP )

கேரள மாநில பி.ஜே.பி தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணகுமார். இவர் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவரின் மகள் ஐஸ்வர்யா அமெரிக்காவில் படிக்கும்போது கபீர் சிங் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

அவர்களது திருமணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2003-ம் ஆண்டு நடந்தது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்த கபீர்சிங், இப்போது இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பேரிஸ் ஜான்சனின் முதல் மனைவியின் உறவினர் ஆவார். எனவே, திருமணத்துக்கு பேரிஸ் ஜான்சன் மனைவியுடன் கலந்துகொண்டார். அப்போது இங்கிலாந்து எம்.பி-யாக இருந்தார் பேரிஸ் ஜான்சன்.

திருமணவிழா நடந்துகொண்டிருந்தபோது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யானை திடீரென மதம்பிடித்து ஓடியது. இதில் பலர் காயம் அடைந்தனர். பேரிஸ் ஜான்சன் யானையின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். `யானையின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவருக்கு வாழ்வில் அதிஷ்டம் அடிக்கும்' எனப் பேரிஸ் ஜான்சனிடம் பி.ஜே.பி தலைவர் கிருஷ்ணகுமார் அப்போதே கூறியிருக்கிறார்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து சென்ற பேரிஸ் ஜான்சன் இந்தச் சம்பவம் குறித்து நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். இந்தநிலையில் பேரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கேரள பி.ஜே.பி நிர்வாகி கிருஷ்ணகுமார், யானையிடம் இருந்து பேரிஸ் ஜான்சன் தப்பிப்பிழைத்த சம்பவங்களையும், அதனால்தான் அவருக்கு அதிஷ்டம் அடித்தது என்றும் மீடியாக்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.