Published:Updated:

மிஸ்டர் கழுகு: விக்கிரவாண்டியில் தோற்பது அ.தி.மு.க-வுக்கு நல்லது!

சி.வி.சண்முகம், ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
சி.வி.சண்முகம், ராமதாஸ்

பின்னணியில் பலே கணக்கு

மிஸ்டர் கழுகு: விக்கிரவாண்டியில் தோற்பது அ.தி.மு.க-வுக்கு நல்லது!

பின்னணியில் பலே கணக்கு

Published:Updated:
சி.வி.சண்முகம், ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
சி.வி.சண்முகம், ராமதாஸ்

மாநகராட்சிப் பூங்காவுக்கு வரச்சொல்லியிருந்த கழுகார், தாமதமாக வந்தார். ‘‘சீக்கிரமா வரக் கூடாதா... கொசுக்கடி பின்னிவிட்டது!’’ என்று கோபம் காட்டினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘இங்கேயும் அதே பிரச்னையா... இந்தக் கொசுக்களைவைத்து தமிழக அமைச்சர்களுக் குள்ளேயே அடிதடி ஆரம்பமாகியிருக்கிறது!’’ என்ற கழுகாரிடம் ‘‘அதிலிருந்தே ஆரம்பியும்!’’ என்றோம்.

‘‘சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கொசு கடிப்பதால்தான் காய்ச்சல் வருகிறது. கொசு கடித்த பிறகுதான் அது சுகாதாரத் துறைக்குள் வரும். கொசுவைக் கட்டுப்படுத்துவது உள்ளாட்சித் துறையைச் சேர்ந்தது’ எனக் கொளுத்திப் போட்டிருந்தார். இதில்தான் இப்போது பாலிடிக்ஸ் ஆரம்பித்திருக்கிறது!’’

‘‘என்ன பாலிடிக்ஸ்?’’

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

“உள்ளாட்சித் துறைதான் இதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். அதை கவனிக்க வேண்டியது அந்தத் துறைக்குரிய அமைச்சர்தான். அவரைச் சீண்டும்விதமாகவே அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படிப் பேசியிருக்கிறார் என்கிறார்கள். விஜயபாஸ்கர் தரப்புக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டபோது மேற்கண்ட அமைச்சர் தரப்பிலிருந்து எதுவும் உதவவில்லை என்பதே சுகாதாரத் துறை அமைச்சரின் கோபத்துக்குக் காரணமாம்!’’

‘‘இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமாம்?’’

‘‘எப்படி இருந்தாலும் கட்சிரீதியாக சில அதிரடி முடிவுகளை எடுக்கப்போகிறாராம் எடப்பாடி. சசிகலாவின் விடுதலை பற்றி பல்வேறு தகவல்கள் பரபரக்கின்றன. அதனால், எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென நினைக்கிறார். அ.தி.மு.க பொதுக்குழுவை இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு நடத்தலாமா, உள்ளாட்சித் தேர்தலை நடத்திய பிறகு நடத்தலாமா என்றும் ஆலோசித்துவருகிறாராம்.”

‘‘ஓஹோ!’’

‘‘ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது, ‘ஜெயலலிதா மரணத்துக்கு தி.மு.க-தான் காரணம். அவர்கள் போட்ட வழக்கால்தான் ஜெயலலிதா மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்’ என புதிய டிராக்கைப் போட்டுள்ளார் எடப்பாடி. இதைக் குறிப்பிடும் கட்சியினர், ‘சசிகலாவை இனி குற்றம்சாட்ட வேண்டாம் என்ற முடிவை எடப்பாடி எடுத்துவிட்டார்’ என்கிறார்கள். ஜெயலலிதா மரணத்தில் அப்போது சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த சி.வி.சண்முகத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படி எடப்பாடி பேசியதையும் கவனிக்க வேண்டும்.’’

சி.வி.சண்முகம், ராமதாஸ்
சி.வி.சண்முகம், ராமதாஸ்

‘‘இதற்குப் பதிலடியாகத்தான் திருப்பரங்குன்றம் சரவணனை வைத்து சி.பி.ஐ-க்கு தி.மு.க மனு செய்யவைத்திருக்கிறதோ?”

‘‘ஆமாம். ஆணையத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலுமே சரவணன் தாக்கல்செய்த மனுவில் பல விசாரணைகள் நடந்துள்ளன. இப்போது சி.பி.ஐ-யிடம் சென்றாலும் பெரிதாக எந்தத் தாக்கமும் ஏற்படாது என்கிறார்கள்.’’

‘‘இடைத்தேர்தல் முடிவைவைத்து பலமான கணக்குகள் வேறு ஓடுகின்றனவாமே?’’

‘‘உண்மைதான்... விக்கிரவாண்டித் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அ.தி.மு.க அந்தத் தொகுதியைக் கைப்பற்றினால் அதற்கு உரிமை கொண்டாட பா.ம.க முயலும் என அ.தி.மு.க நினைக்கிறது. ஒரு தொகுதியின் வெற்றியை வைத்து உள்ளாட்சித் தேர்தலில் பலமாக சீட்டுக்கு அடிபோடுவார்கள். தோல்வியடைந்தால், அந்தத் தொந்தரவு இருக்காது. கட்சிக்கு நல்லது என்று அ.தி.மு.க-வில் ஒரு கணக்கு ஓடுகிறது. ஆனால், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது.’’

‘‘என்ன கணக்காம்?’’

நாங்குநேரி..., விக்கிரவாண்டி...
நாங்குநேரி..., விக்கிரவாண்டி...

‘‘பா.ம.க மட்டுமே வன்னியர்களுக்கான கட்சி. ராமதாஸ் மட்டுமே அந்தச் சமூகத்தின் தலைவர் என்கிற நிலை மாற வேண்டும். தான் வன்னிய இனத்தில் குறிப்பிடத்தக்க தலைவராக உயரவேண்டும் என்று நினைக்கிறாராம். அதற்காகவே இந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற வேண்டும் என்றும் நினைக்கிறார். ராமதாஸின் சொந்த மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தின் தலைவராக உருவாக இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கணக்கு போட்டுதான், வேட்பாளர் தேர்வு முதல் செலவு வரை அனைத்தையும்தானே பார்த்திருக்கிறார்.’’

‘‘நீட் விவகாரம் நீண்டுகொண்டேபோகிறதே?’’

‘‘நீட் தேர்வு மோசடி விசாரணை மெதுவாக நடக்கிறது. அதை ஏன் சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகு, மோசடியில் ஈடுபட்ட இன்னும் சிலரைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், விசாரணையை வேகப்படுத்த அரசு தரப்பில் எந்த ஆணையும் வந்ததாகத் தெரியவில்லை.’’

‘‘வேறு கட்சி மேட்டர் ஏதாவது?’’

‘‘தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகரின் சார்பில் புதிய கட்சிக்கான விண்ணப்பம், டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குப் போயிருக்கிறது. ஆனால், அது ரஜினியுடைய விண்ணப்பம் இல்லை. ‘சங்கம்’ தொடர்புடைய விவகாரத்துக்குப் பெயர்பெற்ற நடிகர் அவர்!’’ என்ற கழுகார் சிறகுகளை விரித்தார்.

இடைத்தேர்தல் கடைத்தெரு!

காமராஜ் நகர் (புதுச்சேரி): காங்கிரஸும் என்.ஆர் காங்கிரஸும் போட்டிபோட்டுக்கொண்டு பணப்பட்டுவாடாவைக் கச்சிதமாக முடித்துவிட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு நிகராக என்.ஆர்.காங்கிரஸும் இரண்டு அரை நோட்டுகளை வழங்கிவிட்டது. இதனால் சில பகுதிகளில் வாக்குகள் சிதறும் என நினைத்தது காங்கிரஸ். அதனால் அந்தப் பகுதிகளில் மட்டும் டோக்கன் ஃபார்முலாவைக் கையாண்டிருக்கிறது. `தேர்தல் முடிந்ததும் அந்த டோக்கனைக் கொடுத்தால் 5,000 ரூபாய் அல்லது ஏர்கூலர் வாங்கிக்கொள்ளலாம்’ எனக் கிசுகிசுத்து வாக்காளர்களிடம் விநியோகித்துள்ளனர். அதைக் கண்டுபிடித்த என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க தரப்பு, சாலை மறியலில் அமர்ந்தது. பறக்கும்படை சென்று கைப்பற்றுவதற்குள் 90 சதவிகித டோக்கன்கள் விநியோகம் சுபமாக முடிந்துவிட்டதால் என்.ஆர் காங்கிரஸ் ஏகப்பட்ட அப்செட்.

நாங்குநேரி...
நாங்குநேரி...

விக்கிரவாண்டி: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளைப் பதிவுசெய்திருக் கிறார்கள் விக்கிரவாண்டித் தொகுதி மக்கள். அ.தி.மு.க மற்றும் தி.மு.க தரப்பின் பணமழையில் நனைந்ததால் இந்த மழையை அவர்கள் சட்டைசெய்யவில்லை. வாக்குக்கு ஒற்றை நோட்டைக் கொடுத்துவிட்டு தி.மு.க. ஒதுங்கிக்கொண்டது. இரட்டை நோட்டைக் கொடுத்த அ.தி.மு.க., பலவீனமாகத் தெரிந்த சில பகுதிகளில் மட்டும் வேட்டி, சேலைகளை இரவோடு இரவாக இறக்கிவிட்டது. கூடுதலாக, மறுநாள் வாக்குச்சாவடிக்குச் செல்பவர்களுக்கு சாக்லேட் கொடுக்கும் சாக்கில் தலா 200 ரூபாயைக் கொடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. இதை, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை கண்டுகொள்ளவில்லை.

காமராஜ் நகர்..., காமராஜ் நகரில் கைப்பற்றப்பட்ட டோக்கன்கள்
காமராஜ் நகர்..., காமராஜ் நகரில் கைப்பற்றப்பட்ட டோக்கன்கள்

நாங்குநேரி: இரு தரப்பிலுமே பணப்பட்டுவாடா அமோகம். ஒரு வாக்குக்கு மூன்று முழு நோட்டு வரை விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பணப்பட்டுவாடா காரணமாகவோ என்னவோ நாங்குநேரித் தொகுதியின் பல்வேறு கிராமங்களில் வழக்கத்தைவிடவும் வேகமாக வாக்குப்பதிவு நடந்தது. ஆதிதிராவிடர் பட்டியலில் உள்ள ஏழு சமூகங்களை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ஏற்கெனவே அறிவித்ததுடன், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியிருந்தனர். அதனால் அந்தச் சமூகத்தினர் வசிக்கும் கிராமங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் பலர் வாக்களிக்காதது வெற்றி-தோல்வியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என இரண்டு தரப்பும் அச்சத்தில் இருக்கின்றன.

மிஸ்டர் கழுகு: விக்கிரவாண்டியில் தோற்பது அ.தி.மு.க-வுக்கு நல்லது!

கூறுபோடப்பட்ட கோயில் குளம்!

வடபழநி சிக்னல் அருகே சிவன் கோயில் இருக்கிறது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ள இந்தக் கோயில் பெண் அதிகாரி, சில ஆவணங்களை ஆய்வுசெய்ததில் கோயிலுக்குச் சொந்தமான குளம் காணாமல்போயிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார். குளம் இருந்த இடத்தில் பல மாடிக் கட்டடங்கள் வந்துவிட்டன. அவற்றை அகற்ற அந்த அதிகாரி செய்யும் முயற்சிகளுக்கு உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகி எதிர்ப்பு காட்டுகிறாராம். காரணம், அந்த அ.தி.மு.க நிர்வாகிக்கு அந்தக் குளத்துக்குள் இரண்டு கிரவுண்டு நிலம் இருக்கிறதாம்.

முதல்வர் பதவிக்கு எனக்கும் ஒரு சான்ஸ்!

வாயைத் திறந்தாலே சர்ச்சையை வீசும் அமைச்சர் ஒருவர், கடந்த வாரம் நண்பர்களுடன் தாகசாந்தியில் அமர்ந்துள்ளார். ‘‘இப்படி குண்டக்க மண்டக்கப் பேசிட்டு இருக்கீங்க... இப்ப கேஸ் வரைக்கும் வந்துடுச்சுல்ல’’ என்று ஒரு நண்பர் கேட்க, “யோவ், மோடி சப்போர்ட் இருக்கிற வரைக்கும்தான் எடப்பாடிக்குப் பதவி. ஒருவேளை எடப்பாடியைத் தூக்கணும்னு டெல்லி முடிவுபண்ணிட்டா, அவங்களுக்கு தோதான ஆளைத்தான் முதல்வர் பதவிக்கு தேடுவாங்க. நான் டி.வி-யில பேசுறதையெல்லாம் மோடி பார்த்துட்டு இருப்பாரு. முதல்வர் பதவிக்கு எனக்கும் ஒரு சான்ஸ் இருக்குல்ல. அதுக்காகத்தான் இப்படி கம்பு சுத்துறேன். எடப்பாடியே முதல்வராகும்போது நான் ஆகக் கூடாதா?” என்று கூற, நண்பர்கள் வட்டாரம் கிறுகிறுத்துவிட்டதாம்!