Published:Updated:

மோடியிடம் பாராட்டுப் பெற்ற வேலூர் கணியம்பாடி கிராமப் பெண்கள்!

17 -வது மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு முதன்முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார் பிரதமர் மோடி

மோடி
மோடி

பிரதமர் மோடி மன் கி பாத் (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சியின் வழியே அவ்வப்போது உரையாடுவார். அவரது சமீபத்திய மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழக கிராமம் ஒன்றை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

மோடி
மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் நிலத்தடி நீர்வளம் பற்றிப் பேசியபோது வேலூர் கணியம்பாடி குறித்துப் பேசினார். வேலூர் மாவட்டம், கணியம்பாடி வட்டாரத்தில் நாக நதியில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி வட்டாரத்தில் நாக நதியில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்வழிப் பாதையில் ஓடையின் குறுக்கே100 மீட்டர் இடைவெளியில், 6 அடி அகலம், 15 அடி நீளம், 20அடி ஆழத்துக்கு இந்தக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓடையில் வரும் மழைநீரை தடுத்து செறிவூட்டும் கிணறுக்குள் அனுப்ப தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

மோடி
மோடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ஊரக வளர்ச்சியின் முகமையின் கீழ் 20,000 பெண்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தின் பல வட்டாரங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது எனப் பாராட்டு தெரிவித்தார்.