சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில், மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். மும்பையில் செட்டிலான புதுக்கோட்டைக்காரர். தொகுதியில் அவரை ‘கேப்டன்’ தமிழ்ச்செல்வன் என்று அழைக்கிறார்கள் மக்கள். சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த இவரின் மகள் திருமணத்தில் மகாராஷ்டிர முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்துகொண்டதிலிருந்தே இவரின் செல்வாக்கை அறியலாம். அவரிடம் உரையாடினோம்.

“உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?”

“புதுக்கோட்டை கறம்பக்குடி பக்கத்துல இருக்கிற பிலாவிடுதி கிராமம்தான் என் சொந்த ஊர். எந்த வருஷம்னு சரியா நினைவு இல்லை. வேலைக்காக துபாய் போக ஒரு புரோக்கர்கிட்ட பணம் கொடுத்தேன். ‘நேரா மும்பை விக்டோரியா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடு. நான் உன்னை பிக்கப் பண்ணிக்கி றேன்’னு சொன்னார். ரயில் ஏறி மும்பை வந்தேன். ஆனா, அந்த புரோக்கர் வரலை. இப்ப மாதிரி அப்ப என்ன செல்போனா இருந்தது? விக்டோரியா ரயில்வே ஸ்டேஷன் லயே மூணு நாளு காத்துக் கிடந்தேன். அவர் வரவே இல்லை. அப்புறம்தான் அவர் என்னை ஏமாத்தினது தெரிஞ்சது.

ஏமாந்த இடத்திலிருந்தே வாழ்க்கையைத் தொடங்க முடிவுபண்ணேன். அதே இடத்துல தொழிலை ஆரம்பிச்சேன். வேறென்ன... போர்ட்டர் பொழப்புதான். கொஞ்ச நாள்லயே எல்லாம் பிடிபட ஆரம்பிச்சது. ஏரியா ஆளுங்ககிட்டல்லாம் நல்ல பழக்கம் ஏற்பட்டுச்சு. எங்க ஏரியா தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்னைன்னாலும் முன்னாடி போய் நின்னேன். ஒருகட்டத்துல அங்க இருக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்தாங்க.

அந்தக் காலகட்டத்துல தமிழர்கள்மீது அடிக்கடி தாக்குதல் நடக்கும். நான் அப்ப ஏரியாவுல ஒரு குட்டித் தலைவரா ஃபார்ம் ஆகியிருந்தேன். தாராவி, அன்டாப் ஹில், சயான் கோலிவாடா ஏரியா தமிழர்கள் எல்லோரும் பாதுகாப்பு தேடி நம்மகிட்டதான் வருவாங்க.

1993-ல நடந்த மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம், மறக்க முடியாத ரணங்களை ஏற்படுத்துச்சு. கூட பழகினவங்க நிறைய பேர் அந்தச் சம்பவத்துல இறந்துட்டாங்க; காயமடைஞ்சவங்களை தள்ளுவண்டியில ஏத்திக்கிட்டுப் போய் மருத்துவமனைகள்ல சேர்த்தோம். அதுக்கு அப்புறம்தான் சாமானிய மக்களைப் பாதுகாக்கணும்னா அரசியல் பின்னணி தேவைன்னு தோணுச்சு. அப்படியே சமூகப் பணி செய்ய ஆரம்பிச்சேன். அதுக்கு, மகாராஷ்டிர அரசின் விருதுகளும் கிடைச்சது.

பத்து வருஷத்துக்கு முன்னாடி பா.ஜ.க-வுல சேர்ந்தேன். 2014, மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்ல மும்பை சயான் கோலிவாடா தொகுதியில கட்சி சார்புல போட்டியிட்டேன். முதல் முறையிலேயே மக்கள் என்னை ஜெயிக்கவெச்சாங்க. இந்த முறையும் மக்கள் என்னை அங்கீகரிச்சிருக்காங்க.”

“சினிமாவில்தான் இப்படியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்... அப்படி என்ன சமூகப்பணி செய்தீர்கள்?”

“மருத்துவப் பணிகள் நிறைய செய்றோம். 1993 குண்டுவெடிப்பின் போது தொடங்கிய மருத்துவப் பணி அது. ஏழைகளுக்கு இலவச மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்துறோம். நேத்துகூட ஒரு பகுதியில டெங்கு அதிகமா பரவுதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு அங்க மருத்துவ முகாம் போட்டுட்டேன். டெங்கு இருப்பதைக் கண்டுபிடிக்க புதுக்கருவி வந்திருக்குன்னு சொன்னாங்க. ரத்தத்தை அந்தக் கருவியில வெச்சா 25 நிமிஷத்துல டெங்கு இருக்கா, இல்லையான்னு அந்தக் கருவி கண்டுபிடிச்சுடும். அந்தக் கருவியை உடனே வாங்கிட்டேன். தவிர, மக்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா நான்தான் முதல் ஆளா நிப்பேன். என் வெற்றிக்கு இதுதான் காரணம்.”

“மகாராஷ்டிரத்தில் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் எப்படியிருக்கு?”

“உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் ஊர், மும்பை. எந்த வேலை செஞ்சாலும் அதுல உண்மையா இருந்தோம்னா மும்பையில சுலபமா ஜெயிச்சுடலாம். இந்தியாவிலேயே மும்பையிலதான் தமிழர்கள்கிட்ட ஒற்றுமை அதிகம். இங்கே சாதிச்சங்கங்கள் இருக்குதுதான். ஆனா, வெறிபிடிச்சு சண்டைபோட்டுக்க மாட்டாங்க. பெரிய நிறுவனங்கள்ல தலைமைப் பதவியில நம்ம ஆளுங்கதான் இருக்காங்க. தொழிலதிபர்களும் நிறைய பேர் இருக்காங்க. ஸ்கூல், காலேஜ் எல்லாம்கூட தமிழர்கள் நடத்துறாங்க.’’

“மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறதே?”

‘‘சிவசேனா கட்சி, வெறும் 56 எம்.எல்.ஏ-க்களை வெச்சுக்கிட்டு முதல்வர் பதவிக்கு ஆசைப்படுறது நியாயமா? அவங்க எப்பவுமே இப்படி பிரச்னை பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க. நாங்கதான் திரும்பவும் ஆட்சியமைப்போம்.”

“தமிழ்நாட்டில் பா.ஜ.க வெற்றி பெற முடியும்னு நினைக்கிறீர்களா?”

“காலம் மாறிட்டே வருதுங்க. திராவிடக் கட்சிகளின் வேஷம் தமிழகத்துல இனி எடுபடாது. ஏராளமான நல்ல பல திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துகிட்டேயிருக்கு. திராவிடக் கட்சிகள்தான் பா.ஜ.க-வைப் பார்த்து `அது பிராமணர் கட்சி; பணக்காரங்க கட்சி’னு பொய்ப் பிரசாரம் பண்றாங்க. பா.ஜ.க ஏழைகளுக்கான கட்சி. வரும் சட்டமன்றத் தேர்தல்ல தமிழகத்துல பா.ஜ.க கணிசமான இடங்களைப் பிடிக்கும்.”

“தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்தி எதிர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“எனக்கு எங்க அப்பா வெச்ச பெயர் பன்னீர்செல்வம். நான் ஆறாவது படிக்கும்போதே தமிழ் மொழிமீது ஒரு பற்று. அதனாலேயே என் பெயரை `தமிழ்ச்செல்வன்’னு மாத்திக்கிட்டேன். அந்தளவுக்கு தமிழ்ப் பற்றுள்ள நானே கேட்கிறேன்... ஒரு மொழி கத்துக்கிறதுல என்னங்க தப்பு? ஒரு மொழியைத் திணிக்கிறது எப்படி தப்போ, அப்படித்தான் ஒரு மொழியைக் கத்துக்காதேனு சொல்றதும் தப்பு. மும்பை மாதிரியான ஊர்கள்ல இந்தி தெரியாம நம்ம பசங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. தாய்மொழிப் பற்றுங்கிறது ரத்தத்துலேயே ஊறிய விஷயம். அதேசமயம் இந்தி கத்துக்கிட்டா தாய்மொழி அழிஞ்சிடும்னு சொல்றது மடத்தனம்.’’

“தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தினரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவருவது பற்றி உங்கள் கருத்து என்ன?”

“நம் முன்னோர்கள் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’னு சொல்லியிருக்காங்க. தமிழர்களான நாம, வாழ்வு தேடி பல நாடுகளுக்குப் போறோம். அப்படித்தான் இப்போ வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வர்றாங்க. அவங்களை சகமனிதர்களா மதிக்கணும்.”