‘‘முத்தலாக், என்.ஐ.ஏ, காஷ்மீர் என ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவின்படியே அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெறுகிறது. அடுத்து அயோத்தி வழக்கின் தீர்ப்பும் அதன்படியே வரப்போகிறது என்று 23.10.19 தேதியிட்ட இதழில் விரிவாக கட்டுரை வெளியிட்டிருந்தீர்கள். நீர் எழுதியிருந்தபடியே இப்போது அயோத்தி வழக்கின் தீர்ப்பும் வந்துவிட்டதே!’’ என்று சொன்ன கழுகார், அயோத்தி தீர்ப்பு தொடர்பாக இந்த இதழுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த கட்டுரைகளை ஆர்வமாக வாங்கிப் படித்தார்.

‘‘அயோத்தி தீர்ப்பு பற்றி நான் சொல்வதற்கு வேலை வைக்காமல், உமது நிருபர்களே விலாவரியாக எழுதிவிட்டார்கள். நாம் மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவோம்’’ என்றவரிடம், ‘‘திடீரென்று, ‘எனக்கு காவிச்சாயம் பூச வேண்டாம்’ என்று ரஜினி பன்ச் அடித்திருக் கிறாரே?’’ என்றோம்.

‘‘நாம் ஏற்கெனவே பேசியதுதான்... அவருக்கு பி.ஜே.பி பக்கம் சாய விருப்பமில்லை. அதை இப்போது அறிவித்தும்விட்டார். ஆனால், இந்த முடிவை அவர் எடுப்பதற்கு முன்னால் பெரும் தடுமாற்றத்தில்தான் இருந்திருக்கிறார். கமலின் ‘திரையுலகில் 60-ம் ஆண்டு விழா’வில் கலந்துகொள்ள வந்தபோதுதான் கமலுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார். கமல் கொடுத்த தைரியத்தில்தான், ‘காவிக்குள் நான் சிக்கமாட்டேன்’ என்று அதிரவிட்டிருக்கிறார் என்கிறார்கள்.’’

‘‘ஆடுபுலி ஆட்டம் பார்ட் 2-வா?’’

‘‘ஆமாம்! ரஜினியை பி.ஜே.பி பக்கம் சாயவிடக் கூடாது என்று நீண்ட நாள்களாகவே கமல் காய்நகர்த்தி வந்தார். சந்திப்பு நடந்த அன்று ‘பி.ஜே.பி-க்குத் தமிழகத்தில் செல்வாக்கு கிடையாது. நாடு இப்போது போகும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவதும் சந்தேகம்தான். நீங்கள் துணிந்து முடிவு எடுங்கள். உங்கள் பின்னால் நான் நிற்கிறேன். நான் கட்சி ஆரம்பித்து பி.ஜே.பி-யை எதிர்த்துதான் களமாடி வருகிறேன். என்னை என்ன செய்தார்கள்? நீங்கள் விரைவில் கட்சியை ஆரம்பியுங்கள். இணைந்து பணியாற்றலாம். பி.ஜே.பி-க்கு எதிராக வலுவான அணியைக் கட்டமைப்போம்’ என்று கமல் சொன்னதை ரஜினி அப்படியே உள்வாங்கிக் கொண்டாராம்்.’’

‘‘ஓ!’’

‘‘தனக்கு நெருக்கமானவர்களிடம் இதுபற்றி மனம் திறந்து பேசிய ரஜினி, ‘கமலின் கருத்தை ஒதுக்கிவிட முடியாது. தமிழகத்தில் பி.ஜே.பி-யுடன் இணைந்து அரசியல் செய்வது தற்கொலைக்குச் சமமானது. ஆனால், அந்தத் தரப்பிலிருந்து எனக்கு அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நான் நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்த அழுத்தம் என்றால், கட்சி ஆரம்பித்தால் நிலைமை எப்படியிருக்குமோ?’ என்று நொந்துபோய் சொன்னாராம்.’’

‘‘நண்பர்கள் என்ன சொன்னார்களாம்?’’

‘‘அவர்கள், ‘சட்டமன்றத்தேர்தலுக்கு குறுகிய காலம்தான் இருக்கிறது. இப்போது கட்சியை ஆரம்பித்தால்தான், தேர்தல் களத்தில் தாக்குப்பிடிக்க முடியும். அரசியலோடு சினிமாவில் கோலோச்சிய எம்.ஜி.ஆரே கட்சி துவங்கி ஐந்தாண்டுகள் கழித்தே ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. நாமும் கட்சியைத் துவக்கியதும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எண்ணக் கூடாது’ என்று சொல்ல அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம்.’’

‘‘பி.ஜே.பி-க்கு எதிராக ரஜினி கொடுத்த ரியாக்ஷனுக்கு எடப்பாடியின் கருத்தைக் கவனித்தீரா?’’

‘‘சரியான தலைமை இல்லை என்று ரஜினி சொன்னதும் ‘காம்பவுண்ட் வாசலில் நின்று அரசியல் செய்பவர் களத்துக்கு வரட்டும்’ என்று எடப்பாடி உஷ்ணமாகச் சொன்னதைத்தானே சொல்கிறீர்? இதுவரை ரஜினியை நேரடியாக அ.தி.மு.க இப்படி விமர்சித்தது இல்லை. பி.ஜே.பி-க்கு நெருக்கமானவர் என்று அமைதி காத்தது அ.தி.மு.க தலைமை. ஆனால், பி.ஜே.பி-க்கு எதிராக கருத்துச் சொன்னதும் அ.தி.மு.க-வும் வாயைத் திறந்துள்ளது. இனி ரஜினி களத்துக்கு வந்தாக வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.’’

‘‘நீர் இப்படிச் சொல்கிறீர்... எடப்பாடியைச் சந்தித்தித் திருக்கிறாரே லதா ரஜினிகாந்த்?’’

‘‘ரஜினி பி.ஜே.பி-க்கு எதிராகக் கருத்துகளை முழங்கிக் கொண்டிருந்த அன்றுதான் எடப்பாடி-லதா சந்திப்பு நடந்திருக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை என்று லதா தரப்பில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே சில அரசியல் வி.ஐ.பி-க்களை லதா சந்தித்து வருகிறார். லதாவின் ரூட் தனி ரூட்டாக இருக்கிறதாம். அதற்கும் ரஜினி பேட்டிக்கும் தொடர்பில்லையாம்.’’

‘‘திடீரென ‘நான் சர்வாதிகாரியாக மாறுவேன்’ என்று கொந்தளித்திருக்கிறாரே ஸ்டாலின்?’’

‘‘பொதுக்குழுவில் பேசியதைச் சொல்கிறீரா? குறுநில மன்னர்களாக மாவட்டச் செயலாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று பொதுக்குழுவில் சிலர் புகைந்ததே அவரின் இந்த ஆக்ரோஷத்துக்குக் காரணம் என்கின்றனர். யாரும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்துச் செயல்பட வேண்டாம். தொண்டர்கள்தான் கட்சியின் அடித்தளம்’ என்று சீற்றமாகப் பேசியிருக்கிறார்.’’

‘‘எதற்காக இந்தச் சீற்றமாம்?’’

‘‘வழக்கமாக, பொதுக்குழுவில் மூத்த நிர்வாகிகள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இந்த முறை மேலும் பலருக்கு வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது.. சிவகங்கை மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் கட்சி நிர்வாகிகளை மதிப்பதே இல்லை’ என்று ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் ‘எங்கள் மாவட்டச் செயலாளரைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் பல ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறோம். ஆனால் புதிதாகக் கட்சிக்குள் வரும் பெண்களுக்கு சீட் வழங்குகிறார்கள்’ என்று பற்றவைத்திருக்கிறார்.’’

‘‘சபாஷ்!’’

‘‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் புகார் பட்டியல் வாசித்திருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகுதான், கடுமையாகப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அவர் பேசும்போது, ‘கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நமது வேட்பாளர்களுக்கு ஐம்பது லட்சம் கொடுக்கப்பட்டது’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் இப்படியா வெளிப்படையாகப் பேசுவது? ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகள் தர்மசங்கடத்தில் இருக்கிறார்களே என்று சிலர் முணுமுணுத்திருக்கிறார்கள்.’’

‘‘துரைமுருகன் ஏதாவது கலாய்த்திருப்பாரே?’’

‘‘ஆமாம். ‘கருணாநிதி காலத்தில்கூட இவ்வளவு பிரமாண்டமாக பொதுக்குழு நடந்ததில்லை. தலைவரை மிஞ்சிய தனயனாகிவிட்டார்’ என்றவர், ‘கடந்த தேர்தலில் நம் வெற்றியைப் பறித்தவர்களைக்கூட கூட்டணிக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பும் கொடுத்த ஸ்டாலினின் மாண்பைக் கண்டு வியக்கிறேன். அவர்களை இப்போது நாடாளுமன்றத்துக்கு அனுப்பி விட்டதால் இனிமேல் பிரச்னை இல்லை’ என்று வைகோவையும் நக்கலடித்திருக்கிறார்.’’

‘‘பொதுக்குழு ஏற்பாடுகள் நிஜமாகவே பிரமாண்டமாக இருந்ததாமே?’’

‘‘அதெல்லாம் உண்மைதான். ஆனால் அதுதான் பிரச்னையாகவும் மாறியிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் என்றால் அனைவருமே சமம் என்ற அடிப்படையில் ஒரே மாதிரியான இருக்கை போடப்படும். ஆனால், இந்த முறை முதல் வரிசைகளில் சோபாவுடன் தடுப்பும் போடப்பட்டிருந்தது. வெறும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சாதாரண நாற்காலியும் நிர்வாகிகளுக்கு சோபாவும் என்று பிரித்துக்காட்டியதை பலரும் ரசிக்கவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகியான ரகுமான்கானுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. நீண்ட நேர திண்டாட்டத்துக்குப் பிறகு பிளாஸ்டிக் சேரைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். ஆனால், சேலத்தைச் சேர்ந்த பெண் பேச்சாளர் ஒருவர் முதல் வரிசையில் ஜம்மென்று உட்கார்ந்திருந்தார். உதயநிதியை மேடையேற்றலாம் என்று பேச்சு எழுந்திருக்கிறது. அதை அவர் தவிர்த்துவிட்டாராம். ‘இந்தப் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் வசம் இருந்த அதிகாரங்கள் தலைவர் வசம் மாற்றப்பட்டுள்ளன.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆளுங்கட்சி வேகமாகத் தயாராகி வருகிறதே?’’

‘‘மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம், வேட்பாளர் விருப்ப மனுக்கான தொகை என்று அறிவிப்புகளை வரிசையாக வெளியிட்டுள்ளனர். நவம்பர் 26-ம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்பதால் இந்த அவசரம் என்கிறார்கள். கூட்டணிக்கட்சிகளுடன் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதன் எதிரொலியாகத்தான் நவம்பர் 11-ம் தேதி நடந்த தி.மு.க மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தே தீவிரமாக ஆலோசனை செய்திருக்கிறார்கள். அதே சமயத்தில், புதிய மாவட்டங்கள், புதிய மாநகராட்சிகளை வரையறை செய்ய வேண்டும் என்று காரணம் காட்டி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த மீண்டும் காலஅவகாசம் கேட்டு ஒரு பெட்டிஷன் தயாராகிக்கொண்டிருப்பதாகவும் தகவல்’’ என்ற கழுகார் சிறகை விரித்தார்.

ஒரு அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் டி.என்.சேஷன். இறுதிக் காலம் வரை ஆட்சியாளர்களிடம் சமரசமற்ற ஓர் அதிகாரியாகச் செயல்பட்டவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். கடந்த 1955-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற சேஷன், முதலில் உதவி கலெக்டராக திண்டுக்கல்லில் பணியமர்த்தப்பட்டார். பின்னர், மாநில மற்றும் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பதவி வகித்தார். 1990 முதல் 1996 வரையில் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய சேஷன், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

சட்டப்படி தேர்தல்கள் நடைபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சேஷன், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட அன்றைய மத்திய அமைச்சர்கள் சீதாராம் கேசரி, கல்பனாத் ராய் ஆகியோரைக் கடுமையாக எச்சரித்தார். சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறார் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தபோதிலும், தன் நடவடிக்கைகளிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. 1996-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னையில் குடியேறிய சேஷன், நவம்பம் 10-ம் தேதி சென்னையில் காலமானார்.

இரும்புத்திரை காஷ்மீர் தொடர் அடுத்த இதழில்...