Published:Updated:

சீனாவின் ஆசிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மோடியின் ராஜதந்திர முயற்சிகள்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பல விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு எதிராகவே செயல்படும் சீனாவை, கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற மோடியின் ஒரு திட்டம்தான் மாமல்லபுரம் சந்திப்பு

இந்தியச் சமுத்திரத்துடன் கிழக்கு ஆசிய நாடுகளையும் ஆளுமை செய்த பல்லவ மண்ணில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தியா - சீனா தலைவர்களின் சந்திப்பு. இருதரப்புக்கும் இடையே கசப்பான பல சம்பவங்கள் இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தெற்கு ஆசியாவின் நிரந்தர சக்தி இந்தியாதான் என்பதை சீனாவுக்கு மோடி புரியவைக்க முயலும் சர்வதேச ராஜதந்திரமே இந்தச் சந்திப்பு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்! விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2q2hMJC

இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். சீனாவுடனான பிரச்னைகளைப் பட்டியலிட்டவர்கள், மோடியின் ராஜதந்திர முயற்சிகளாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

1980-களில் தெற்கு ஆசியாவின் அரசியலை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும் என்ற கனவுடன் ராஜீவ் காந்தி செயல்பட்டார்.

''பல விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு எதிராகவே செயல்படும் சீனாவை, கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற மோடியின் ஒரு திட்டம்தான் மாமல்லபுரம் சந்திப்பு. சீனாவின் பொருளாதாரத் தேவைகளுக்கும் ராணுவ ஒத்துழைப்புக்கும் இந்தியா அவசியம் என்பதை சீன அதிபருக்கு மோடி புரியவைக்க முனைகிறார். இந்திய நிறுவனங்களுக்கு சீனச் சந்தையைத் திறந்துவிடுவதால் 87 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் 6.18 லட்சம் கோடி ரூபாய்) இருக்கும் இருநாட்டு வர்த்தகம், மேலும் வளர்ச்சியடையும். பிரதிபலனாக, சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மாமல்லபுரம் சந்திப்பு முடிந்த பிறகு, அக்டோபர் 31-ம் தேதி பாங்காக்கில் 35-வது ஆசியான் பொருளாதார உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் மோடி, ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மாமல்லபுரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆசியான் மாநாட்டில் பிரதிபலிக்கும்" என்றனர்.

"இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் சீனாவுக்கு ஏன் இந்தியா முக்கியத்துமளிக்க வேண்டும்?" என்று முன்னாள் 'ரா' உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

''1980-களில் தெற்கு ஆசியாவின் அரசியலை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும் என்ற கனவுடன் ராஜீவ் காந்தி செயல்பட்டார். இந்தியப் பெருங்கடலின் நிகரில்லாத ஆளுமையாக இந்தியா இருக்க வேண்டும் என்பது ராஜீவ் காந்தியின் கனவு. இதற்காக பல சர்வதேச நாடுகளையும் பகைத்துக்கொண்டார். மோடியின் திட்டமும் அதேதான். ஆனால், வழிமுறைதான் மாறியுள்ளது. பொருளாதார, ராணுவ ஒத்துழைப்பு என இரண்டு வழிகளில் சீனாவின் ஆசிய ஆதிக்கத்தை இந்தியா கட்டுப்படுத்தப் பார்க்கிறது" என்றனர்.

- சீனாவுடனான பிரச்னைகள் என்னென்ன? | ஐ.நா-வில் நிரந்தர உறுப்பினராகுமா இந்தியா? | சீனாவின் தேர்வே மாமல்லபுரம் | சீன மார்க்கெட்டைப் பிடிக்கவே சந்திப்பு... இப்படி பல கோணங்களை விவரிக்கும் ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > மோடி தர்மர் - பட்டுப்பாதை விரிக்கும் இந்தியா... வழிக்கு வருமா சீனா? https://www.vikatan.com/government-and-politics/politics/discuss-about-modi-and-xi-jinping-meeting

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு