புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்காக 12 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்த தொழிலதிபர், நிலத்தைத் திரும்பக் கேட்டிருப்பது கரூர் மாவட்டத்தில் பெரும்சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ‘இதன் பின்னணியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருக்கிறார்’ என்று எதிர்க்கட்சிக்காரர்கள் குற்றம்சாட்டுவதால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

தற்போது கரூர் நகரின் மையப்பகுதியில் பேருந்துநிலையம் அமைந்துள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவருவதால், ‘பேருந்துநிலையத்தை இடம் மாற்ற வேண்டும்’ என்று பல ஆண்டுகளாகவே பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவைத்தனர். 28.12.2012 அன்று, ‘கரூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும்’ என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்துதான், பேருந்துநிலையம் அமைப்பதற்காக தனது 12 ஏக்கர் நிலத்தை தானமாக அளிக்க முன்வந்தார் தொழிலதிபர் ‘அட்லஸ்’ நாச்சிமுத்து.

கரூர் நகரையொட்டி இருக்கும் திருமாநிலையூரில் உள்ள அந்த நிலத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்து, பேருந்துநிலையம் அமைக்க முடிவுசெய்தனர். அதன் பிறகு, 20.06.2013 அன்று இதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. 07.10.2013 அன்று, நிலத்தை நகராட்சிக்கு தானமாக எழுதிக் கொடுத்தார் நாச்சிமுத்து. ஆனால், இன்று வரை அந்த இடத்தில் பேருந்துநிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், தாந்தோணியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ‘இடம் தேர்வுசெய்தும் பேருந்துநிலையம் அமைக்காமல் நகராட்சி அதிகாரிகள் தாமதப்படுத்துகிறார்கள்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். அந்த வழக்கு விசாரணையின்போதுதான், நிலத்தை நாச்சிமுத்து திரும்பக் கேட்டிருக்கிறார்.

இந்த விவகாரம்குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியிடம் பேசினோம்.

‘‘தானாக முன்வந்து தானமாக எழுதிக் கொடுத்த இடத்தை அட்லஸ் நாச்சிமுத்து திரும்பக் கேட்டிருப்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அவருக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தில், ‘ஐந்து ஆண்டுகளில் பேருந்துநிலையம் அமைக்கப்படும். அதற்குமேல் காலதாமதமானாலும், அங்கு கண்டிப்பாக பேருந்துநிலையம் அமைக்கப் படும்’ என்ற வாசகங்கள் உள்ளன. அந்த இடத்தைத் திரும்ப எடுத்துக்கொள்வதற்கான நிபந்தனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்கும் போது, 04.12.2017 அன்று நிலத்தைத் திரும்பக் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் நாச்சிமுத்து. இதன் பின்னணியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருக்கிறார் என நாங்கள் சந்தேகப்படுகிறோம்” என்றவர், அதற்கான பின்னணி விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

“இந்த இடத்தில் பேருந்துநிலையம் வருவதில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விருப்பமோ லாபமோ இல்லை. அதனால்தான், மதுரை பைபாஸ் அருகே உள்ள சுக்காலியூரில் புதிய பேருந்துநிலையத்தை அமைக்க அமைச்சர் முயல்கிறார். ஏனென்றால், அங்குதான் அவர் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கியுள்ளார். அங்கு பேருந்துநிலையத்தை அமைத்தால், அவருடைய நிலங்களின் மதிப்பு பலமடங்கு உயரும். அதற்காகவே ‘அட்லஸ்’ நாச்சிமுத்துவை மிரட்டி, நிலத்தைத் திரும்பக் கேட்க வைத்துள்ளார். நாங்கள் சட்டரீதியாகப் போராடி, திருமாநிலையூரிலேயே பேருந்துநிலையம் அமைக்க வைப்போம்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ‘‘தானமாகப் பெற்ற நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்ட பிறகும், தன் சுயலாபத்துக்காக வேறு ஓர் இடத்தில் பேருந்துநிலையம் அமைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. நாச்சிமுத்துவை மிரட்டியே நிலத்தைத் திரும்பக் கேட்க வைத்துள்ளனர். நாச்சிமுத்து, இதுபோல பல நிலங்களை தானமாகக் கொடுத்துள்ளார். கொடுத்த நிலங்களை எக்காரணத் துக்காகவும் அவர் திரும்பக் கேட்டதில்லை. தற்போது அவர் கேட்டிருப்பது இதுதான் முதல் முறை. கரூர் நகருக்கு அருகில் இருக்கும் திருமாநிலையூரில் பேருந்துநிலையம் அமைத்தால்தான் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்’’ என்றார்.

தொழிலதிபர் நாச்சிமுத்துவிடம் இதுகுறித்துப் பேச நேரில் சென்றோம். சந்திக்க மறுத்துவிட்டார். செல்போனிலும் பலமுறை தொடர்புகொண்டோம். ‘‘இந்த நில வழக்கு விஷயம் தொடர்பாக அவர் யாரிடமும் பேச விரும்பவில்லை’’’ என்று அவரின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, ‘‘நாச்சிமுத்து நிலத்தைத் திரும்பக் கேட்பதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏன் திரும்பக் கேட்கிறீர்கள் என நாச்சிமுத்துவிடம்தான் கேட்க வேண்டும். என்மீது இவர்கள் சொல்வதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டுகள். புதிய பேருந்துநிலையம் விரைவில் அமைக்கப்படும்’’ என்றவரிடம், ‘‘எந்த இடத்தில் அமைக்கப்படும்?’’ என்று கேட்டோம்., அதற்கு அவர் பதில் சொல்லவேயில்லை.

மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரவர்க்கம் விளையாடுவது அழகல்ல!